search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inquiry"

    • இந்து சமய அறநிலையத்துறை பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
    • வழக்கு விசாரணையை 4 வாரத் திற்கு ஒத்திவைத்தனர்.

    மதுரை

    மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ராம லிங்கம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:-

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையின் மேல் காசி விஸ்வநாதர் கோவிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளன. இந்த நிலையில் மலைக்கு போகும் பாதையில் நெல்லித்தோப்பு எனும் பகுதியில் ரம்ஜான் மாதங்களில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் செய்ய தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், "மலைக்கு மேல் தானே தர்காவும் அமைந்துள்ளது. அரை மணி நேரம் தொழுகை நடத்துவதால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடாது என கருத்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வாரத் திற்கு ஒத்திவைத்தனர்.

    • ரவி ஊரணி கிணற்றில் கால் கழுவ சென்றுள்ளார்.
    • திடீரென நிலை தடுமாறிய அவர், கிணற்று நீரில் விழுந்து மூச்சுத் திணறி இறந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் தெற்குவீதியியை சேர்ந்தவர் ரவி (வயது 55). விவசாயி. இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி சென்னையில் தனித்தனியே வசித்து வருகின்றனர். இவரது மகன் கார்த்திக் (35) வீட்டில் இவரது மனைவி தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்ற ரவி, அருகில் இருந்த ஊரணி கிணற்றில் கால் கழுவ சென்றுள்ளார். அப்போது திடீரென நிலை தடுமாறிய அவர், கிணற்று நீரில் விழுந்து மூச்சுத் திணறி இறந்தார். சிறிது நேரத்தில் தற்செயலாக அங்கு சென்ற கிராம மக்கள் இதனைக் கண்டனர். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் வினோ த்ராஜ் தலைமையிலான போலீசார் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்தியா பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
    • இன்ஸ்பெக்டர்நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணைதேடி வருகிறார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எஸ்.ஏரிப்பாளையம்கி ராமத்தை சேர்ந்தவர்ஏழுமலை. இவரது மகள் சந்தியா (17). இவர் பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டிலிருந்தவரை காணவில்லை பல இடங்களில் தேடி எங்கும்கிடைக்காததால் புதுப்பேட்டை போலீஸ் அவரது தாய் சரிதா புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.இன்ஸ்பெக்டர்நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணைதேடி வருகிறார்.

    • ராஜலிங்கம் தாலி செயினை அரசு வங்கியில் அடகு வைத்தார்.
    • வங்கி ஊழி யர்கள் அவரை வங்கியை விட்டு வெளி யேற்றிதாக கூறப்படுகிறது

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோயில் அருகே சம்பவ ராயபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம் மனைவி செல்வம் (வயது 60). இவர் 3 சவரன் தாலி செயினை காட்டுமன்னார் கோவிலில் உள்ள அரசு வங்கியில் அடகு வைத்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அடகுவைத்த தாலி செயினை மீட்பதற்காக மூதாட்டி வங்கிக்கு சென்றார். பின்னர் தாலி செயினை வாங்கி மூதாட்டி கொண்டுவந்த கைப்பையில் வைத்து வெளியே வந்தார். இதனையடுத்து மூதாட்டி செல்வம் சந்தேகத்தின் பேரில் பையை திறந்து பார்த்தார்.

    அப்போது பையில் வைத்திருந்த நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி வங்கி ஊழியர்களிடம் இதுகுறித்து தெரிவித் துள்ளார். இதனை கண்டு கொள்ளாத வங்கி ஊழி யர்கள் அவரை வங்கியை விட்டு வெளி யேற்றிதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மூதாட்டி காட்டு மன்னார் கோயில் போலீஸ் நிலை யத்தில் புகார் ெகாடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வங்கி மற்றும் அதன் அருகில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன நகை சுமார் 1.5 லட்சம் மதிப்பு ஆகும். பகல் நேரத்தில் வங்கியில் இருந்த மூதாட்டியின் நகை காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலூர் முதுநகரில் கல்லூரி மாணவி மாயமானார்.
    • பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் முதுநகரை சேர்ந்த கல்லூரியில்3-ம் ஆண்டு படித்து வரும் மாணவி சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கடலூர் அருகே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டரை கத்தியால் வெட்ட முயன்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் 2 வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த புதுக்கடை பகுதியில் 2 வாலிபர்கள் கையில் கத்தி வைத்துக் கொண்டு அனைவரையும் மிரட்டிக்கொண்டு இருந்ததாக ரெட்டிச்சாவடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் 2 வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவரை பணி செய்ய விடாமல் தடுத்து அவர்கள் வைத்திருந்த கத்தியால் வெட்ட முயன்றனர்.

    சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் சுதாரித்துக் கொண்டு 2 வாலிபர்களையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டார். இதில் அவர்கள் கடலூர் செல்லஞ்சேரியை சேர்ந்த தேவா ( 26), மரக்காணம் கூனிமேட்டை சேர்ந்த சுமன் (27) என்பது தெரியவந்தது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து தேவா மற்றும் சுமன் ஆகியோரை கைது செய்தனர். சப்- இன்ஸ்பெக்டரை கத்தியால்  வெட்ட முயன்ற சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நெடுஞ்சாலை உதவி பொறியாளர் எழிலரசி தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • மோகன் பாபு பணி செய்ய விடாமல் தடுத்து ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தொரப் பாடியில் நெடுஞ்சாலைத் துறையினரால் சேலம் - கடலூர் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. தொரப்பாடி குமரன் கோயில் தெரு முருகன் மகன் மோகன் பாபு (வயது 32) தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர். இவரது நிலத்தை அரசு கையகப் படுத்திக்கொண்டு அதற்குண்டான தொகையை அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் போலீசாருடன் நெடுஞ்சாலை உதவி பொறியாளர் எழிலரசி தலைமையில் ஆக்கிர மிப்பை அகற்றினர். அங்கு வந்த மோகன்பாபு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அசிங்கமாக திட்டி பணி செய்ய விடாமல் தடுத்து ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் நெடுஞ் சாலைத்துறை உதவி பொறியாளர் எழிலரசி புகார் செய்தார். அதன்பேரில் புதுப் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் பிரிவின் கீழ் மோகன்பாபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் அருகே தொட்டி பகுதியில் விவசாயி ஒருவரது கிணற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது
    • இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    கள்ளக்குறிச்சி:

     உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் அருகே தொட்டி பகுதியில் விவசாயி ஒருவரது கிணற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திருநாவலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் பாதுகாப்பு மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இறந்த நிலையில் மிகுந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணா தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது.
    • அரசு பள்ளியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணையை மேற்கொள்ள உள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து கடந்த 5 மாத காலமாக சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்து வருகின்றனர்.

    இதுவரை 147 நபர்களிடம் விசாரணை செய்து அவர்களின் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். இதில் 139 நபர்களின் டிஎன்ஏ இரத்த மாதிரி பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 10 நபருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. 10 நபர்களில் 3 பேர் மட்டுமே பரிசோதனைக்கு ஒப்பு கொண்டனர். மீண்டும் புதிதாக 10 நபருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்ற நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்ததில் வரும் திங்கட்கிழமை அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படவுள்ளது.

    இந்நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி முறையாக கையாளவில்லை என்று வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலவழக்கு தொடரப்பட்டது.

    அந்த பொது நலவழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணா தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. சத்திய நாராயணா தலைமையிலான ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து 2 மாத காலத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.

    உயர்நீதிமன்ற உத்தரவுபடி தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணா ஆய்வு செய்து வருகிறார். அவர் வேங்கைவயல் கிராமத்தில் மலம் கழித்த பழைய நீர் தொக்க தொட்டியை ஆய்வு செய்தார். தமிழக அரசு சார்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் நீர் தேக்க தொட்டியையும் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அங்கு உள்ள அரசு பள்ளியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணையை மேற்கொள்ள உள்ளார். இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.

    • மதுரை அருகே ரெயில் மோதி பலியான வாலிபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை- கீழ் மதுரை ரெயில் நிலையங்களுக்கு இடையே கடந்த 3-ந் தேதி இரவு தண்டவாளத்தை கடக்க முயன்ற 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார்? என்ற ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. வலது பக்க வயிற்றில் கருப்பு மச்சமும், வலது கால் முட்டிக்கு கீழ் பழைய காயத்தழும்பும், கருப்பு மச்சமும் காணப்படுகிறது. இதுகுறித்து மதுரை கிழக்கு கிராம நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த திருக்கோவிலூர் ருத்ரப்பநாயக்கன் தெருவை சேர்ந்த சுப்ரமணி சேகர் (வயது 67) என்பவரை போலீசார் கைது செய்தனர்
    • அவரிடம் இருந்து 600 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


    திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த திருக்கோவிலூர் ருத்ரப்பநாயக்கன் தெருவை சேர்ந்த சுப்ரமணி சேகர் (வயது 67) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1000 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். அதேபோல் திருக்கோவிலூர் பஸ் நிலையம் எதிரே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விட்டுக் கொண்டிருந்த திருக்கோவிலூர் லாலாதோப்பு தெருவை சேர்ந்த ராஜா (48) என்பவரையும் போலீசார் கைது செய்தனர. அவரிடம் இருந்து 600 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார் மற்றும் ராஜசேகரன் ஆகியோர் வழக்குபபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிகண்டன் (வயது 28) இவர் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
    • எனது தாய் ராணி (48) மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் மணிகண்டன் (வயது 28) இவர் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது, நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற எனது தாய் ராணி (48) மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே எனது தாயை கண்டுபிடித்து தருமாறு மனுவில் கூறியுள்ளார். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×