என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டுமன்னார்கோவில் அருகே  மூதாட்டியிடம் நகை அபேஸ்
    X

    காட்டுமன்னார்கோவில் அருகே மூதாட்டியிடம் நகை அபேஸ்

    • ராஜலிங்கம் தாலி செயினை அரசு வங்கியில் அடகு வைத்தார்.
    • வங்கி ஊழி யர்கள் அவரை வங்கியை விட்டு வெளி யேற்றிதாக கூறப்படுகிறது

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோயில் அருகே சம்பவ ராயபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம் மனைவி செல்வம் (வயது 60). இவர் 3 சவரன் தாலி செயினை காட்டுமன்னார் கோவிலில் உள்ள அரசு வங்கியில் அடகு வைத்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அடகுவைத்த தாலி செயினை மீட்பதற்காக மூதாட்டி வங்கிக்கு சென்றார். பின்னர் தாலி செயினை வாங்கி மூதாட்டி கொண்டுவந்த கைப்பையில் வைத்து வெளியே வந்தார். இதனையடுத்து மூதாட்டி செல்வம் சந்தேகத்தின் பேரில் பையை திறந்து பார்த்தார்.

    அப்போது பையில் வைத்திருந்த நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி வங்கி ஊழியர்களிடம் இதுகுறித்து தெரிவித் துள்ளார். இதனை கண்டு கொள்ளாத வங்கி ஊழி யர்கள் அவரை வங்கியை விட்டு வெளி யேற்றிதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மூதாட்டி காட்டு மன்னார் கோயில் போலீஸ் நிலை யத்தில் புகார் ெகாடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வங்கி மற்றும் அதன் அருகில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன நகை சுமார் 1.5 லட்சம் மதிப்பு ஆகும். பகல் நேரத்தில் வங்கியில் இருந்த மூதாட்டியின் நகை காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×