search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gummudipoondi"

    கும்மிடிப்பூண்டி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 4 வயது சிறுமி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தல் உள்ள தனியார் இரும்பு உருக்கு ஆலையில் வேலை பார்த்து வருபவர் ரஞ்சித்பிரசாத் (34).

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித்பிரசாத் தனது மனைவி கீதாதேவி (28) மற்றும் குழந்தைகளுடன் சிப்காட் அருகில் உள்ள பாப்பான்குளம் கிராமத்தில் வசித்து வருகிறார்.

    நேற்று காலை ரஞ்சித்பிரசாத் வேலைக்கு சென்றுவிட்டார். கீதாதேவி கடைக்கு சென்றார். குழந்தைகள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தன. கீதாதேவி வீடு திரும்பியபோது ரஜினிகுமாரி (4) என்ற பெண் குழந்தையை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியபோது சிறுமி ரஜினி குமாரி அருகில் தரையோடு தரையாக அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து கிடந்தது தெரிய வந்தது. உடனே அவளை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அந்த குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரஞ்சித் பிரகாஷ்- கீதாதேவி தம்பதியருக்கு 4 குழந்தைகள் இருந்தனர். அதில் ஒரு குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்தது. அந்த குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியது.

    கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிளோடு பள்ளத்தில் விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள பண்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர் காட்டையன் (வயது 43). சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற் சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    நேற்று இரவு, அவர் வேலை முடிந்து கவரைப்பேட்டை ரெயில் நிலையத்திற்கு காட்டையன் வந்தார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பண்பாக்கம் நோக்கி அவர் புறப்பட்டுச்சென்றார்.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து தச்சூர் வரை சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப்பணி மற்றும் பாலத்திற்கான கட்டுமான பணிகள் நடை பெறுவதால் ஆங்காங்கே சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன

    இந்த நிலையில், கவரைப்பேட்டை பழைய போலீஸ் நிலைய கட்டிடம் எதிரே மேம்பால பணி நடைபெறும் இடத்தில் இருந்து 600 மீட்டர் தொலைவில் சுமார் 15 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது.

    அந்த சாலையில் காட்டையன் வந்த போது தடுப்பு இல்லாததால் மோட்டார் சைக்கிளோடு தலைகுப்புற பள்ளத்தில் கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்து ஏற்பட்டது இரவு நேரம் என்பதால் இன்று அதிகாலை வரை காட்டையன் பலியாகி கிடப்பதை யாரும் கவனிக்க வில்லை. காலையில் விடிந்ததும் அவ்வழியாக சென்றவர்கள் இதனை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்துக்கு காரணமான சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனம் மீது கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

    வாகன போக்குவரத்தை மாற்றுவழியில் செல்லும் பணிக்காக பள்ளம் தோண்டிய இடத்தில் அறிவுறுத்தும் வகையில் எந்தவித தடுப்போ அல்லது முறையான அறிவிப்பு பலகையோ அப்பகுதிகளில் வைக்கப்படுவது இல்லை. 

    இதனால் இந்த பகுதிகளில் விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது என்று பொது மக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி அருகே வியாபாரி வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மகாலிங்க நகரில் வசித்து வருபவர் அல்லா பகாஷ்(வயது56). பட்டாசு வியாபாரியான இவர், மாந்திரீகம் தொழிலும் செய்து வருகிறார்.

    கடந்த ஜூன் மாதம், 26-ந்தேதி இவரது வீட்டின் முன்புறம் உள்ள சிமெண்ட் ஓடு போட்ட தனியறையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கு 2 பீரோக்களை உடைத்து அதிலிருந்த 50 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப்பணத்தை அள்ளிச்சென்றனர். . இது குறித்து இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக எளாவூர் அடுத்த தலையாரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் வேறுயாருக்கேனும் தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×