என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆலங்குளம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
  X

  இலவச சைக்கிளை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் வழங்கிய காட்சி. அருகில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, தொழிலதிபர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

  ஆலங்குளம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு தலைமை தாங்கி 290 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.

  ஆலங்குளம்:

  ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.

  தொடர்ந்து அவர் 290 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லதுரை, நகர செயலாளர் நெல்சன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், தொழிலதிபர் மணிகண்டன், மோகன்லால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  தலைமை ஆசிரியர் கிறிஸ்டல் மேரி வரவேற்றார். மாணவி ஜென்ஸி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் செந்தாமரை செல்வி நன்றி கூறினார்.

  Next Story
  ×