search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hike"

    தோவாளை மார்க்கெட்டுக்கு மல்லிகைப்பூ குறைந்தளவே வந்துள்ளது. இதனால் மல்லிகைப்பூவின் விலை கிலோவுக்கு ரூ.1700 அதிகரித்துள்ளது. #Jasmine
    நாகர்கோவில்:

    தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. நெல்லை, குமரி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பல விதமான பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    பழவூர், ஆவரைக்குளம், அருப்புக்கோட்டை, மதுரை போன்ற இடங்களில் இருந்து மல்லிகைப்பூ தோவாளை மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும். தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மல்லிகைப்பூ உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது.

    இதனால் தோவாளை மார்க்கெட்டுக்கு மல்லிகைப்பூவும் குறைந்தளவே வந்துள்ளது. இதனால் மல்லிகைப்பூவின் விலை அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1100-க்கு விற்பனையானது. இன்று ஒரு கிலோ ரூ.1700-க்கு விற்பனையானது.

    ரூ.750-க்கு விற்பனையான பிச்சிப்பூ இன்று ரூ.850 ஆக உயர்ந்திருந்தது. அதேபோல ரூ.500-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.600 ஆக இருந்தது. சம்பங்கி ரூ.50, மஞ்சகேந்தி ரூ.60, ரோஜா ரூ.90, செவ்வந்தி ரூ.100, கொழுந்து ரூ.150, வாடாமல்லி ரூ.60, கோழிப்பூ ரூ.60 ஆக விற்பனையானது.

    ரூ.5-க்கு விற்பனையான தாமரைப்பூ இன்று ரூ.10 ஆக விற்கப்பட்டது.

    புத்தாண்டு மற்றும் திருமண நாட்கள் வருவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. வரத்து குறைவாக இருப்பதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. #Jasmine
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து, ஒரு சவரன் 24,040-க்கு விற்பனையாகிறது. #Gold
    சென்னை:

    கடந்த 16-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.24 ஆயிரத்து 80 ஆக இருந்தது. பின்னர் விலை சரிந்தது. நேற்று பவுன் ரூ.23 ஆயிரத்து 986-க்கு விற்கப்பட்டது.

    இன்று பவுனுக்கு அதிரடியாக ரூ.144 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 40 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.18 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.3005-க்கு விற்கிறது.

    16-ந்தேதி ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்துக்கு 80-க்கு விற்றது. தற்போது 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் ரூ.40-க்கு விற்கிறது.
    கர்நாடகத்தில் மாநில அரசு மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்பேரில் யூனிட்டுக்கு ரூ.1 முதல் ரூ.1.65 உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. #Karnataka #Powertariff
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் 2019-2020-ம் ஆண்டில் மின் கட்டணத்தை உயர்த்த மின்வாரியத்திற்கு, மின் வாரிய நிறுவனங்கள் கோரிக்கையும், சிபாரிசும் செய்துள்ளன. அதாவது பெஸ்காம் மின் வாரிய நிறுவனம் யூனிட்டுக்கு ஒரு ரூபாய் உயர்த்தவும், அதுபோல செஸ்காம் மின் வாரிய நிறுவனம் யூனிட்டுக்கு ரூ.1.65 காசுகள் அதிகரிக்கும்படியும், இதேபோன்று கெஸ்காம் மற்றும் மெஸ்காம் மின் வாரிய நிறுவனங்கள் யூனிட்டுக்கு ரூ.1.30 காசுகள் முதல் ரூ.1.45 காசுகள் வரை கட்டணத்தை உயர்த்தலாம் என்றும் மாநில அரசின் மின் வாரியத்திற்கு சிபாரிசு செய்து அறிக்கை அளித்துள்ளது.



