search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "graduation ceremony"

    • அன்னை பாத்திமா கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேசினார்.
    • வாய்ப்புகள் அதிகம் வர வேண்டும் என்றால் பிற மொழிகளையும் கற்றுக்கொள்வதில் தவறில்லை என்று பேசினார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள அன்னை பாத்திமா கல்வி குழுமத்தின் 17-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில கவர்னரும், புதுவை மாநில துணைநிலை ஆளுநருமான டாக்டர். தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்துகொண்டு 2020-21, 2021-22-ம் கல்வியாண்டில் படித்த

    600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:-

    கல்லூரிகளில் நான் வைக்கும் கோரிக்கை நன்றாக படியுங்கள். அதிக மாக புத்தகங்களை படியுங்கள் என்பதுதான். வரலாற்று புத்தகம், நல்ல புத்தகங்களை தேடி தேடி படியுங்கள். புத்தகங்களை படிக்க படிக்கத்தான் வாழ்க்கை முறை தெளிவாகும். வீட்டி லும், வேலை நேரத்திலும் புத்தகங்களை படியுங்கள்.

    தற்போது இந்தியாவை சேர்ந்த திறமை வாய்ந்தவர்கள் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க பிரதமர் இன்று புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி இருக்கிறார். வேறொரு மொழியை கற்றுக்கொண்டால் மிழ் மொழியில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று தமிழகத்தில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். பலமொழிகள் கற்கும் பொழுதுதான் தமிழ் எவ்வளவு உயர்ந்தது என்று தெரியும். பாரதி பல மொழிகளை கற்றுக் கொண்டுதான் தமிழ் உயர்ந்தது என்று சொன்னார்.

    நானும் பேராசிரியராக இருந்து அரசியலுக்கு வந்துள்ளேன். எதையுமே அரசியல் ஆக்காமல் ஒரு திட்டம் வந்தால் அதை அலசி ஆராய்ந்து நல்லவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையை வரவேற்கும் நிலை உங்களி டம் இருக்க வேண்டும்.

    வாய்ப்புகள் அதிகம் வர வேண்டும் என்றால் பிற மொழிகளையும் கற்றுக் கொள்வதில் தவறில்லை. பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தாலும் மகிழ்ச்சியை மட்டும் தொலைத்து விடாதீர்கள். மாணவ செல்வங்கள் ஒவ்வொரு நாளும் உங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள். தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்துங்கள்.

    யோகா பயிற்சியை தினமும் செய்தால் இன்று வாங்கிய மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்கள் பெறலாம். யோகா செய்தால் மனம் ஒருநிலைப்படும். யோகா செய்யாத நாள் இன்றோடு கடைசி நாளாக இருக்கட்டும். நாளை முதல் சின்ன சின்ன யோகாவை செய்ய முயற்சியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பேராசிரியர் ராம.சீனிவாசன் பங்கேற்றனர். கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா, தலைமை அதிகாரி, செயலாளர் ஷகிலா ஷா முன்னிலை வகித்தனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தபசுகண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார்.

    முடிவில் முதல்வர் வெண்ணிலா நன்றி கூறினார். முன்னாள் முதல்வர் நவராஜ் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • அன்னை பாத்திமா கல்வி குழுமத்தின் 17-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
    • புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.

    மதுரை

    மதுரை திருமங்கலம் ஆலம்பட்டியில் உள்ள அன்னை பாத்திமா கல்வி குழுமத்தின் 17-வது பட்டமளிப்பு விழா வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கல்லூரி தலைவர் மற்றும் தாளாளர் எம்.எஸ்.ஷா , தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் செயலாளர் எம்.எஸ்.ஷகீலா ஷா, கலை அறிவியல் கல்லூரி முதல்வர் தபசு கண்ணன், கல்வியியல் கல்லூரி முதல்வர் வெண்ணிலா ஆகியோர் பேசுகிறார்கள்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசுகிறார். பேராசிரியர் ராம சீனிவசான் சிறப்புரை யாற்றுகிறார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

