search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganguly"

    ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலியை வாழ்த்த வார்த்தைகள் இல்லை என்று கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார். #ViratKohli #INDvWI
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் அசத்தி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டு ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

    நேற்றைய விசாகப்பட்டினம் போட்டியில் 157 ரன்கள் குவித்தார். 81 ரன்கள் எடுத்திருந்தபோது 205 இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை கடந்து அதிகவேகமாக அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    சாதனைப் படைத்துள்ள விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத் தலைவரும் ஆன சவுரவ் கங்குலி, விராட் கோலி ஆட்டத்தை பற்றிக்கூற வார்த்தைகள் இல்லை என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

    விராட் கோலி குறித்து சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘விராட் கோலியின் ஆட்டத்தை வாழ்த்த எனக்கு வார்த்தைகளே இல்லை. விசாகப்பட்டினம் ஆடுகளம் வித்தியாசமானதாக இருந்தது. சூழ்நிலையிலும் மாறுபட்டிருந்தது. ஆனால், விராட் கோலி ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்விட்டார். விராட் கோலியின் சதம் மிகவும் சிறப்பான ஆட்டம்’’ என்றார்.
    வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். #INDvWI
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் மோசமாக ஆடிய தவான், முரளி விஜய் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    கர்நாடக புதுமுக வீரர் மயாங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இளம் வீரரான ப்ரித்வி ஷா அணியில் இடம்பிடித்துள்ளார். ஆசிய கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மா தொடர்ந்து டெஸ்ட் அணியில் ஓரங்கட்டப்பட்டார்.

    இந்த நிலையில் டெஸ்ட் அணியில் ரோகித் சர்மாவை சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கங்குலி தெரிவித்துள்ளார்.



    இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஆசிய கோப்பையை ரோகித் சர்மாவும், அவரது அணி வீரர்களும் பெற்றது சிறந்ததாகும். ஒவ்வொரு முறையும் டெஸ்ட் அணி அறிவிக்கப்படும்போது ரோகித் சர்மா பெயர் இடம் பெறாமல் போகும். இது எனக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது. அவர் விதிவிலக்கானவர். ரோகித் சர்மா டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெறுவது வெகு தொலைவில் இல்லை.

    இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.

    ரோகித் சர்மா கடைசியாக தென் ஆப்பிரிக்காவில் ஜனவரி மாதம் நடந்த டெஸ்டில் விளையாடினார். முதல் 2 டெஸ்டில் அவர் முறையே 10, 11, 10 மற்றும் 47 ரன்களை எடுத்தார். இதனால் 3-வது டெஸ்டில் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் இடம் பெறவில்லை. தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் அணிக்கு பாதிப்பு இல்லை என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். #AsiaCup2108 #ViratKohli
    கொல்கத்தா:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், ஆங்காங் அணிகள் அந்த பிரிவில் உள்ளன.

    இந்திய அணி இன்று ஆங்காங்கையும், நாளை பாகிஸ்தானையும் சந்திக்கிறது. கேப்டன் விராட் கோலிக்கு இந்தப் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

    கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒளிபரப்பு நிறுவனம் இது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று புகார் அளித்தது.

    அணி தேர்வு தொடர்பான வி‌ஷயத்தில் யாரும் தலையிட முடியாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பதிலடி கொடுத்து இருந்தது.

    ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கோலி இல்லாததால் பாதகமாக அமையலாம் என்ற விவாதம் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் விராட் கோலி இல்லாததால் அணிக்கு பாதிப்பு இல்லை என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கங்குலி தெரிவித்துள்ளார்.


    விராட் கோலி அணியில் இல்லாதது பாதிப்பு இல்லை. அவர் இல்லாவிட்டாலும் இந்திய அணி சிறப்பானது தான். இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதற்கிடையே ஆசிய கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரரும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். #AsiaCup2108 #ViratKohli #Ganguly
    ரவி சாஸ்திரியுடன் பேசிய பிறகே பேட்டிங் ஆலோசகரில் இருந்து ராகுல் டிராவிட் விலகினார் என்று கங்குலி அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு உள்ளார். #RaviShastri #Ganguly #Dravid
    மும்பை:

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்ததால் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

    ஷேவாக், முன்னாள் கேப்டன் கங்குலி ஆகியோர் அவரை நேரிடையாகவே விமர்சனம் செய்தனர்.

    இந்திய அணியின் பேட்டிங் சீர்குலைவுக்கு ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய்பாங்கர் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என்று கங்குலி சாடி இருந்தார்.

