search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்கள் நலனில் முதல்-அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்-அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேச்சு
    X

    மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கிபோது எடுத்தபடம்


    மாணவர்கள் நலனில் முதல்-அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்-அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேச்சு

    • மாநில வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதில் முதலமைச்சர் முழு கவனம் செலுத்தி வருகின்றார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் சங்கரன்கோவில் ராஜா, வாசுதேவநல்லூர் சதன் திருமலை குமார், வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகர், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கபீர் வரவேற்றார். சங்கர்ராம் தொகுத்து வழங்கினார்.

    இதில் மாநில வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மாணவ- மாணவிகளின் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறார். இன்று தென்காசி மாவட்டத்தில் 15, 157 பேர் மாணவ மாணவிகளுக்கு ரூ. 7 கோடி 69 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி ெதாடங்கப்பட்டுள்ளது.

    மாணவர்கள் வீட்டு சுமை உள்ளிட்ட எந்தவித கவலைகளும் இல்லாமல் படிப்பில் மட்டுமே முழு கவனத்தை செலுத்தக்கூடிய வயதாகும். உங்களின் ஒரே முயற்சி படிப்பில் தனி கவனம் செலுத்தி 12-ம் வகுப்பு தேர்வில் நன்றாக மதிப்பெண்கள் எடுத்து வெளியே செல்ல வேண்டும். தற்போது மாணவ மாணவிகளின் மருத்துவக் கனவு என்பதை மத்திய அரசு நீட் தேர்வு மூலம் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்காத வகையில் கஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.தமிழக முதல்வர் நீட் என்பதை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றார்.


    இன்னும் சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதில் முதலமைச்சர் முழு கவனம் செலுத்தி வருகின்றார். எனவே மாணவ, மாணவிகள் தற்போது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நீட் தேர்வு உள்ளதால் பிளஸ்-2 படிக்கும் பொழுதே நீட்டிற்கான பயிற்சியும் எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நீட் முழுமையாக தமிழ்நாட்டில் விலக்கு அளிக்கப்படும் நிலையில் பிளஸ் -2 தேர்வில் நன்றாக மதிப்பெண் எடுக்கும் மாணவ, மாணவிகள் எளிதாக மருத்துவப் படிப்புக்கு செல்லும் சூழ்நிலை உருவாகும்.

    மேலும் படித்த மாணவ- மாணவிகளுக்கு வேலைவாய்ப்பினை பெருக்கும் வகையில் முதலமைச்சர் பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து தமிழகத்தில் இன்று பல்வேறு தொழிற்சாலைகள் வர உள்ளன. மாணவர்கள் பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்து வேலைவாய்ப்பை எளிதாக பெரும் வகையில் தற்போதைய அரசு செயல்பட்டு வருகின்றது. எனவே மாணவ- மாணவிகள் படிப்பு ஒன்றே குறிக்கோளாக கொண்டு படிப்பில் சாதனை செய்ய வேண்டும் என்றார்.


    இதில் ஒன்றிய செய லாளர்கள் பெரியதுரை, மதிமாரிமுத்து, பூசை பாண்டியன், சங்கரன்கோவில் யூனியன் துணைத் தலைவர் செல்வி, சங்கரன்கோவில் ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமார், மாவட்ட மகளிர்அணி அமைப்பாளர் முத்துச்செல்வி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா, நகர நிர்வாகிகள் மாரிச்சாமி, பிரகாஷ், குவளைகண்ணி பஞ்சாயத்து தலைவர் தினேஷ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நாராயணன், சங்கரன்கோவில் கல்வி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் குமார் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ்ராஜன் நன்றி கூறினார்.


    Next Story
    ×