    • விழாவை பள்ளி பொருளாளர் ராதாராமசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    • சிவப்பிரியா மாதேஸ்வரனும் பரிசுகளை வழங்கினர், முடிவில் பள்ளி முதல்வர் அனிதா நன்றி கூறினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கூலிப்பாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'பிரோடிகி அவார்டு -2023' என்ற பெயரில் மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவை பள்ளி பொருளாளர் ராதாராமசாமி குத்துவிளக்கேற்றி  தொடங்கி வைத்தார். பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் முன்னாள் ஆலோசகர் வி.பொன்ராஜை வாழ்த்தி வரவேற்றுப்பேசினார். விழாவில் மழலையர் மாணவ-மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் நடனம் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி செயலாளர் ராமசாமி–மாதேஸ்வரனும், துணை செயலாளர் சிவப்பிரியா- மாதேஸ்வரனும் பரிசுகளை வழங்கினர். முடிவில் பள்ளி முதல்வர் அனிதா நன்றி கூறினார்.

    • செய்யது அம்மாள் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.
    • ஏற்பாடுகளை செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாக அலுவலர் சாகுல் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யதம் மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 10-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா செய்யது அம்மாள் அறக்கட்டளை சேர்மன் டாக்டர் பாபு அப்துல்லா தலைமையில் நடந்தது. தாளாளர் செல்லத்துரை அப்துல்லா முன்னிலை வகித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் டாக்டர் பழனிச்சாமி 821 இளங்கலை பட்டம் முடித்த மாணவ- மாணவிகளுக்கும், 89 முதுகலை பட்டம் முடித்த மாணவ மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கி பேசினார்.

    செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பி னர்கள் டாக்டர் செய்யதா அப்துல்லா, செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர். முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.அழகப்பா பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்ற செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் 5 பேருக்கு தங்கப்பதக்கம் வழங்கி பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டது.

    இதேபோல் பல்கலைக்கழக அளவில் முதல் 10 ரேங்குக்குள் பெற்ற 52 மாணவ,மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.விழா ஏற்பாடுகளை செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாக அலுவலர் சாகுல் செய்திருந்தார்.

    • பரமக்குடி அப்துல்கலாம் பப்ளிக் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.
    • விழாவில் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    பரமக்குடி புதுநகரில் உள்ள அப்துல்கலாம் பப்ளிக் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.

    பள்ளியின் சேர்மன் முகைதீன் முசாபர் அலி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் காசநோய் துணை இயக்குநர் ஜீவானந்தம், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் கழக இணைச்செயலாளர் காமராஜ், பரமக்குடி சங்கர வித்யாலயா பள்ளி தாளாளர் சவுமிய நாராயணன ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

    முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் பேசினார். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் மற்றும் நிர்வாக முதன்மை அலுவலர் ஜெயசுதா இணைந்து செய்திருந்தார்.

    துணை முதல்வர்கள் அனில், கவிதா மற்றும் கே.சி. பொறுப்பாசிரியை கனிமொழி மற்றும் ஆசிரியர்கள் இணைந்து விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.

    பல்வேறு கலை நிகழ்ச்சியுடன் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 8-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
    • விழாவில் 855 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 8-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா செய்யது அம்மாள் அறக்கட்டளை சேர்மன் டாக்டர் பாபு அப்துல்லா தலைமையில் நடைபெற்றது.கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா முன்னிலையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ரவி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி விழா பேருரை ஆற்றினார்.