    இந்த நிலையில் ரவி சாஸ்திரியுடன் பேசிய பிறகே பேட்டிங் ஆலோசகரில் இருந்து ராகுல் டிராவிட் விலகினார் என்று கங்குலி அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு உள்ளார்.

    கிரிக்கெட் ஆலோசனை குழுவில் இடம் பெற்று இருந்த தெண்டுல்கர், கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் ரவிசாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்தனர். பின்னர் வெளிநாட்டு பயணங்களில் டிராவிட்டை பேட்டிங் ஆலோசகராகவும், ஜாகீர்கானை பந்து வீச்சு ஆலோசகர்களாகவும் நியமிக்க பரிந்துரை செய்தனர். ஆனால் கிரிக்கெட் வாரியத்தை நிர்வகித்து வரும் சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட குழுவானது ரவி சாஸ்திரி நியமனத்தை மட்டுமே உறுதி செய்தது.

    இது தொடர்பாக கங்குலி தற்போது கூறியதாவது:-

    பேட்டிங் ஆலோசகராக இருக்குமாறு ராகுல் டிராவிட்டை கேட்டுக் கொண்டோம். அவரும் அதை ஒப்புக் கொண்டார். ஆனால் ரவிசாஸ்திரியிடம் பேசிய பிறகு அவர் பேட்டிங் ஆலோசகரில் இருந்து விலகினார். என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை.



    பி.சி.சி.ஐ.யின் நிர்வாக குழுவும் பயிற்சியாளர் தேர்வில் குழப்பத்தை விளைவித்தது. இதனால் நாங்கள் சோர்வடைந்தோம். அதன் பின்னர் நாங்கள் அதில் இருந்து வெளியே வந்துவிட்டோம்.

    பேட்டிங் ஆலோசகராக டிராவிட் வராததற்கு நான் காரணம் சொல்வது கடினம்.

    இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.  #RaviShastri #Ganguly #Dravid
    இந்தியாவின் தலைசிறந்த டெஸ்ட் அணி வீரரான விவிஎஸ் லட்சுமணன், கடந்த 25 ஆண்டு கால இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணியை வெளியிட்டுள்ளார்.
    இந்திய டெஸ்ட் அணியின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் விவிஎஸ் லட்சுமண். இவர் கடந்த 1993-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை இந்திய டெஸ்ட் அணியில் பல்வேறு காலங்களில் விளையாடிய வீரர்களைத் தேர்வு செய்து 11 பேர் கொண்ட டெஸ்ட் அணியை வடிவமைத்துள்ளார்.

    டெஸ்ட் போட்டிகளைப் பொருத்தவரை இந்திய கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே அதாவது, கங்குலி தலைமையில் இருந்து இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணி 15 டெஸ்ட் போட்டிகளுக்கு மேலாகத் தோல்வியை சந்திக்காமல் பயணித்து வந்த நிலையில், அவர்களின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது கங்குலி தலைமையிலான இந்திய அணிதான்.

    அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்துக்கும் இந்திய அணி முன்னேறியது. கங்குலி தலைமைக்குப்பின் வந்த தோனி தலைமையிலும், தற்போது விராட் கோலி தலைமையிலும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகவே இந்திய அணி செயல்பட்டு வருகிறது.

    இந்த 25 ஆண்டுகளில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கங்குலி, விராட் கோலி, தோனி என எண்ணற்ற பேட்ஸ்மேன்கள், ஸ்ரீநாத், ஜாகீர்கான், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், அஸ்வின் போன்ற பந்து வீச்சாளர்கள் வந்து சென்றுள்ளனர். விவிஎஸ் லட்சுமண் இவர்களில் இருந்து சிறந்த 11 பேர் கொண்ட டெஸ்ட் அணியைத் தேர்வு செய்துள்ளார்.



    இதில் வீரேந்திர சேவாக், முரளி விஜய் ஆகியோரைச் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாகத் தேர்வு செய்துள்ளார். 3-வது வீரராக ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படும் டிராவிட் டெஸ்ட் போட்டியில் மிகச்சிறந்த வீரர் என்று அழைக்கப்படக்கூடியவர். 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டிராவிட், 13, ஆயிரத்து 288 ரன்கள் சேர்த்துள்ளார். இவரின் சராசரி 52.31 ரன்களாகும்.

