search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேங்கைவயல் வழக்கு"

    • தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
    • கூடுதல் அவகாசம் கோரி சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    இதைதொடர்ந்து, கூடுதல் அவகாசம் கோரி சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

    இந்நிலையில், வேங்கைவயல் சம்பவம் தொடர்பான விசாரணையை முடிக்க சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணா தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது.
    • அரசு பள்ளியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணையை மேற்கொள்ள உள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து கடந்த 5 மாத காலமாக சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்து வருகின்றனர்.

    இதுவரை 147 நபர்களிடம் விசாரணை செய்து அவர்களின் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். இதில் 139 நபர்களின் டிஎன்ஏ இரத்த மாதிரி பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 10 நபருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. 10 நபர்களில் 3 பேர் மட்டுமே பரிசோதனைக்கு ஒப்பு கொண்டனர். மீண்டும் புதிதாக 10 நபருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்ற நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்ததில் வரும் திங்கட்கிழமை அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படவுள்ளது.

    இந்நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி முறையாக கையாளவில்லை என்று வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலவழக்கு தொடரப்பட்டது.

    அந்த பொது நலவழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணா தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. சத்திய நாராயணா தலைமையிலான ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து 2 மாத காலத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.

    உயர்நீதிமன்ற உத்தரவுபடி தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணா ஆய்வு செய்து வருகிறார். அவர் வேங்கைவயல் கிராமத்தில் மலம் கழித்த பழைய நீர் தொக்க தொட்டியை ஆய்வு செய்தார். தமிழக அரசு சார்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் நீர் தேக்க தொட்டியையும் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அங்கு உள்ள அரசு பள்ளியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணையை மேற்கொள்ள உள்ளார். இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.

    ×