    பிற நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் மின்சாரத்தின் விலை அதிகரித்துள்ளதாலும், மின் உற்பத்தி செய்ய ஆகும் செலவு அதிகரித்துள்ளதாலும், மின் கட்டணத்தை உயர்த்த சிபாரிசு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மின் வாரிய நிறுவனங்கள் மின் கட்டணத்தை உயர்த்தும்படி கூறி கொடுத்துள்ள அறிக்கையை மாநில அரசும், கர்நாடக மின் வாரியமும் பரிசீலித்து வருவதாகவும், இதுதொடர்பாக ஆலோசித்து மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. #Karnataka #Powertariff
    தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.360 அதிகரித்தது. இன்று ஒருசவரன் ரூ.24 ஆயிரத்து 80 ஆக விற்பனையாகிறது. #GoldPrice
    சென்னை:

    கடந்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி தங்கம் விலை சவரன் ரூ.23 ஆயிரத்து 216 ஆக இருந்தது. தொடர்ந்து விலை அதிகரித்து நேற்று ஒரு சவரன் ரூ.23 ஆயிரத்து 720 ஆக இருந்தது. இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.360 அதிகரித்தது. ஒரு சவரன் ரூ.24 ஆயிரத்து 80 ஆக உள்ளது. இதன்மூலம் சவரன் மீண்டும் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. ஒரு கிராம் ரூ.3,010-க்கு விற்கிறது.



    வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 300 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.30 ஆகவும் உள்ளது. #GoldPrice

    மருத்துவ காப்பீடு தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு தமிழிசை சவுந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார். #treatmentamount #CMCHIS #treatmentamountraised #TamilisaiSoundararajan
    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

    தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக சிகிச்சைக்காக அரசு அளிக்கும் தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் இந்தியா முழுவதும் 50 கோடி மக்கள் பலன்பெறும் அளவுக்கு பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் ரூ.5 லட்சம் என்று அறிவித்திருந்த நிலையில், இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு மத்திய அரசு கொடுத்திருக்கும் விதிமுறைகளின் அடிப்படையில் 77 லட்சம் பேர் பயனாளியாக மாறுவார்கள்.

    இன்னும் 80 லட்சம் பேர் ஏற்கனவே மாநில அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற்று வருவதால் பிரதமரின் மருத்துவ காப்பீட்டில் கிடைக்கும் தொகை ரூ.5 லட்சம் அளவுக்கு உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

    தமிழகத்தில் ஏற்கனவே மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைமுறையில் இருப்பதால், குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டுதொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ஆனால் மருத்துவ காப்பீட்டு இல்லாத மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு முழுவதுமாக ரூ.5 லட்சம் தொகையானது பிரதமரின் திட்டம் மூலம் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் 50 கோடி மக்கள் பாரத பிரதமரின் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தில் பயன்பெறுவர். மேலும் பிரதமரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற்றவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 2–வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.#treatmentamount #CMCHIS #treatmentamountraised #TamilisaiSoundararajan
    முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் அதிகபட்ச தொகை ரூ.2 லட்சத்தில் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #treatmentamount #CMCHIS #treatmentamountraised
    சென்னை:

    தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏழை எளிய குடும்பங்கள் ஆண்டு வருவாய் 72,000/- க்கு கீழ் உள்ள பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தின்கீழ் தரமான அறுவைச்சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை பதிவுபெற்ற தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து வயதினரும் பயன்பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


    பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1016 சிகிச்சை முறைகளுக்கும், 113 தொடர் சிகிச்சை முறைகளுக்கும் மற்றும் 23 அறிதல் கண்டுப்பிடிப்பு முறைகளுக்கும் இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் அதிகபட்ச தொகை 2 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என்றும்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தெரிவித்துள்ளார். #treatmentamount #CMCHIS #treatmentamountraised  
    கடலூரில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45.80 அடியாக உயர்ந்துள்ளது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும், விவசாய பாசனத்துக்கு தேவையான தண்ணீர் வழங்குவதிலும் முதன்மையான ஏரியாக விளங்குகிறது.

    கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி முதல் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து ஏரியின் நீர்மட்டம் 46.80 அடியாக உயர்ந்தது. இதையடுத்து சென்னைக்கும், விவசாய பாசனத்துக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    பின்னர் மழை இல்லாததாலும், வடவாறு வழியாக அதிக தண்ணீர் வராததாலும் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் 44 அடியாக நீர்மட்டம் குறைந்தது. இந்த நிலையில் தற்போது வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    தொடர் மழை காரணமாக ஏரியின் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் 200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் பல்வேறு ஓடைகள் வழியாக வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் வருகிறது.

