விகாஸ் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

விழாவை பள்ளி பொருளாளர் ராதாராமசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். சிவப்பிரியா மாதேஸ்வரனும் பரிசுகளை வழங்கினர், முடிவில் பள்ளி முதல்வர் அனிதா நன்றி கூறினார்.
வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்த காட்சி. 
வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்த காட்சி. 
Published on

திருப்பூர்:

திருப்பூர் கூலிப்பாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'பிரோடிகி அவார்டு -2023' என்ற பெயரில் மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவை பள்ளி பொருளாளர் ராதாராமசாமி குத்துவிளக்கேற்றி  தொடங்கி வைத்தார். பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் முன்னாள் ஆலோசகர் வி.பொன்ராஜை வாழ்த்தி வரவேற்றுப்பேசினார். விழாவில் மழலையர் மாணவ-மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் நடனம் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி செயலாளர் ராமசாமி–மாதேஸ்வரனும், துணை செயலாளர் சிவப்பிரியா- மாதேஸ்வரனும் பரிசுகளை வழங்கினர். முடிவில் பள்ளி முதல்வர் அனிதா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com