search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free cycle"

    • ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு தலைமை தாங்கி 290 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.

    தொடர்ந்து அவர் 290 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லதுரை, நகர செயலாளர் நெல்சன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், தொழிலதிபர் மணிகண்டன், மோகன்லால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தலைமை ஆசிரியர் கிறிஸ்டல் மேரி வரவேற்றார். மாணவி ஜென்ஸி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் செந்தாமரை செல்வி நன்றி கூறினார்.

    • மாநில வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதில் முதலமைச்சர் முழு கவனம் செலுத்தி வருகின்றார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் சங்கரன்கோவில் ராஜா, வாசுதேவநல்லூர் சதன் திருமலை குமார், வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகர், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கபீர் வரவேற்றார். சங்கர்ராம் தொகுத்து வழங்கினார்.

    இதில் மாநில வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மாணவ- மாணவிகளின் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறார். இன்று தென்காசி மாவட்டத்தில் 15, 157 பேர் மாணவ மாணவிகளுக்கு ரூ. 7 கோடி 69 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி ெதாடங்கப்பட்டுள்ளது.

    மாணவர்கள் வீட்டு சுமை உள்ளிட்ட எந்தவித கவலைகளும் இல்லாமல் படிப்பில் மட்டுமே முழு கவனத்தை செலுத்தக்கூடிய வயதாகும். உங்களின் ஒரே முயற்சி படிப்பில் தனி கவனம் செலுத்தி 12-ம் வகுப்பு தேர்வில் நன்றாக மதிப்பெண்கள் எடுத்து வெளியே செல்ல வேண்டும். தற்போது மாணவ மாணவிகளின் மருத்துவக் கனவு என்பதை மத்திய அரசு நீட் தேர்வு மூலம் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்காத வகையில் கஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.தமிழக முதல்வர் நீட் என்பதை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றார்.


    இன்னும் சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதில் முதலமைச்சர் முழு கவனம் செலுத்தி வருகின்றார். எனவே மாணவ, மாணவிகள் தற்போது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நீட் தேர்வு உள்ளதால் பிளஸ்-2 படிக்கும் பொழுதே நீட்டிற்கான பயிற்சியும் எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நீட் முழுமையாக தமிழ்நாட்டில் விலக்கு அளிக்கப்படும் நிலையில் பிளஸ் -2 தேர்வில் நன்றாக மதிப்பெண் எடுக்கும் மாணவ, மாணவிகள் எளிதாக மருத்துவப் படிப்புக்கு செல்லும் சூழ்நிலை உருவாகும்.

    மேலும் படித்த மாணவ- மாணவிகளுக்கு வேலைவாய்ப்பினை பெருக்கும் வகையில் முதலமைச்சர் பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து தமிழகத்தில் இன்று பல்வேறு தொழிற்சாலைகள் வர உள்ளன. மாணவர்கள் பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்து வேலைவாய்ப்பை எளிதாக பெரும் வகையில் தற்போதைய அரசு செயல்பட்டு வருகின்றது. எனவே மாணவ- மாணவிகள் படிப்பு ஒன்றே குறிக்கோளாக கொண்டு படிப்பில் சாதனை செய்ய வேண்டும் என்றார்.


    இதில் ஒன்றிய செய லாளர்கள் பெரியதுரை, மதிமாரிமுத்து, பூசை பாண்டியன், சங்கரன்கோவில் யூனியன் துணைத் தலைவர் செல்வி, சங்கரன்கோவில் ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமார், மாவட்ட மகளிர்அணி அமைப்பாளர் முத்துச்செல்வி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா, நகர நிர்வாகிகள் மாரிச்சாமி, பிரகாஷ், குவளைகண்ணி பஞ்சாயத்து தலைவர் தினேஷ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நாராயணன், சங்கரன்கோவில் கல்வி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் குமார் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ்ராஜன் நன்றி கூறினார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
    • 11-ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு 323 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 42 ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை நுங்கம்பாக்கம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு 323 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 42 ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, என். கயல்விழி செல்வராஜ், மேயர் ஆர்.பிரியா, எம்.எல்.ஏ. நா. எழிலன், துணை மேயர் மு. மகேஷ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த ஆட்சியில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து சைக்கிள்கள் வாங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் மற்றொரு நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டுள்ளன.
    • நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய இரு கல்வி மாவட்டங்களிலும் சோ்த்து மொத்தம் 12,969 சைக்கிள்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

    நாமக்கல்:

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ்- 1 மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் அரசு சாா்பில் இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக மாணவா்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில், 2021-22 ம் ஆண்டுக்கு சைக்கிள்கள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆட்சியில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து சைக்கிள்கள் வாங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் மற்றொரு நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டுள்ளன.

    உதிரிபாகங்களை இணைத்து சைக்கிள்கள் தயாா் செய்யும் பணியில் வட மாநிலத் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய இரு கல்வி மாவட்டங்களிலும் சோ்த்து மொத்தம் 12,969 சைக்கிள்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

    கடந்த ஆட்சியில் பச்சை வண்ணத்தில் இருந்த சைக்கிள்கள் தற்போது நீல வண்ணத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழக முதல்-அமைச்சர், சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தவுடன், நாமக்கல் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் வாரியாக மாணவா்களுக்கு வழங்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    அரியலூர் மாவட்டத்தில் 4,613 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
    அரியலூர்:

    தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

    விழாவிற்கு ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மகிமைபுரம் சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 2,356 மாணவ, மாணவிகளுக்கும், அரியலூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 2,257 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 4,613 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

    விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, திருச்சி ஆவின் துணைத்தலைவர் தங்க.பிச்சைமுத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிவண்ணன் (பொறுப்பு) (உடையார்பாளையம்), செல்வராசு (அரியலூர்), வெற்றிச்செல்வி (செந்துறை), பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் சங்கர், முத்தையன், தலைமையாசிரியர்கள் சாமிதுரை, அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    பள்ளிப்பட்டு அருகே அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்களது சொந்த செலவில் இலவச சைக்கிள்களை வாங்கி தெலுங்கு ஆசிரியர்கள் வழங்கினர்.
    பள்ளிப்பட்டு:

    பள்ளிப்பட்டை அடுத்த அத்திமாஞ்சேரிப் பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 850 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    தனியார் பள்ளிகள் ஆதிக்கத்தால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அத்திமாஞ்சேரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தெலுங்கு பாடப்பிரிவில் மாணவர்கள் சேருவது குறைவாக இருந்தது. இதனால் 6-ம் வகுப்பில் தெலுங்கு பாட பிரிவில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தெலுங்கு இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.

    மேலும் அத்திமாஞ்சேரி பேட்டை சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வர போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் படிப்பை தொடர முடியாத நிலை இருந்தது.

    இதையடுத்து அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்களது சொந்த செலவில் இலவச சைக்கிள்களை வாங்கி தெலுங்கு ஆசிரியர்கள் வழங்கினர்.

    6-ம் வகுப்பு தெலுங்கு பாடபிரிவில் சேர்ந்த 2 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் தேவ சகாயம் முன்னிலையில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

    இது குறித்து தெலுங்கு ஆசிரியர்கள் கூறுகையில், “தற்போது தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்பும் சூழல் இருப்பதால், கிராம பகுதிகளில் இருந்து மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கினால் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்ற நோக்கத்தோடு இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது” என்றனர். #Tamilnews
    ×