என் மலர்
நீங்கள் தேடியது "Kindergarten Students"
- சாகுபுரம் கமலாவதி சீனியர் செகண்டரி பள்ளியின் மழலையர் பிரிவு மாணவ- மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
- நந்தினி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ -மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
ஆறுமுகநேரி:
சாகுபுரம் கமலாவதி சீனியர் செகண்டரி பள்ளியின் மழலையர் பிரிவு மாணவ- மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் முதல்வர் அனுராதா தலைமை தாங்கினார்.பள்ளியின் அட்மினிஸ்ட்ரேட்டர் மதன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை சுப்புரத்தினா வரவேற்று பேசினார். டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசனின் துணைவியாரான நந்தினி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ -மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் ஸ்டீபன் பாலாசீர் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பள்ளியின் மழலையர் பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.