    4-வது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் வழக்கம்போல் களமிறங்க லட்சுமண் ஆசைப்பட்டுள்ளார். கிரிக்கெட்டில் லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் 51 சதங்களுடன் 15921 ரன்கள் குவித்தவர். நடுவரிசையில் கங்குலி, விராட் கோலி, விக்கெட் கீப்பராக மகேந்திரசிங் தோனி ஆகிய சிறந்த வீரர்களை தேர்வுசெய்துள்ளார்.



    பந்து வீச்சாளர்களில் தற்போதுள்ள இந்திய அணியில் இருந்து புவனேஷ்வர் குமாரை மட்டுமே தேர்வு செய்துள்ளார். அணியில் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சில் ஸ்ரீநாத், ஜாகீர்கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கங்குலியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.

    அணி வீரர்கள் விவரம்:-

    வீரேந்திர சேவாக், முரளி விஜய், ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி (கேப்டன்), எம்எஸ் டோனி, விராட் கோலி, அனில் கும்ப்ளே, புவனேஸ்வர் குமார், ஸ்ரீநாத், ஜாகீர்கான்.
    கேப்டன் பதவியில் அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலியை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி 2-வது இடத்தை பிடித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. இதில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 1-2 என பின்தங்கி தொடரை லைவ் ஆக வைத்துள்ளது.

    விராட் கோலி கேப்டன் பதவியில் இது 22-வது வெற்றியாகும். இதன்மூலம் கேப்டனாக அதிக வெற்றி பெற்ற 2-வது இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். கங்குலி தலைமையில் இந்திய அணி 49 போட்டிகளில் 21 வெற்றி, 13 தோல்வியை சந்தித்துள்ளது.



    விராட் கோலி தலைமையில் இந்திய அணி 38 போட்டிகளில் 22 வெற்றி, 7-ல் தோல்வியை சந்தித்துள்ளது. டோனி தலைமையில் இந்தியா 60 போட்டிகளில் 27 வெற்றி, 18 தோல்விகளை சந்தித்துள்ளது.

    அசாருதீன் தலைமையில் இந்தியா 47 போட்டிகளில் 14-ல் வெற்றி பெற்றுள்ளது. கவாஸ்கர் தலைமையில் 47 போட்டியில் 9-ல் வெற்றி பெற்றுள்ளது. பட்டோடி தலைமையில் இந்தியா 40 போட்டியில் 9 வெற்றி பெற்றுள்ளது.
    ரகானே அல்லது கேஎல் ராகுல் ஆகியோரில் ஒருவருக்கு 4-வது இடம் கொடுக்காதது குறித்து திலிப் வெங்சர்கார் விமர்சனம் எழுப்பியுள்ளார். #rahane #KLRahul
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இங்கிலாந்து 2-1 என வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும், அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது.

    ஒருநாள் கிரிக்கெட் அணியில் தொடக்க வீரர்களான தவான், ரோகித் சர்மா மற்றும் 3-வது வீரராக களம் இறங்கும் விராட் கோலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இவர்கள் சொதப்பினால் ஒட்டு மொத்தமாக அணி சொதப்பி விடுகிறது. 4-வது இடத்திற்கு சரியான நபரை இந்திய அணி இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

    இதனால் இந்தியா தோல்வியடைந்து வருகிறது. இப்படி சென்றால் உலகக்கோப்பையில் இந்தியா கோப்பையை வெல்வது கடினமாகிவிடும். 4-வது இடத்திற்கு ரகானே அல்லது கேஎல் ராகுலை தயார் செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர் கங்குலி விமர்சனம் செய்திருந்தார்.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வளாரும் ஆன திலிப் வெங்சர்காரும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து திலிப் வெங்சர்கார் கூறுகையில் ‘‘நம்பர் 3 மற்றும் 4 ஒருநாள் கிரிக்கெட்டில் முக்கியமான இடம். நம்பர் 4 இடத்திற்கு சரியான நபர் கிடைக்கவில்லை என்பது மோசமான தேர்வை காட்டுகிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரகானே அல்லது கேஎல் ராகுலை அந்த இடத்திற்கான வாய்ப்பில் இருந்து நீங்கள் எப்படி தவிர்க்க முடியும்?.



    ஒருநாள் போட்டிக்கு ரகானே தகுதி பெற முடியாது என்றால், அங்கு உங்கள் கண்ணை விட வேறு ஏதோ அங்கிருக்கிறது என்பதுதான் அர்த்தம். ஆப்கானிஸ்தானிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து அவர் எப்படி நீக்க முடியும்?.

    இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரகானே மீது நீங்கள் எப்படி நம்பிக்கை வைக்க முடியாமல் போனது?. நீங்கள் மியூசிக் சேர் ஆட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தால் பின்னர், டாப் வீரர்களின் நம்பிக்கை சீர்குலைக்கப்படும். இது வருங்காலத்திற்கு நல்லதல்ல. கேஎல் ராகுலை 4வது இடத்தில் நிலையாக களம் இறக்காதது, அவரை போன்ற குவாலிட்டி பேட்ஸ்மேன்களுக்கு நல்லதல்ல’’ என்றார்.
    மாஸ்கோவில் இன்றிரவு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை காண கங்குலி ரஷியா சென்றுள்ளார். #WorldCup2018 #Russia
    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி மாஸ்கோவில் உள்ள லுஸ்னிக்கி மைதானத்தில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியை காண உலகில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் மாஸ்கோ சென்றுள்ளனர்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இடது கை பேட்ஸ்மேனும் ஆன கங்குலி கால்பந்து போட்டியின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் இங்கிலாந்து - இந்தியா இடையிலான கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக மாஸ்கோ சென்றுள்ளார். இதை கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    வங்கப்புலி, தாதா என செல்லமாக அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று தனது 47வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். #HappyBirthdayDada
    கொல்கத்தா :

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் பிறந்த நாள் இன்று... இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டனான கங்குலி, கேப்டன் என்பதையும் தாண்டி, இந்திய அணியின் காட்ஃபாதராய் விளங்கியவர்.

    ஓய்வுபெற்று 8 ஆண்டுகளாகியும், இந்தியாவில் கிரிக்கெட் மட்டைகள் சுழலும் இடங்களிலெல்லாம் ‘தாதா என்ற கோஷம் இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்திய வீரர்களுக்கு ஆடுகளத்தில் ஆக்ரோஷத்தை கற்றுக்கொடுத்த அவருக்கு பல்வேறு பிரபலங்களும் முன்னாள் இன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களும்இன்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரான விரேந்திர சேவாக் அவருக்கே உரிய பாணியில், கங்குலி பேட்டிங் செய்யும் புகைப்படம், கங்குலி அடித்த பந்து பார்வையாளர் மீது பட்டு அவர் தலையில் ரத்தம் வரும் புகைப்படம், பந்துவீசும்போது காற்றில் கலைந்த முடியுடன் இருக்கும் கங்குல் மற்றும் லார்ட்ஸ் மைதானத்தில் சட்டை கழட்டி சுழற்றிய புகைப்படம் உள்பட நான்கு படங்களை ட்விட்டரில் பதிவிட்டு கங்குலிக்கு வித்தியாசமாக 4 படிகளில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    படி 1: எழுந்திரு, கண்களை இருமுறை சிமிட்டி களத்தில் இறங்கி ஆடு.
    படி 2: பந்துவீச்சாளர்களை மட்டுமல்லாது பார்வையாளர்களையும் அடித்து நொறுக்கிடு. (வன்முறையை குறிப்பிடவில்லை)
    படி 3: உன் பேட் மட்டும் சுழலவில்லை உத்வேகத்தோட்டு நீ பந்து வீசும் போது உன் தலைமுடியும் சுழலும்.
    படி 4: யாருமே பார்க்கவில்லை என்பது போல் வெற்றியை கொண்டாடு.

    இவ்வாறு சேவாக் பதிவிட்டுள்ளார். #HappyBirthdayDada
    அயர்லாந்து, இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்து ரஹானே நீக்கம் செய்யப்பட்டது கடினமான முடிவாகும் என்று கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். #Rahane #Ganguly
    கொல்கத்தா:

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரஹானே, அயர்லாந்து 20 ஓவர் தொடர் மற்றும் இங்கிலாந்தில் நடைபெறும் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

    இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவிக்கையில், ‘ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியில் இருந்து ரஹானே நீக்கம் செய்யப்பட்டது கடினமான முடிவாகும். நான் தேர்வாளராக இருந்தால் அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக ரஹானேவை தான் தேர்வு செய்து இருப்பேன். அம்பத்தி ராயுடுவை விட இங்கிலாந்து சூழ்நிலையில் ரஹானே சிறப்பாக செயல்படக்கூடியவர்.

    இங்கிலாந்து ஆடுகளங்களில் ரஹானே நல்ல சாதனை படைத்து இருக்கிறார்’ என்றார். #Rahane #Ganguly #ENGvIND
    ×