என் மலர்

  நீங்கள் தேடியது "train service impact"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறால் ஆலந்தூர் செல்லும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். #MetroTrain
  ஆலந்தூர்:

  சென்டிரலில் இருந்தும், தேனாம்பேட்டை டி.எம்.எஸ். ரெயில் நிலையத்தில் இருந்தும் மெட்ரோ ரெயில் விமான நிலையம் வரை சென்று வருகிறது.

  இந்த நிலையில், இன்று காலை 7 மணி அளவில் பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ஆலந்தூரில் இருந்து பரங்கிமலை வரை செல்லும் மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.

  இதனால் டி.எம்.எஸ்-ல் இருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரெயில் ஆலந்தூரிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து தொழில்நுட்ப நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

  அவர்கள் சிக்னல் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்துக்கு பிறகு சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டு மெட்ரோ ரெயில் வழக்கம் போல் ஓடியது. சிக்னல் கோளாறால் காலை 7 மணி முதல் 9 மணி வரை பரங்கிமலை-ஆலந்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். #MetroTrain
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கஜா புயல் கரையை கடந்த போது வீசிய பலத்த காற்றில் தண்டவாளத்தில் மரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.#GajaCyclone #TrainsCancel
  சென்னை:

  ‘கஜா’ புயல் காரணமாக நேற்று 3 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, வேளாங்கன்னி வழியாக செல்லக்கூடிய ரெயில்கள் நிறுத்தப்பட்டன.

  சென்னை எழும்பூரில் இருந்து நேற்று திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் விருதாச்சலம், திருச்சி வழியாக இயக்கப்பட்டன. திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு சென்னை வந்த ரெயில் இரவு தஞ்சாவூரில் நிறுத்தப்பட்டது.

  புயல் கரையை கடந்த போது வீசிய பலத்த காற்றில் தண்டவாளத்தில் மரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் கும்பகோணம் மார்க்கம் வழியாக சென்னைக்கு ரெயில்கள் இன்று இயக்கப்படவில்லை. ரெயில் பாதையை ஆய்வு செய்த பிறகு தான் அந்த மார்க்கமாக போக்குவரத்து தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

  இன்று காலையில் எழும்பூரில் இருந்து திருச்சிக்கு சோழன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் சிதம்பரம், கும்பகோணம் வழியாக செல்லாமல் வாழப்பாடி, விருத்தாச்சலம் வழியாக திருச்சி சென்றது.

  தஞ்சாவூரில் நிறுத்தப்பட்ட திருச்செந்தூர் ரெயில் மீண்டும் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டு விருத்தாச்சலம் வழியாக எழும்பூருக்கு இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தாமதமாக வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக காலை 11.15 மணிக்கு எழும்பூர் வந்து சேரக்கூடிய இந்த ரெயில் வரக்கூடிய நேரம் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் இன்று மாலை 4.05 மணிக்கு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் விருத்தாச்சலம் மார்க்கத்தில் இயக்கப்பட உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

  மேலும் இன்று இரவு தஞ்சாவூர், வேளாங்கன்னி புறப்படக்கூடிய ரெயில்கள் இயக்கப்படுமா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும் தென்மாவட்டத்தில் இருந்து எழும்பூர் வரக்கூடிய அனைத்து ரெயில்களும் இன்று வந்து சேர்ந்தன.

  இதேபோல கோவையிலிருந்து திருச்சி வழியாக மன்னார்குடிக்கு சென்ற செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.

  மதுரையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மணப்பாறை வையம்பட்டி அருகே வந்தபோது காலை 8.30 மணிக்கு மின்சாரம் கிடைக்காததால் நிறுத்தப்பட்டது.

  திருச்சியில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு சென்ற கரூர் பயணிகள் ரெயிலும் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. மதுரை-ராமேஸ்வரம், ராமேஸ்வரம்-மதுரை, திருச்சி-ராமேஸ்வரம், ராமேஸ்வரம்-திருச்சி இடையே ரெயில்கள் இன்று (16-ந்தேதி) ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டது. திருச்சி- மயிலாடுதுறை, தென்காசி பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. #GajaCyclone #TrainsCancel
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவில்பட்டியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மேலும் ஒரு இடத்தில் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் ரெயில் போக்குவரத்து 2-வது நாளாக பாதிக்கப்பட்டது. #TrainService
  கோவில்பட்டி:

  கோவில்பட்டி பகுதியில் நேற்று சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் கோவில்பட்டி அருகே வேலாயுதபுரம் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தின் மேல் சென்ற உயர் அழுத்த மின்கம்பி திடீரென்று அறுந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மின்சார ரெயில்களை இயக்க முடியவில்லை.