    விழாவில் டாக்டர் செய்யதா அப்துல்லா,செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் 855 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

    • சாகுபுரம் கமலாவதி சீனியர் செகண்டரி பள்ளியின் மழலையர் பிரிவு மாணவ- மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • நந்தினி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ -மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    ஆறுமுகநேரி:

    சாகுபுரம் கமலாவதி சீனியர் செகண்டரி பள்ளியின் மழலையர் பிரிவு மாணவ- மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளியின் முதல்வர் அனுராதா தலைமை தாங்கினார்.பள்ளியின் அட்மினிஸ்ட்ரேட்டர் மதன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை சுப்புரத்தினா வரவேற்று பேசினார். டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசனின் துணைவியாரான நந்தினி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ -மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    விழாவில் திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் ஸ்டீபன் பாலாசீர் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பள்ளியின் மழலையர் பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • பட்டமளிப்பு விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் யு.கே.ஜி. மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர் திருப்பதி, பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், பள்ளியின் இயக்குநர் சவுமியா ஜெகதீஸ் மற்றும் முதல்வர் எலிசபெத் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி இவ்விழாவினை தொடங்கி வைத்தனர்.

    யு.கே.ஜி. மாணவர்களை கே.ஜி. வகுப்பிலிருந்து அவர்களை அடுத்த கட்ட (முதலாம்) வகுப்பிற்கு வழி அனுப்பும் விதமாக எல்.கே.ஜி. மற்றும் பிரி-கே.ஜி. மாணவர்கள் நடனங்கள் மற்றும் நாடகம் மூலம் பிரியாவிடை அளித்து மகிழ்வித்தனர். யு.கே.ஜி. மாணவர்களும் தாங்கள் கே.ஜி. வகுப்புகளில் கற்ற அனுபவங்களை கலை நிகழ்ச்சியாக கற்காலத்தில் உருவாக்கப்பட்ட சக்கரத்தின் உதவியால் இயக்கப்பட்ட கட்டைவண்டி முதல் தற்காலத்தில் விண்ணில் ஏவப்படும் விண்கலம் வரை அறிவியல் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வருவது குறித்தும், சுற்றுச்சூழலை மனிதன் மாசுபடுத்துவதால் தாவரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருவது குறித்தும், விண்வெளியின் முக்கியத்துவம் மற்றும் கோள்களில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்தும் நாடகம் மற்றும் நடனம், உரையாடல் மூலம் எடுத்துரைத்தனர்.

    மாணவர்களின் பெற்றோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளின் பட்டமளிப்பு விழாவை கண்டு களித்தனர். சிறப்பு விருந்தினர் திருப்பதி யு.கே.ஜி. மாணவர்கள் 96 பேருக்கு பட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.

    அதனைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் சிறப்புரை ஆற்றினார். முதல்வர் எலிசபெத் விழாவினை முன்னின்று வழிநடத்தினார்.

    • பட்டங்கள் வழங்கும் விழா விமர்சையாக நடந்தது.
    • யூ.கே.ஜி. படித்து முடித்த மழலையர்களுக்கு தாளாளர் பட்டங்கள் வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் வேலம்பாளையம் ரிங்ரோட்டில் ஜெய் சாரதா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மழலையர் பிரிவு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கும் விழா விமரிசையாக நடந்தது. பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் ஈ.வேலுச்சாமி தலைமை தாங்கினார். யூ.கே.ஜி. படித்து முடித்த மழலையர்களுக்கு தாளாளர் பட்டங்கள் வழங்கினார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாதிரி பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் என பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் பள்ளி பொருளாளர் சுருதிஹரீஸ், பள்ளி முதல்வர் ஏ.எஸ்.மணிமலர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் 47-வது பட்டமளிப்பு விழா பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் திடலில் நடைபெற்றது.
    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று பல்கலைக்கழகத் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த 28 மாணவர்கள் உள்பட 600-க்கும் அதிகமான மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் 47-வது பட்டமளிப்பு விழா பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் திடலில் நடைபெற்றது.

    கல்லூரி செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார், தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், நெல்லை தட்சணமாற நாடார் சங்க செயலாளர் ராஜகுமார் நாடார், பொருளாளர் செல்வராஜ் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழக மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று பல்கலைக்கழகத் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த 28 மாணவர்கள் உள்பட 600-க்கும் அதிகமான மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார்.

