search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hike"

    கீழ் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் இன்று காலை ஏரியின் நீர்மட்டம் 46.25 அடியாக உயர்ந்து உள்ளது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர இந்த ஏரியில் இருந்து தினமும் சென்னை மக்களின் தேவைக்காக குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கல்லணை, கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வந்துசேரும். மழைக் காலத்தில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் வீராணம் ஏரி 47.50 அடியை எட்டியது. சென்னைக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதமாக வெயில் சுட்டெரித்து வருவதாலும், வீராணம் ஏரிக்கு நீர்வரத்து இல்லாததாலும் தற்போது ஏரி வறண்டுவரும் நிலை ஏற்பட்டது. சென்னைக்கு குடிநீர் அனுப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டது.

    இதையொட்டி மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 30-ந் தேதி 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து கல்லணை வழியாக கீழணை வந்தது. அங்கிருந்து கடந்த 7-ந் தேதி அதிகாலை முதல் வீராணம் ஏரிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரதொடங்கியது.

    இதை தொடர்ந்து வீராணம் ஏரியில் நீர் மட்டம் உயர தொடங்கியது. இந்த நிலையில் கீழ் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு இன்று காலை 2,400 கன அடி நீர் வந்தது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 44.03 அடியாக இருந்தது. ஏரிக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் இன்று காலை ஏரியின் நீர்மட்டம் 46.25 அடியாக உயர்ந்து உள்ளது.

    வீராணம் ஏரியில் இருந்து நேற்று சென்னைக்கு 62 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்று 60 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    ஏரிக்கு இதே அளவு தண்ணீர் கீழணையில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் இன்னும் 4 நாட்களில் வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டும். அதன் பிறகு இங்கிருந்து சென்னைக்கு கூடுதலாக தண்ணீர் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  #VeeranamLake
    தேசிய நெடுஞ்சாலைகளில் 20 சுங்கச் சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. #TollGate
    சென்னை:

    தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 43 சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில் சாலை கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிக்காக சுங்க சாவடிகளில் வாகன கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் உள்ள 43 சுங்கச்சாவடிகளிலும் தரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    தேசிய நெடுஞ்சாலைகளில் 20 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

    6 இடங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளான சென்னை- பெங்களூர், சேலம், மதுரை சுங்கசாவடிகள் செங்கல்பட்டு பரனுர், சூரப்பேடு, சென்னை பைபாஸ் ஆகியவற்றில் 2005-ம் ஆண்டு முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 2016 வரை ரூ.1,500 கோடி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.


    பிற இடங்களில் உள்ள சுங்க சாவடிகளின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, வேலூர் (2), கோயம்புத்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி (3), சிவகங்கை (2) ஆகியவற்றின் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    சுங்க சாவடி கட்டண உயர்வு குறித்து மதுரையைச் சேர்ந்த வணிகர் எஸ்.அருண் கூறியதாவது:-

    மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரு முறை செல்ல வாகன சுங்க கட்டணம் ரூ.800 செலுத்தி வருகிறோம். சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதால் கூடுதல் பணம் செலுத்த வேண்டி வரும்.

    ஆம்னி பஸ் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-

    சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றன. சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. பெருங்களத்தூர்- செங்கல்பட்டு வரை வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. தினமும் 1 லட்சம் வாகனங்கள் இந்த பகுதியை கடந்து செல்கின்றன.

    டீசல் கட்டணம் உயர்வு, சுங்க கட்டண உயர்வால் ஆம்னி பஸ்களை நஷ்டத்தில் இயக்கி வருகிறோம். சுங்க சாவடிகளில் சுங்க கட்டண உயர்வால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TollGate
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.24,736-க்கு விற்பனையாகிறது. #Gold
    சென்னை:

    தங்கம் விலை பவுன் ரூ.26 ஆயிரத்தை நெருங்கும் வகையில் கிடுகிடுவென உயர்ந்தது. பின்னர் விலை குறைந்தது. பிப்ரவரி 28-ந்தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 464 ஆக இருந்தது. அதன்பிறகு விலை படிப்படியாக சரிந்தது.

    நேற்று முன்தினம் பவுன் ரூ.24 ஆயிரத்து 472-ஆக இருந்தது. நேற்று பவுனுக்கு ரு.104 அதிகரித்து ரூ.24 ஆயிரத்து 576-க்கு விற்றது. இன்றும் பவுனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.

    ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 736ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.3092-க்கு விற்கிறது. தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 600 ஆகவும், ஒரு கிராம் ரூ.41.60 ஆகவும் உள்ளது. #Gold
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 அதிகரித்து ஒரு சவரன் ரூ.25,840-க்கு விற்பனையாகிறது. #Gold

    சென்னை, பிப்.20-

    தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 11-ந்தேதி ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 200 ஆக இருந்தது. பின்னர் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப் பட்டது.

