search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganja"

    • சந்தேகமடைந்த தலைமை காவலர், 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
    • சோதனையில் வீட்டில் 1½ கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    நெல்லை:

    பாளை காவல் நிலைய தலைமை காவலர் பெக்கின் அப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டி ந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த தலைமை காவலர், 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் சந்திப்பு சிந்துபூந்துரை கீழத்தெருவை சேர்ந்த பாஸ்கர் (வயது 25) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் கஞ்சா பதுக்கி விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அவர்கள் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 1½ கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அங்கிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வடமாநில தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.
    • வாடகை ஆட்டோவில் வந்த 2 வட மாநில வாலிபர்ளை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள அருள்புரம், சின்னக்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால், அந்தப் பொருட்கள் விற்பனை அந்தப் பகுதிகளில் ஜோராக நடைபெற்று வருகிறது. பலமுறை போலீசார் நடவடிக்கை எடுத்தும் இதனை முழுமையாக தடுக்க முடியவில்லை .

    இந்தநிலையில் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை சோதனை சாவடியில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது வாடகை ஆட்டோவில் வந்த 2 வட மாநில வாலிபர்ளை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

    இதையடுத்து அவர்களிடம் சோதனை மேற்கொண்ட போது அவர்கள் வைத்திருந்த பேக்கில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ்யம் பத்ரா என்பவரது மகன் பிஸ்வாம்பர் பத்ரா(23) மற்றும் ஹோட்டாக்கர்மி என்பவரது மகன் ரஞ்சன் கர்மி(31) என தெரியவந்தது.

    2 பேரும் திருப்பூர் அருகே உள்ள இடுவம்பாளையம் பகுதியில் தங்கி கஞ்சா விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • 4.50 கிலோ கஞ்சா, 2மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் விற்பனையை முற்றிலுமாக தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மாநகர் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் அனுப்பர்பாளையம் பகுதியில் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகப்படும்படியாக வந்த 2பேரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர்கள் மோட்டார் சைக்கிளில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் கோவை சிங்காநல்லூரை சேர்ந்த கருப்பையா (வயது 41), மங்களம் இடுவம்பாளையத்தை சேர்ந்த தணிகைவேல் (30) என்பதும் தெரியவந்தது. இவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து அருள்புரத்தில் பதுக்கி வைத்து திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4.50 கிலோ கஞ்சா, 2மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • வாகன சோதனையில் அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் குமணன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை எளாவூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 20 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அவர்கள் கோயம்புத்தூரை சேர்ந்த நந்தகுமார் (24), சரண் (22), வசந்த் (22) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • யோகராஜ் உள்ளிட்ட 4 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கஞ்சா, செல்போன்கள், மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய பகுதியில் கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    இதில் நகரில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி திரிந்த தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 7-வது தெருவை சேர்ந்த யோகராஜ் (வயது 34), கே.டி.சி.நகர் ஹவுசிங்போர்டு ராம்குமார் (26) ரஹமத்துல்லாபுரம் அப்துல்கலாம்( 25) சுல்தான் அலாவுதீன்( 24) ஆகிய 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா, மற்றும் ரூ.2,800 பணம், அவர்கள் பயன்படுத்திய 4 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கஞ்சா புகைக்க கற்றுக்கொடுத்த சிறுவனுக்கும், எதிர்தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
    • தலைமறைவாக உள்ள அவனது கூட்டாளிகளான 2 சிறுவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு கஞ்சா புகைக்க கற்றுக்கொடுத்ததாக தெரிகிறது. இதனை அறிந்த பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை கண்டித்தார். இதனால் கஞ்சா புகைக்க கற்றுக்கொடுத்த சிறுவனுக்கும், எதிர்தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் கோபத்தில் இருந்த கஞ்சா புகைக்க கற்றுக்கொடுத்த சிறுவன் சம்பவத்தன்று இரவு பெட்ரோல் குண்டுடன் எதிர்தரப்பு சிறுவனின் வீட்டுக்கு கூட்டாளிகளுடன் வந்தார். அப்போது அங்கு யாரும் இல்லாததால் பெட்ரோல் குண்டை சாலையோரத்தில் இருந்த மின் இணைப்பு பெட்டி மீது வீசிவிட்டு அவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ராயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவன் மீது ஏற்கனவே 6 குற்றவழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தலைமறைவாக உள்ள அவனது கூட்டாளிகளான 2 சிறுவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    • ஜெயிலுக்குள், பீடி, சிகரெட், கஞ்சா, செல்போன் உபயோகப்படுத்த தடை செய்யப்பட்டு உள்ளது.
    • உணவு பண்டத்தில் கஞ்சா மறைத்து வைத்து கைதிக்கு கொடுத்ததாக ஜெயில் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

    கோவை:

    கோவை மத்திய ஜெயிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஜெயிலுக்குள், பீடி, சிகரெட், கஞ்சா, செல்போன் உபயோகப்படுத்த தடை செய்யப்பட்டு உள்ளது.

