search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "home robbery"

    திருப்பூரில் பனியன் வியாபாரி வீட்டில் நகை-பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் முத்தண்ணம் பாளையம் சபரி பிரியா நகரை சேர்ந்தவர் ஸ்ரீநாத். பனியன் வியாபாரி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

    இந்நிலையில் இன்று காலை அவரது வீடு திறக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவர்கள் நல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது வீடுகளில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன.

    இது குறித்து கேரளாவில் உள்ள ஸ்ரீநாத்துக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு விபரம் தெரிவிக்கப்பட்டது. நகை- பணம் வைக்கப்பட்டிருந்ததா? என்று போலீசார் கேட்டபோது நகை- பணம் இருந்தது என்று கூறினார். ஸ்ரீநாத் திருப்பூர் விரைந்துள்ளார். அவர் வந்த பின்னரே திருட்டுபோன நகை- பணம் குறித்து விபரம் தெரியவரும்.

    தஞ்சை அருகே 2 வீடுகளில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரோடு கார்முகில் நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 67). இவர் கடந்த 23-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு அய்யன் திருவள்ளுவர் தெருவில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    பின்னர் நேற்று மாலை அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 25 பவுன் நகை கொள்ளை போய் இருந்ததை கண்டு திடுக்கிட்டார். பூட்டி கிடந்த வீட்டை நோட்டமிட்டு மர்ம கும்பல் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளது தெரிய வந்தது. இதுபற்றி ஷாஜகான், தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் கொள்ளை நடந்த வீட்டுக்கு மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    தஞ்சை கூட்டுறவு காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 69). இவர் சென்னையில் போலீஸ் உதவி கமி‌ஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    தற்போது அவர் சென்னையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இதனால் தஞ்சையில் உள்ள வீட்டை அவரது மகள் அபிராமி அவ்வப்போது வந்து பார்த்து விட்டு செல்வது வழக்கம். அபிராமி, திருச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று தஞ்சை கூட்டுறவு காலனியில் உள்ள தந்தை வீட்டை அபிராமி பார்வையிட வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.45 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி அவர் மருத்துவக் கல்லூரி போலீசில் புகார் செய்சார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    தஞ்சை நகரில் 2 வீடுகளில் நகை- பணம் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராயபுரத்தில் கியாஸ் கம்பெனி ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    ராயபுரம் கிரேஸ் கார்டன் 5-வது தெருவை சேர்ந்தவர் நதியா. இவரது கணவர் கியாஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மாலை நதியா உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டார்.

    அப்போது நகைகளை எடுக்க பீரோவை திறந்தார். ஆனால் பீரோவில் வைத்திருந்த 60 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் மற்றொரு பீரோவில் இருந்து 15 பவுன் நகை, ரூ.45 ஆயிரம் பணம் அப்படியே இருந்தது.

    இதுகுறித்து நதியா ராயபுரம் போலீசில் புகார் செய்தார். பீரோவை உடைக்காமல் நகைகள் திருடப்பட்டு இருப்பதால் நன்கு தெரிந்த நபர்கள்தான் கைவரிசையில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    திருப்பூரில் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர்-ஆண்டிபாளையம் சோதனை சாவடியில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களின் ஆவணங்களை சோதனையிட்டனர். அவர்களின் நடவடிக்கை குறித்து சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த ஆஷிக்அலி (வயது 19) மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ரத்தினமுத்து (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இவர்கள் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந்தேதி திருப்பூர் மங்கலம் ரோடு ஜான் ஜோதி கார்டன் பகுதியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (52) என்பவரின் வீட்டில் புகுந்து, அவருடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த 2½ பவுன் நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2½ பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர்.

    புதுவண்ணாரப்பேட்டையில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.2½ லட்சம்-நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    புதுவண்ணாரப் பேட்டை, ஜீவா நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் முருகானந்தம். கட்டிட காண்டிராக்டர்.

    இவர் கடந்த 18-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்சியில் உள்ள கோவிலுக்கு சுற்றுலா சென்றார். இன்று காலை திரும்பி வந்தபோது வீட்டின் ஜன்னல் கம்பி உடைந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.2½ லட்சம் ரொக்கம், 6 பவுன் நகை கொள்ளை போய் இருந்தன.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை-பணத்தை சுருட்டி சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாதவரத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாதவரம்:

    மாதவரம் பால் பண்ணை சி.கே.எம். காலனியைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி சரளா. ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்.

    கணவன்-மனைவி இருவரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் கேரளா சென்றனர். இந்த நிலையில் அவர்களது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரும் மாயமாகி இருந்தது.

    சந்தேகம் அடைந்த அவர்களது உறவினர் மாதவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

    பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போய் இருந்தன. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் நகை- பணத்தை கொள்ளையடித்து காரையும் திருடி சென்றிருப்பது தெரிந்தது.