    16-ந்தேதி ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 520-க்கு விற்றது. அதன்பிறகு விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.

    நேற்று பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.25 ஆயிரத்து 688 ஆக இருந்தது. இன்று அதிரடியாக மேலும் பவு னுக்கு ரூ.152 அதிகரித்தது. ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 840 ஆக உள்ளது.

    இதன்மூலம் ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கிராமுக்கு ரூ.19 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.3,230-க்கு விற்கிறது.

    தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு மற்றும் அமெ ரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி காரணமாக தங்கம் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக் கின்றனர்.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.44 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் ரூ.44-க்கு விற்கிறது.

    தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று தங்கம் சவரனுக்கு ரூ.32 அதிகரித்து ஒரு சவரன் ரூ.25,600-க்கு விற்பனையாகிறது. #Gold
    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்து 520 ஆக இருந்தது. நேற்று சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.25 ஆயிரத்து 568 ஆனது. இதுவே தங்கம் வரலாற்றில் உச்சக்கட்ட விலையாக கருதப்பட்டது.

    ஆனால் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.3,200-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரத்து 500 ஆகவும், ஒரு கிராம் ரூ.43.50 ஆகவும் உள்ளது. #Gold
    தங்கம் விலை வரலாற்றிலேயே தற்போது தான் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ஒரு கிராம் ரூ.3,196-க்கு விற்கிறது. #Gold
    சென்னை:

    சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 9-ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.25 ஆயிரத்து 384 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து 14-ந் தேதி சவரன் ரூ.25 ஆயிரத்து 160 ஆனது.

    அதன்பிறகு விலை மீண்டும் அதிகரித்தது. நேற்று முன்தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.25 ஆயிரத்து 520 ஆக இருந்தது. இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.48 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்து 568ஆக உள்ளது.

    இதன் மூலம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை வரலாற்றிலேயே தற்போது தான் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.6 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.3,196-க்கு விற்கிறது.



    அமெரிக்காவில் தற்போது பொருளாதாரம் மந்தநிலை உள்ளது. இதனால் சர்வதேச முதலீட்டாளர்களின் முதலீடு பங்குசந்தையை தவிர்த்து தங்கத்தின் மீது அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

    மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதுவும் தங்கம் விலை தொடர்ந்து உயர காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.43.60-க்கு விற்கிறது. #Gold
    தங்கத்தின் விலை உயர்வு காரணமாக திருமணம் உள்பட பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு நகை வாங்கும் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #Gold #GoldPrice
    சென்னை:

    சர்வதேச பொருளாதார சூழ்நிலை, உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

    தங்கத்தின் விலை கடந்த டிசம்பர் மாதம் முதல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. டிசம்பர் 1-ந் தேதி தங்கத்தின் விலை 1 சவரன் ரூ.23, 240 ஆக இருந்தது. டிசம்பர் 8-ந் தேதி 1 சவரன் தங்கம் ரூ.24,080 ஆக அதிகரித்தது.

    அதன்பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தபடியே காணப்பட்டது. ஜனவரி 28-ந்தேதி வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை 1 சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது. அன்று சவரன் விலை ரூ.25,160-க்கு விற்கப்பட்டது. பிப்ரவரி 2-ந் தேதி அதிகபட்சமாக ரூ.25,552-க்கு விற்பனையானது.

    அதன்பிறகு சில நாட்கள் தங்கத்தின் விலை குறைந்து வந்தது. கடந்த 14-ந் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.25,160-க்கு விற்கப்பட்டது. நேற்று மீண்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 அதிகரித்தது.

    நேற்று ஒரு பவுன் தங்கம் மீண்டும் உச்சத்தை தொட்டு பவுன் விலை ரூ. 25,384க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று சவரனுக்கு மேலும் ரூ.136 அதிகரித்து ரூ25,520-க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.3190 ஆகும்.



    தங்கத்தின் விலை உயர்வு காரணமாக திருமணம் உள்பட பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு நகை வாங்கும் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அமெரிக்காவில் உற்பத்தி குறியீடு சரிவு, பொருளாதாரத்தில் பின்னடைவு, பெரும் அளவில் வேலை நிறுத்தம், அமெரிக்க அரசின் கொள்கையில் மாற்றம் போன்ற காரணங்களால் அங்குள்ள பெரிய முதலீட்டாளர்கள் மற்ற வர்த்தகம் சார்ந்த பங்குச் சந்தையில் முதலீடு செய்யாமல் தங்கத்தில் பெரிய அளவில் முதலீடு செய்கின்றனர்.

    மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காரணமாகவும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்கிறது. இதன் தாக்கம் இந்திய சந்தையில் எதிரொலிக்கிறது.

    இதனால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இந்த மாதம் முழுவதும் தங்கத்தின் விலையில் பெரிய அளவில் ஏற்றமும் இறக்கமும் இருக்கும் என்று கூறப்படுகிறது. #Gold #GoldPrice
    ஆரோக்யா பால் விலை நாளை முதல் லிட்டருக்கு 2 ரூபாய் உயருகிறது. இதனால் பால் சார்ந்த உணவு பொருட்களின் விற்பனை விலை உயரும் என கூறப்படுகிறது. #ArokyaMilk
    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் ஆவின் பாலுக்கு அடுத்தப்படியாக அதிக அளவில் விற்பனையாவது ஆரோக்யா பால் ஆகும்.

    இப்போது இதன் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் மற்ற பால் பாக்கெட் விலையும் விரைவில் உயர்ந்து விடும்.

    இதுபற்றி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி தனியார் பால் நிறுவனமான “ஹட்சன் நிறுவனம் நாளை வெள்ளிக்கிழமை (1-ந்தேதி) முதல் தங்களுடைய “ஆரோக்யா” பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2,00 ரூபாய் உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. ஹட்சன் நிறுவனத்தின் தன்னிச்சையான இந்த விலை உயர்விற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



    தமிழகத்தில் நாளொன்றுக்கு தேவைப்படக் கூடிய 1.5 கோடி லிட்டர் பாலில் பொதுமக்கள் மற்றும் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் அனைத்தும் சுமார் 83.4 சதவீதம் பால் தேவைகளுக்கு (அதாவது 1 கோடியே 25 லட்சம் லிட்டர்) தனியார் பால் நிறுவனங்களையே சார்ந்திருக்கும் சூழல் உள்ளது. ஏனெனில் ஆவின் நிறுவனம் தமிழகத்தில் நாளொன்றுக்கு வெறும் 16.6 சதவீதம் பால் தேவைகளை மட்டுமே (அதாவது சுமார் 25 லட்சம் லிட்டர்) பூர்த்தி செய்கிறது.

    அது மட்டுமின்றி சுமார் 95 சதவீதம் தேனீர் கடைகள், உணவகங்கள் தனியார் பாலினையே உபயோகப்படுத்தி வருவதால் இந்த தன்னிச்சையான பால் விற்பனை விலை உயர்வின் காரணமாக தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விற்பனை விலையும் கடுமையாக உயரும்

    எனவே ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கின்ற வகையிலான இந்த பால் விலை உயர்வை ஹட்சன் நிறுவனம் மறு பரிசீலனை செய்து அதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #ArokyaMilk
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.25,344-க்கு விற்பனையாகிறது. #Gold
    சென்னை:

    தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்து 28-ந்தேதி சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது.

    இன்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.25, 344-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.23 ஆக உயர்ந்து ரூ.3,168-க்கு விற்கப்படுகிறது.

    கடந்த 21-ந்தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.24,640 ஆக இருந்தது. கிராம் ரூ.3,080-க்கு விற்கப்பட்டது.

    அதன்பிறகு படிப்படியாக உயர்ந்து 28-ந்தேதி சவரன் ரூ.25,016-ஐ தொட்டது. நேற்று சவரனுக்கு ரூ.144 அதிகரித்தது. இன்று ரூ.184 அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருகிராம் வெள்ளி ரூ.43.90-க்கும் ஒருகிலோ ரூ.43,900-க்கும் விற்கப்படுகிறது. இது நேற்றையை விலையைவிட கிராமுக்கு ரூ.30-ம், கிலோவுக்கு ரூ.300-ம் அதிகம் ஆகும். #Gold
    பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிக அளவில் காய்கறிகள் வருகிறது. இதில் சிறுகிழங்கு, தக்காளி, முருங்கைக்காய், மாங்காய் விலை சற்று அதிகமாக உள்ளது. #Pongal #KoyambeduMarket
    சென்னை:

    பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிக அளவில் காய்கறிகள் வருகிறது.

    ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தினமும் 400 லாரிகளில் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது.

    வழக்கமாக கிடைக்கும் கத்தரிக்காய், தக்காளி, முட்டை கோஸ், உருளைக்கிழங்கு வகைகளுடன் பொங்கல் பண்டிகைக்காக கிடைக்கும் சிறுகிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காரகருணை, பிடிகருணை என பல்வேறு வகை கிழங்குகள், மஞ்சள் குலைகள், வாழைத்தார்கள், கரும்புகள் லாரி லாரியாக மார்க்கெட்டுக்கு வந்துள்ளது.