    நேற்று ஏரியின் நீர்மட்டம் 45.55 அடியாக இருந்தது. இன்று அது சற்று அதிகரித்து 45.80 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ஏரியின் பாதுகாப்பு கருதி சேத்தியாதோப்பில் உள்ள வி.என்.எஸ். மதகு வழியாக வினாடிக்கு 750 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சென்னைக்கு தொடர்ந்து வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று 71 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டது. விவசாய பாசனத்துக்கு 34 மதகுகள் வழியாக 80 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. #VeeranamLake
    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று 100.96 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 101.2 அடியாக உயர்ந்தது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு கடந்த 6 மாதங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 4 ஆயிரத்து 782 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 5 ஆயிரத்து 172 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீரும், கால்வாயில் 650 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வந்தது. இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 300 கன அடியாக குறைக்கப்பட்டது.

    டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் தொடர்ந்து 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 100.96 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 101.2 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் 99 அடியாக உயர்ந்துள்ளது. #MetturDam
    சேலம்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    கடந்த 1-ந்தேதி 4 ஆயிரத்து 72 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6 ஆயிரத்து 158 கன அடியாக இருந்தது. இன்று 6 ஆயிரத்து 8 அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரியில் 500 கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 98.42 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை மேலும் உயர்ந்து 98.74 அடியா க உயர்ந்தது. பிற்பகல் 99 அடியை எட்டியது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.24,176-க்கு விற்பனையாகிறது. #gold
    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உச்ச கட்டமாக கடந்த 6-ந்தேதி பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. அன்று பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.24 ஆயிரத்து 64-க்கு விற்றது.

    அதன்பின்னர் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இந்தநிலையில் இன்று ஒரேநாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.248 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 176 ஆக உள்ளது. இதன்மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது.

    கிராமுக்கு ரூ.31 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.3,022-க்கு விற்கிறது. அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக டாலரின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது. அதைதொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது.

    அதன் காரணமாக தங்கம் விலை அதிகரித்துள்ளது. தங்கம் மீதான முதலீடு காரணமாகவும், திருமண முகூர்த்தம் மற்றும் தீபாவளி பண்டிகை போன்றவற்றாலும் தங்கத்தின் தேவை அதிகரித்தது. அதனால் விலை உயருவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ ரூ. 41 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.41.50-க்கு விற்கிறது. #Gold
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.24,064-க்கு விற்பனையாகிறது. #Gold
    சென்னை:

    பல மாதங்களாக பவுன் ரூ.23 ஆயிரத்துக்குள் தங்கம் விலை இருந்தது. இந்த நிலையில் இன்று ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. கடந்த (செப்டம்பர்) மாதம் பவுன் ரூ.23 ஆயிரத்து 232 ஆக இருந்தது.

    பின்னர் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. 4-ந்தேதி ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 792 ஆக இருந்தது. நேற்று முன்தினம் ரூ.112 அதிகரித்து ரூ.23 ஆயிரத்து 904-க்கு விற்றது.

    இன்று அதிரடியாக பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 64 ஆக உள்ளது. இதன் மூலம் தங்கம் விலை பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.3008-க்கு விற்கிறது.

    அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக போர் ஏற்பட்டுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது. அதன் தாக்கம் இந்தியாவிலும் பிரதிபலிப்பதால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இதனால் தங்கம் விலை அதிகரித்துள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பங்கு சந்தையை விட தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பும் விலை உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்துள்து. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.41.90-க்கு விற்கிறது. #Gold
    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை விட அணைக்கு கூடுதல் தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. #MetturDam
    சேலம்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது.

    இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. நேற்று 4 ஆயிரத்து 384 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 5 ஆயிரத்து 471 கன அடியாக இருந்தது.

    டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து நேற்று 3 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று மாலை முதல் தண்ணீர் திறப்பு 1,200 கன அடியாக குறைக்கப்பட்டது.

    இன்று காலையும் அதே அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை விட அணைக்கு கூடுதல் தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.

    நேற்று 101.79 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 102.02 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

    ஒகேனக்கலில் நேற்று 7 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 6 ஆயிரத்து 700 கன அடியாக குறைந்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் குடும்பத்துடன் உற்சாகமாக பரிசல் சவாரியும் சென்று மகிழ்ந்தனர். #MetturDam
    ×