search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer murder"

    • கொலை நடந்த இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
    • முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது சொத்து தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மறவபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 65). விவசாயி. இவர் நேற்று இரவு தனது தோட்டத்திற்கு சென்றார். அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. மழை பெய்ததால் அவர் வரவில்லை என்று குடும்பத்தினர் அங்கு சென்று பார்க்கவில்லை.

    இந்த நிலையில் நல்லதம்பி இன்று காலை வரை வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிய வந்தது.

    இதுபற்றி நல்லதம்பியின் மகன், பாலமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட நல்லதம்பி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை நடந்த இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் மோப்பநாய் மூலம் துப்புதுலக்கப்பட்டது.

    இந்த கொலை எதற்காக நடைபெற்றது? என்பது தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது சொத்து தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் பாலமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வந்தவாசி அருகே நிலம் சம்பந்தமான முன்விரோதத்தில் அண்ணனை தம்பியை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த அறுவடை தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 51) விவசாயி.

    இவரது சகோதரரர் தாமோதரன் (48) இருவருக்கும் சொந்தமான விவசாய நிலம் அருகில் உள்ள எஸ்.நாவல்பக்கம் ஏரிக்கரை அருகே உள்ளது.

    இதில் நிலத்துக்கு செல்வது சம்பந்தமாக பாலாஜிக்கும் தாமோதரனுக்கு முன்விரோதம் இருந்தது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

    கடந்த மாதம் இரு தரப்பினரும் தெள்ளார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில் நேற்று இரவு பாலாஜி அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவரை அழைத்துக் கொண்டு தனது விவசாய நிலத்தில் பூஜை செய்ததாக தெரிகிறது.

    அங்கு சென்ற தாமோதரன் நிலத்தில் மாந்திரீக பூஜை செய்து விவசாயம் செய்ய முடியாமல் இருக்க செய்வதாக கருதி தனது அண்ணனிடம் தகராறு செய்தார். தாமோதரனுக்கு ஆதரவாக அவரது மனைவி சாந்தா (43) மகன் அமர்நாத் (25) ஆகியோர் ஒன்று சேர்த்து தட்டிக் கேட்டனர்.

    அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தாமோதரன் சரமாரியாக கத்தியால் பாலாஜி தலை உடல் பகுதிகளில் வெட்டினார்.

    இதில் படுகாயமடைந்த பாலாஜி சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தாமோதரன் மற்றும் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.
    திருப்பத்தூர் அருகே கள்ளக்காதல் தகராறில் மர்ம உறுப்பை துண்டித்து விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஏ.கே.மோட்டூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). விவசாயி. இவரது நிலத்தில் பூக்கள், மஞ்சள் பயிரிட்டுள்ளார். தினமும் பூக்களை பறித்து திருப்பத்தூர் டவுனுக்கு சென்று விற்பனை செய்த வந்தார். நேற்று இரவு பூக்களை விற்பனை செய்துவிட்டு ஏ.கே.மோட்டூர் ஏரிக்கரை வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    அப்போது கும்பல் ஒன்று அவரை வழிமறித்து கத்தியால் கழுத்து, கைகளில் வெட்டி சாய்த்தது. மேலும் அவரின் மர்ம உறுப்பை துண்டித்து வீசியுள்ளனர். படுகாயமடைந்த சிவக்குமார் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார்.

    அவர் பிணமாக கிடந்ததை கண்ட பொதுமக்கள் திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனையிட்டனர்.

    உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையான சிவக்குமாருக்கு தனலெட்சுமி (35) மனைவி மற்றும் 2 மகள் ஒரு மகன் உள்ளனர். அவருக்கு முன் விரோதிகள் உள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் வேறு ஏதாவது காரணத்துக்காக கொலை நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணையில் இறங்கினர். அதில் சிவக்குமாருக்கு அவரது நிலத்தில் வேலை செய்து வந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.

    அந்த பெண்ணுக்கும் புதுபூங்குளம் கிராமத்தை சேர்ந்த காண்ட்ராக்டர் ஒருவருடன் தொடர்பு இருந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அந்த காண்ட்ராக்டரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews
    கடம்பூர் அருகே பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பை விவசாயி கண்டித்ததால் அவரை கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே மேலபாறைப்பட்டி கீழ தெருவைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை (வயது 55), விவசாயி. இவருடைய மனைவி ஆனந்தம்மாள். இவர்களுக்கு ஹரி கிருஷ்ணன் (31) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஹரி கிருஷ்ணன் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். அண்ணாத்துரை, ஆனந்தம்மாள் ஆகிய 2 பேரும் தங்களது வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அண்ணாத்துரை தனது வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த மர்மநபர்கள் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இந்த விசாரணையில், அண்ணாத்துரையை கொலை செய்தது, பக்கத்து ஊரான மும்மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் முத்து மாரியப்பன் (33), அவருடைய உறவினர்களான பாலசுப்பிரமணியன் என்ற சேகர் (35), கருப்பசாமி (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ஹரிகிருஷ்ணனின் மனைவி பிரேமாவுக்கும் முத்துமாரியப்பனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. இதை கண்டித்ததால் அண்ணாதுரையை  கொலை செய்ததாக கைதான முத்து மாரியப்பன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