    இதில் சிறுகிழங்கு, தக்காளி, முருங்கைக்காய், மாங்காய் விலை சற்று அதிகமாக உள்ளது.

    கோயம்பேட்டில் ஒரு கிலோ சிறுகிழங்கு ரூ.50-க்கு விற்கப்படுகிறது. சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டில் ரு.55-க்கும் அயனாவரம் கடைகளில் ரூ.80-க்கும் சிறுகிழங்கு விற்கப்படுகிறது.

    உருளைக்கிழங்கு கோயம்பேட்டில் ரூ.25-க்கு கிடைக்கிறது. சிந்தாதிரிப்பேட்டை, அயனாவரத்தில் ரூ.35-க்கும் விற்கப்படுகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கு ரூ.30-க்கும், கத்தரிக்காய்- தக்காளி கிலோ ரூ.50-க்கும், மாங்காய் ரூ.130-க்கும், பிடிகருணை- கார கருணை ரூ.60-க்கும் விற்கப்படுகிறது. ஒரு கரும்பு ரூ.40-க்கு கிடைக்கிறது.

    பொங்கல் வரை காய்கறி விலை அதிகமாக இருக்கும் என்றும் அதன்பிறகு விலை குறைந்துவிடும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். #Pongal #KoyambeduMarket
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.3075-க்கு விற்பனையாகிறது. #Gold
    சென்னை:

    திருமண சீசன் மற்றும் பண்டிகை காலங்களில் தங்கத்தின் விலை திடீரென்று உயர்வது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் கடந்த 1 மாதமாகவே ஆபரண தங்கம் கிராம் ரூ.3000-க்கு மேல் விற்பனையாகி வருகிறது.

    இது படிப்படியாக உயர்ந்து இன்று ரூ.3075 என்ற புதிய உச்சத்தை எட்டியது. இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது.


    ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.24-ம் பவுனுக்கு ரூ.192-ம் உயர்ந்தது. 22 கேரட் தங்கம் விலை இன்று காலை கிராம் ரூ.3075-க்கும் விற்பனையானது. ஒரு பவுன் (8 கிராம்) விலை ரூ.24,600 ஆக உள்ளது.

    வெள்ளி விலை கிராம் ரூ.42.80 ஆகவும், 1 கிலோ ரூ.42,800 ஆகவும் இருந்தது. #Gold
    பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் காகிதப்பைகள், துணிப் பைகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு துணிப்பை விலை கூடுதலாகி உள்ளது. #PlasticBan
    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஜனவரி-1 ந்தேதி முதல் பிளாஸ்டிக் பைகள் பிளாஸ்டிக் தட்டுகள் உள்பட14 வகையான பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.

    இதனால் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி, விற்பனை முழுவதும் குறைந்தது.

    மளிகை கடைகள், காய்கறி கடைகள், உணவகம் உள்ளிட்ட பல கடைகளில் துணிப்பைகள், காகிதப் பைகளில் பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் துணிப்பை காகிதப் பைகளுக்கு மவுசு அதிகரித்தது.

    காதிதப்பைகளுக்கான தேவை அதிகரிப்பால் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட காகிதப்பைகள் 2 மடங்கு அதிகரிப்பட்டு ரூ.80 ஆக உயர்ந்துள்ளது.

    சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.8 விலையில் காகிதப்பைகளும் ரூ.15 விலையில் துணிப்பைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

    சென்னையில் துணிப்பைகள், காகிதப் பைகள் விற்பனை செய்யும் கடைகளில் பொது மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. துணிப்பைகள், ரூ.20 முதல் ரூ.100 வரையிலான விலையில் பல்வேறு விதமான வகைகளில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    அதே போல காகிதப்பைகளும் பல்வேறு வடிவங்களில் தயார் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.

    இது குறித்து பாரிமுனையில் காகிதப்பை, துணிப்பைகள் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    ஜனவரி-1 ந்தேதி முதல் துணிப்பைகள், காகிதப்பைகளுக்கு ‘மவுசு’ ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் மத்தியில் துணிப்பை, காகிதப்பைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் கடைகளுக்கு மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. காகித, துணிப்பைகள் விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது.

    துணிப்பை, காகிதப் பைகளுக்கு மக்களிடையே ஏற்பட்டுள்ள வரவேற்பால் பல்வேறு வகையான வடிவங்களில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்து வருகிறோம். ரூ.20 முதல், ரூ.100 வரையிலான விலையில் துணிப்பைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதே போல காகிதப்பைகள் ரூ. 5 முதல் ரூ.30 வரையிலான விலையில் பல்வேறு மாடல்களில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    காகிதப்பைகள், துணிப் பைகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு துணிப்பை விலை கூடுதலாகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #PlasticBan
    ×