    ஜெயிலில் கைதிகள் செல்போன், கஞ்சா, பீடி, சிகரட் ஆகியவற்றை மறைத்து வைத்து பயன்படுத்துகிறார்களா? என ஜெயில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், கைதிகளை பார்க்க ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பார்வையாளர்கள், உறவினர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    அப்போது போலீசார் பாதுகாப்புடன் உறவினர்கள் கைதிகளுடன் பேசுவதற்கும், உணவு பண்டங்களை கொடுப்பதற்கும் நேரம் ஒதுக்கப்படுகின்றது.

    இதேபோல், நேற்று முன்தினமும் கைதிகளை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது யாரோ 2 பேர் ஜெயிலுக்கு உணவு பண்டத்தில் கஞ்சா மறைத்து வைத்து கைதிக்கு கொடுத்ததாக ஜெயில் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இந்த தகவலின் பேரில், மத்திய ஜெயில் ஜெயிலர் சிவராஜன் தலைமையிலான போலீசார் தண்டனை கைதிகள் சிலரிடம் பார்வையாளர்கள் கொடுத்த உணவு பண்டங்களை வாங்கி சோதனை செய்தார்.

    ஜெயிலில் தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த முஜிபுர் ரகுமான், ரோஷன் பரீத் ஆகியோரிடம் சோதனை செய்த போது அவர்களுக்கு கொடுத்திருந்த பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சா மறைத்து வைத்து கொடுத்து சென்றது தெரியவந்தது.

    அந்த பிஸ்கெட் பாக்கெட்டில் 4 கிராம் கஞ்சா இருந்தது. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது இருவரும் போலீசாரை மிரட்டினர். தொடர்ந்து போலீசார் யார் உங்களுக்கு கஞ்சா கொடுத்தது என முஜிபுர் ரகுமான், ரோஷன் பரீத் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்களை பார்க்க வந்த சிங்காநல்லூர் கக்கன் நகரை சேர்ந்த சேதுராமன், சூர்யபிரகாஷ் ஆகியோர் பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சாவை மறைத்து வைத்து கொடுத்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில், தண்டனை கைதிகளுக்கு பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சாவை மறைத்து வைத்த கொடுத்து சென்ற சேதுராமன், சூர்யபிரகாஷ் மற்றும் கைதிகள் முஜிபுர் ரகுமான், ரோஷன் பரீத் ஆகியோர் மீது போலீசார் போதைப்பொருள் தடுப்பு சட்டம், மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அஜய் மாடசாமி விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
    • கைதான அஜய் மாடசாமி மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி விளாத்தி குளம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் மேற் பார்வையில் விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் வீரசோலை தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரெட்ரிக்ராஜன் மற்றும் தனிப்படை போலீசார் விளாத்திகுளம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கஞ்சா பறிமுதல்

    அப்போது விளாத்திகுளம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் தூத்துக்குடி ஆரோக்கிய புரம், பாலதண்டாயுத நகரை சேர்ந்த அஜய் மாடசாமி என்ற மாடசாமி (வயது 41) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

    உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் மாடசாமி கடந்த ஆண்டு சூரங்குடி போலீஸ் நிலைய எல்லை பகுதியில் 460 கிலோ கஞ்சா மற்றும் 240 லிட்டர் மண்எண்ணை ஆகிய வற்றை 2 சரக்கு வாகனங் களில் கடத்தி வந்த வழக்கில் சம்பந்தப்பட்டு இதுவரை தேடப்பட்டு வந்த நிலையில் தற்போது தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேலும் இவர் மீது ஏற்கனவே தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 3 வழக்குகளும், வடபாகம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 3 வழக்குகளும், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் என 9 வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கஞ்சா விற்பனை செய்யப்ப டுவதாக கோரிமேடு மற்றும் சேதராப்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து சிறு சிறு பொட்ட லங்களாக கட்டி விற்று வந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கஞ்சா நடமாட்டத்தை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடிய வில்லை. இந்த நிலையில் சேதராப்பட்டு மற்றும் துத்திப்பட்டு தொழிற் போட்டை பகுதியில் வட மாநில தொழிலா ளர்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்ப டுவதாக கோரிமேடு மற்றும் சேதராப்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், வெங்கடாசலபதி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ், கோவிந்தராஜ், மற்றும் போலீசார்  துத்துப்பட்டு பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தனர். விசாரணையில் அவர்கள் விழுப்புரத்தை சேர்ந்த அப்பாஸ் 37) வில்லியனூர் பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் 20 என்பதும் இவர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

