search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை- சவரன் ரூ.25,528-க்கு விற்பனை
    X

    புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை- சவரன் ரூ.25,528-க்கு விற்பனை

    தங்கம் விலை வரலாற்றிலேயே தற்போது தான் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ஒரு கிராம் ரூ.3,196-க்கு விற்கிறது. #Gold
    சென்னை:

    சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 9-ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.25 ஆயிரத்து 384 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து 14-ந் தேதி சவரன் ரூ.25 ஆயிரத்து 160 ஆனது.

    அதன்பிறகு விலை மீண்டும் அதிகரித்தது. நேற்று முன்தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.25 ஆயிரத்து 520 ஆக இருந்தது. இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.48 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்து 568ஆக உள்ளது.

    இதன் மூலம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை வரலாற்றிலேயே தற்போது தான் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.6 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.3,196-க்கு விற்கிறது.



    அமெரிக்காவில் தற்போது பொருளாதாரம் மந்தநிலை உள்ளது. இதனால் சர்வதேச முதலீட்டாளர்களின் முதலீடு பங்குசந்தையை தவிர்த்து தங்கத்தின் மீது அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

    மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதுவும் தங்கம் விலை தொடர்ந்து உயர காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.43.60-க்கு விற்கிறது. #Gold
    Next Story
    ×