    போலீஸ் விசாரணையில் கொள்ளையர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றதும், அங்கு இருந்த சாவியை எடுத்து நகை-பணத்தை திருடியதும், வீட்டின் முன்பு நின்ற காரை திருடி சென்றதும் தெரியவந்தது.

    சோளிங்கர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த பாராஞ்சியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உமா (வயது 30). இவர் நேற்று மாலை வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க வீட்டை பூட்டி சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 12 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்று விட்டனர்.

    சிறிது நேரம் கழித்து விட்டிற்கு வந்த உமா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை கொள்ளை போனது தெரிய வந்தது.

    இது குறித்து உமா சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்ணமங்கலம் அருகே பூட்டிய வீட்டில் 20 பவுன் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு கேட் ரேணுகாம்பாள் நகரை சேர்ந்தவர் அமிர்தம்மாள் (வயது 70). நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு, ஊட்டியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றார்.

    இன்று அதிகாலை வீட்டுக்கு திரும்பி வந்தார். வீட்டின் பின்பக்க கிரில் கேட் உடைந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அமிர்தம்மாள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 சவரன் நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    கண்ணமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். ஆரணி டி.எஸ்.பி. செந்தில், இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    யாருமில்லாத வீடுகளை நோட்டமிட்டு திருடும் மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கோச்சடையில் பால்வாடி ஆசிரியை வீட்டில் நகை-பணம் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அச்சம்பத்து:

    மதுரை கோச்சடை கானை அம்பலக்காரர் தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 54). தெற்குவாசல் பகுதியில் பால்வாடி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று கல்யாணசுந்தரம் பழனி கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்றார். பின்னர் அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டார்.

    பட்டப்பகலில் வீடு பூட்டிக் கிடந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்குள்ள அறையில் வைத்திருந்த 31 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை அவர்கள் கொள்ளையடித்து தப்பினர்.

    இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நகை-பணம் கொள்ளை நடந்த பகுதி பரபரப்பான குடியிருப்பு பகுதியாகும். இங்கு பட்டப்பகலில் திருட்டு நடந்திருப்பது அங்கு வசிக்கும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    ஊத்துக்குளியில் அடுத்தடுத்து 3 கடைகளில் பொருட்கள் திருட்டு போனது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கூலிப்பாளையம் நால் ரோட்டில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் இயங்கி வருகிறது.

    நேற்று நள்ளிரவு இங்கு வந்த மர்ம நபர்கள் வணிக வளாகத்தில் இருந்த ஸ்டூடியோ, பியூட்டி பார்லர், பேன்சி கடை ஆகியவற்றின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கு வைக்கப்பட்டு இருந்த பணம், லேப்-டாப் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்று விட்டனர். இன்று அதிகாலை கடையை திறக்க வந்த ஊழியர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். திருட்டு போன பொருட்களின் மதிப்பு உடனடியாக தெரிய வில்லை.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நந்தனத்தில் மிளகாய் பொடி தூவி ரூ.4 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ஜாபர் சாதிக். இவர் தனது நண்பர் தமீம் அன்சாரியை நேற்று இரவு 10.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.

    நந்தனம் தேவர் சிலை அருகில் இருவரும் சென்று கொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து முகத்தில் மிளகாய் பொடி தூவியது.

    பின்னர் அவர்கள் வைத்திருந்த பணப் பையையும் வழிப்பறி கும்பல் பறித்தது. ஆனால் ஜாபர் சாதிக்கும், தமீம் அன்சாரியும் அவர்களோடு போராடினார்கள். இதையடுத்து ஹெல் மெட்டால் இருவரையும் தாக்கிய கொள்ளையர்கள் ரூ.4 லட்சம் பணத்தை பறித்து சென்றனர்.

    இதுபற்றி தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    கொள்ளை நடந்த இடத்தில் உள்ள கண் காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரூ.4 லட்சம் பணத்துக்கு போலீசார் கணக்கும் கேட்டு உள்ளனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் நடைபெற்ற துணிகர கொள்ளை சம்பவம் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    கும்மிடிப்பூண்டி அருகே வியாபாரி வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மகாலிங்க நகரில் வசித்து வருபவர் அல்லா பகாஷ்(வயது56). பட்டாசு வியாபாரியான இவர், மாந்திரீகம் தொழிலும் செய்து வருகிறார்.

    கடந்த ஜூன் மாதம், 26-ந்தேதி இவரது வீட்டின் முன்புறம் உள்ள சிமெண்ட் ஓடு போட்ட தனியறையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கு 2 பீரோக்களை உடைத்து அதிலிருந்த 50 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப்பணத்தை அள்ளிச்சென்றனர். . இது குறித்து இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக எளாவூர் அடுத்த தலையாரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் வேறுயாருக்கேனும் தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×