    மேலும் இவர்களுடன் துத்திப்பட்டை சேர்ந்த பிரதாப் ராஜ் என்ற வெரி பிரதாப் 24, பிலோ என்ற பிலோ மின்தாஸ், சுரேஷ் என்ற சுமன் 23, சுபாஷ் 23 ஆகியோரும் கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது.

    மேலும் விசார ணையில் இவர்கள் ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து சிறு சிறு பொட்ட லங்களாக கட்டி விற்று வந்துள்ளனர்.

    இதை தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களி டமிருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 3 ½ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபோல் புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் மீன் மார்க்கெட் அருகே கஞ்சா விற்ற ஜான்பிலிக்ஸ் 21, ராம்கி 25, மோகன் தாஸ் 23, யோகேஷ் 23 மற்றும் பாலாஜி 22 ஆகிய 5 பேரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 12 ஆயிரம் மதிப்புள்ள 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • தனியார் மருத்துவ கல்லூரி அருகே நின்ற 3 பேரை பிடித்து சோதனை செய்தனர்.
    • தங்களது உபயோகத்துக்கு போக மீதி கஞ்சாவை நண்பர்களுக்கு விற்று வந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கிருமாம் பாக்கத்தில் தனியார் மருத்துவம், என்ஜினீயரிங், நர்சிங் உள்ளிட்ட கல்லூரிகள் இயங்கி வருகிறது.

    கிருமாம்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா சப்ளை செய்வதாக தொடர் புகார் எழுந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் உள்ளிட்டோர் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் அந்த பகுதியிலிருந்த தனியார் மருத்துவ கல்லூரி அருகே நின்ற 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களில் 2 பேர் டாக்டர்கள் என்பது தெரியவந்தது.

    சென்னையை சேர்ந்த பல் டாக்டர் குற்றாலீஸ்வரன்(29), புதுச்சேரி கோரிமேட்டை சேர்ந்த டாக்டர் கார்த்திகேயன்(26) மற்றும் கடலூர் மாவட்டம் அன்னவல்லி கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் ரவிக்குமார்(29) என தெரியவந்தது.

    ரவிக்குமார் ரெட்டிச் சாவடியில் ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது டாக்டர்கள் குற்றாலீஸ்வரனும் கார்த்திகேயனும் டீ கடைக்கு வரும்போது அவர்களுடன் என்ஜினீயர் ரவிக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    3 பேரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான இவர்கள் முதலில் ஆரோவில் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.

    அதன்பிறகு தங்களது உபயோகத்துக்கு போக மீதி கஞ்சாவை நண்பர்களுக்கு விற்று வந்துள்ளனர். அதில் நல்ல வருமானம் கிடைக்கவே சென்னையை சேர்ந்த கஞ்சா வியாபாரி விக்னேசிடம் கிலோ கணக்கில் கஞ்சா வாங்கி வந்து சிறு சிறு பொட்டலங்களாக கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா, ரூ.21 ஆயிரம் ரொக்கம், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

    • ரெயிலில் வந்த பயணிகள் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர்.
    • வாலிபர் 8 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணிகள் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்ற வாலிபர் 8 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • பெருமாநல்லூர்-ஈரோடு சாலையில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கைப்பைகளில் கஞ்சா மறைத்து வைத்து விற்று வருவது தெரியவந்தது

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் அடுத்த பெருமாநல்லூர்-ஈரோடு சாலையில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, சப் இன்ஸ்பெக்டர்கள் அன்பரசன், உமா மகேஷ்வரி உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ரகசியமான இடத்தில் பதுங்கி இருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள், வைத்திருந்த கைப்பைகளில் கஞ்சா மறைத்து வைத்து விற்று வருவது தெரியவந்தது.

    அவர்கள் ஒடிசாவை சேர்ந்த சுபீர் பாணி(வயது 34), அனாதி தலபெஹெரா(21), சனுஜரான(23) மற்றும் 17 வயதுக்கு உள்பட்ட சிறுவன் என்பதும் தெரிய வந்தது. இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    ×