    அவர் பேசுகையில், "இன்றைய மாணவர்களே எதிர்கால இந்தியாவின் தூண்கள். நீங்கள் நல்லொழுக்கத்துடனும், நேர்மை தவறாமலும் வாழ்வில் பயணித்து நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும்" என்றார். விழாவில் கல்லூரிக்குழு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் வணிகவியல் துறையின் உதவிப் பேராசிரியர் வேல் பாண்டி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • கடையநல்லூர் பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரி யில் 44-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
    • கல்லூரியின் துணை முதல்வர் எம்.ஏ. முகம்மது இக்பால் ஆலிம் 30 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரி யில் 44-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரியின் நிர்வாகக்குழுத் தலைவர் பத்ஹீர் ரப்பானி தலைமை தாங்கினார். ஈரோடு முகம்மது ஹஸன் அலி, தென்காசி மாவட்ட ஜக்கிய ஜமாஅத் தலைவர் வி.டி.எஸ்.ஆர் முகம்மது இஸ்மாயில், கயத்தாறு பி.எச். சுல்தான், கடையநல்லூர் தொழில் அதிபர்கள் ஏ.ஐ.கே.அமானுல்லா, கே.நயினா முகம்மது, கே.ஏ.ஜாபர் சாதிக், எஸ்.மக்தும், இப்ராஹிம். ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    கல்லூரியின் முதல்வரும், தென்காசி மாவட்ட அரசு ஹாஜியுமான முஹ்யித்தீன் ஹஜரத் வரவேற்று பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ. எம்.முகம்மது அபுபக்கர், கீழக்கரை சீனாதானா செய்யிது அப்துல் காதிர், சென்னை குரோம்பேட்டை காயிதேமில்லத் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் என்.முகம்மது காசிம், நெல்லை ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, சென்னை எஸ்.முகம்மது ரபீக் பேராசிரியர் ப.அ.முகம்மது இக்பால், தென்காசி ஹாஜி முஸ்தபா குருப்ஸ் எஸ்.எம். கமால் முகைதீன் ஆகியோர் பேசினார்கள்.


    சென்னை சுன்னத் ஜமாஅத் பேரியக்க தலைவர் டாக்டர் எஸ்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி சிறப்புரையாற்றினார். கல்லூரியின் துணை முதல்வர் எம்.ஏ. முகம்மது இக்பால் ஆலிம் 30 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார். விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் நெல்லை மஜீத் மாவட்ட பொருளாளர் வி.ஏ.எஸ். செய்யது இப்ராஹீம் மாவட்ட துணைச் செயலாளர் அப்துல்வகாப், அச்சன்புதூர் அக்பர்அலி முகைதீன் பள்ளி இமாம் இப்ராஹிம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இந்த வீடியோ வேகமாக பரவி மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
    • சுமார் 5 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

    பெங்களூரு :

    இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற லண்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கன்னட கொடி இடம்பெற்ற சம்பவம் நடந்துள்ளது. லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு முடித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மாணவர்கள் பலர் கலந்துகொண்டு பட்டங்களை பெற்றனர்.

    அப்போது பட்டம் பெற வந்த கர்நாடகத்தை சேர்ந்த அதிஷ் என்ற மாணவர் ஒருவர், கலந்துகொண்டு பட்டமளிப்பு பெற்றார். அப்போது அவர் மூத்த ஆசிரியர்களுடன் கைகுலுக்கிய பின்னர், அவர் கன்னட கொடியை தனது கைகளில் பிடித்து பறக்கவிட்டப்படி கம்பீரமாக சென்றார்.

    இதுகுறித்து அந்த மாணவர் கூறுகையில், நான் லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். நான் கன்னட கொடியை கையில் பிடித்தபடி பட்டம் பெற்றேன். இது எனக்கு பெருமையாக உள்ளது என்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, கன்னட மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த பதிவை 1,550 பேர் மறுபதிவு செய்துள்ளனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடியோவை "லைக்" செய்துள்ளனர். சுமார் 5 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

    ×