  இதுகுறித்து கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக ரெயில்வே மெக்கானிக்கல் பிரிவு ஊழியர்கள் விரைந்து சென்று, அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நெல்லையில் இருந்தும் ரெயில்வே பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு சீரமைப்பு பணியில் ஈடுபட்டார்கள். இதனால் கோவில்பட்டி வழியாக மின்சார ரெயில்கள் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

  நெல்லையில் இருந்து மும்பை தாதர் செல்லும் எக்ஸ்பிரஸ், நெல்லையில் இருந்து ஜம்முதாவி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகிய இரு ரெயில்களும் கோவில்பட்டி ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்ப‌ட்டன. சென்னையில் இருந்து குருவாயூர் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சாத்தூர் ரெயில் நிலையத்திலும், கோவையில் இருந்து நாகர்கோவில் வந்த ரெயில் நள்ளி ரெயில் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டன. நெல்லையில் இருந்து இரவில் சென்னைக்கு புறப்பட்டு சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் வாஞ்சி மணியாச்சியிலும், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கடம்பூர் ரெயில் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டன.

  மேலும் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ், நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ், நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் அந்த ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் தவிப்புக்கு ஆளானார்கள்.

  இதனிடையே கோவில்பட்டியில் அறுந்து கிடந்த மின் கம்பியை ஊழியர்கள் வெகுநேர போராட்டத்துக்கு பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு சரிசெய்தனர். இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் அந்த வழியாக மின்சார ரெயில் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து ஜம்முதாவி எக்ஸ்பிரஸ், மும்பை தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அடுத்தடுத்து புறப்பட்டு சென்றன. மும்பை தாதர் ரெயில் கோவில்பட்டியில் இருந்து டீசல் என்ஜின் மூலமாக இழுத்து செல்லப்பட்டு அங்கிருந்து வழக்கமான மின்சார ரெயிலாக புறப்பட்டு சென்றது.

  பின்பு நெல்லை, மணியாச்சி, கடம்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டன. சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ், நெல்லை-ஈரோடு-மயிலாடுதுறை இணைப்பு பயணிகள் ரெயில் ஆகியவை நள்ளிரவில் நெல்லைக்கு வந்தன. இந்த ரெயில்களுக்காக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளும் தவிப்புக்குள்ளானார்கள்.

  இரவில் அனைத்து ரெயில்களுமே தாமதமாக சென்றதால் நெல்லைக்கு பல்வேறு இடங்களில் இருந்து வந்த ரெயில்களும் தாமதமாக வந்தன. மாலை 5.30 மணிக்கு நெல்லை வரவேண்டிய ஈரோடு, மயிலாடுதுறை பயணிகள் ரெயில் 11.30 மணிக்கு நெல்லை வந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு நெல்லை வரவேண்டிய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 7 மணிக்கு நெல்லை வந்தது.

  காலை 6.10 மணிக்கு வரவேண்டிய செந்தூர் எக்ஸ்பிரஸ் 9 மணிக்கும், 6.15 மணிக்கு நெல்லை வரவேண்டிய பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் 9.30 மணிக்கும், 7.30 மணிக்கு வரக்கூடிய நெல்லை எக்ஸ்பிரஸ் 10 மணிக்கும் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தது. காலை 8 மணிக்கு வரவேண்டிய குருவாயூர் ரெயில் 10 மணிக்கு நெல்லைக்கு வந்தது.

  ரெயில்கள் தாமதமானதால் அதில் பயணம் செய்து வந்த பயணிகளும், ரெயில் நிலையத்தில் காத்திருந்தவர்களும் கடும் தவிப்புக்குள்ளானார்கள். குறித்த நேரத்தில் உரிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். அலுவலகங்களுக்கு செல்பவர்களும் கடும் சிரமத்துக்குள்ளானார்கள்.

  இதனிடையே இன்று காலை கோவில்பட்டி-சாத்தூர் வழித்தடத்தில் கோவில்பட்டியில் இருந்து சிறிது தொலைவில் மேலும் ஒரு மின்கம்பி அறுந்து விழுந்தது. இதுபற்றி கோவில்பட்டி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எலக்ட்ரிக்கல் பிரிவு பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து மின் கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

  இதன் காரணமாக கோவில்பட்டிநோக்கி வந்து கொண்டிருந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் சாத்தூர் அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது. பின்பு அந்த ரெயில் டீசல் என்ஜின் மூலமாக இயக்கப்பட்டு கோவில்பட்டியை வந்தடைந்தது. பின்னர் 11 மணியளவில் நெல்லைக்கு வந்தது. 2-வது நாளாக ரெயில்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். #TrainService
  ×