search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர் பேச்சு"

    • அன்னை பாத்திமா கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேசினார்.
    • வாய்ப்புகள் அதிகம் வர வேண்டும் என்றால் பிற மொழிகளையும் கற்றுக்கொள்வதில் தவறில்லை என்று பேசினார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள அன்னை பாத்திமா கல்வி குழுமத்தின் 17-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில கவர்னரும், புதுவை மாநில துணைநிலை ஆளுநருமான டாக்டர். தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்துகொண்டு 2020-21, 2021-22-ம் கல்வியாண்டில் படித்த

    600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:-

    கல்லூரிகளில் நான் வைக்கும் கோரிக்கை நன்றாக படியுங்கள். அதிக மாக புத்தகங்களை படியுங்கள் என்பதுதான். வரலாற்று புத்தகம், நல்ல புத்தகங்களை தேடி தேடி படியுங்கள். புத்தகங்களை படிக்க படிக்கத்தான் வாழ்க்கை முறை தெளிவாகும். வீட்டி லும், வேலை நேரத்திலும் புத்தகங்களை படியுங்கள்.

    தற்போது இந்தியாவை சேர்ந்த திறமை வாய்ந்தவர்கள் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க பிரதமர் இன்று புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி இருக்கிறார். வேறொரு மொழியை கற்றுக்கொண்டால் மிழ் மொழியில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று தமிழகத்தில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். பலமொழிகள் கற்கும் பொழுதுதான் தமிழ் எவ்வளவு உயர்ந்தது என்று தெரியும். பாரதி பல மொழிகளை கற்றுக் கொண்டுதான் தமிழ் உயர்ந்தது என்று சொன்னார்.

    நானும் பேராசிரியராக இருந்து அரசியலுக்கு வந்துள்ளேன். எதையுமே அரசியல் ஆக்காமல் ஒரு திட்டம் வந்தால் அதை அலசி ஆராய்ந்து நல்லவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையை வரவேற்கும் நிலை உங்களி டம் இருக்க வேண்டும்.

    வாய்ப்புகள் அதிகம் வர வேண்டும் என்றால் பிற மொழிகளையும் கற்றுக் கொள்வதில் தவறில்லை. பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தாலும் மகிழ்ச்சியை மட்டும் தொலைத்து விடாதீர்கள். மாணவ செல்வங்கள் ஒவ்வொரு நாளும் உங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள். தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்துங்கள்.

    யோகா பயிற்சியை தினமும் செய்தால் இன்று வாங்கிய மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்கள் பெறலாம். யோகா செய்தால் மனம் ஒருநிலைப்படும். யோகா செய்யாத நாள் இன்றோடு கடைசி நாளாக இருக்கட்டும். நாளை முதல் சின்ன சின்ன யோகாவை செய்ய முயற்சியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பேராசிரியர் ராம.சீனிவாசன் பங்கேற்றனர். கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா, தலைமை அதிகாரி, செயலாளர் ஷகிலா ஷா முன்னிலை வகித்தனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தபசுகண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார்.

    முடிவில் முதல்வர் வெண்ணிலா நன்றி கூறினார். முன்னாள் முதல்வர் நவராஜ் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    ×