    கைதான முத்து மாரியப்பன், பால சுப்பிரமணியன், கருப்பசாமி ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கோவில்பட்டி 2வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.  தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடம்பூர் அருகே மருமகளின் கள்ளத்தொடர்பை கண்டித்த விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கட்டிட தொழிலாளியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள மேலபாறைப்பட்டி கீழ தெருவைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை (வயது 60) விவசாயி. இவருடைய மனைவி ஆனந்தம் அம்மாள். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் அரிகிருஷ்ணன். அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

    நேற்று இரவு 9 மணி அளவில் அண்ணாத்துரை தனது வீட்டில் கட்டிலில் படுத்து கிடந்தார். மனைவி ஆனந்தம் அம்மாள், அருகில் உள்ள மாட்டு தொழுவத்துக்கு சென்றிருந்தார். அப்போது அண்ணாத்துரையின் வீட்டுக்குள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்மநபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டினர்.

    இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இதுகுறித்து கடம்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட அண்ணாத்துரையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில் பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கொலையாளிகளை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    அண்ணாத்துரையின் மகன் அரிகிருஷ்ணனுக்கும், நெல்லையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் ஆனது. திருமணத்திற்கு பின் அரிகிருஷ்ணன் மனைவியை ஊரில் விட்டு விட்டு அமெரிக்கா சென்றுவிட்டார். இதனால் அரிகிருஷ்ணனின் மனைவி அண்ணாத்துரை வீட்டில் வசித்து வந்தார்.

    அப்போது அவருக்கும் கடம்பூர் அருகே உள்ள மும்மலைபட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்து மாரியப்பன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையறிந்ததும் அண்ணாத்துரை கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. மேலும் ஊருக்கு வந்திருந்த அரிகிருஷ்ணன் இந்த விவகாரத்தை அறிந்து மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதையடுத்து அரிகிருஷ்ணனின் மனைவி அவரை பிரிந்து நெல்லையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்து விட்டார். அரிகிருஷ்ணனும் மீண்டும் அமெரிக்காவுக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் அரிகிருஷ்ணன் தனது மனைவியை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த அவரது கள்ளக்காதலன் முத்து மாரியப்பன் தொடர்ந்து அண்ணாத்துரையிடம் தகராறு செய்து வந்தார்.

    இதுபற்றி அண்ணாத்துரை தரப்பில் கடம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் முத்து மாரியப்பன் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து அண்ணாத்துரையை கொலை செய்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் தொடக்கத்திலேயே முத்து மாரியப்பன் மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலை நடந்திருக்காது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இதனிடையே முத்து மாரியப்பனை இன்று போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் அண்ணாத்துரை கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையில் ஈடுபட்ட மேலும் 2 நபர்கள் யார்? என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews
    கலசபாக்கம் அருகே பணத்தகராறு காரணமாக விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக மருமகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் அருகே உள்ள கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 47). விவசாயி. இவரது மகள் கவிதா (23). இவருக்கும் கீழ்பாலூரை சேர்ந்த ராமசாமி மகன் பிரகாஷ் (28). என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.

    பிரகாஷ் தனது மனைவி கவிதாவுடன் காஞ்சிபுரத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக நேற்று சொந்த ஊருக்கு வந்தனர்.

    கவிதா தனது அம்மாவை பார்த்துவிட்டு வருவதாக கூறி தாய் வீட்டிற்கு சென்றார். சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் பிரகாஷ் அவரை தேடிச் சென்றார்.

    அப்போது பிரகாஷ் தனக்கு பணத்தேவை இருப்பதாக சிவக்குமாரிடம் பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். என்னிடம் பணம் இல்லை என்று சிவக்குமார் கூறியுள்ளார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது.

    இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் கட்டையால் சிவக்குமாரை பயங்கராமாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    அக்கம் பக்கத்தினர் சிவக்குமாரை மீட்டு கடலாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக போளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிவக்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த கடலாடி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாஷ் அவரது அப்பா ராமசாமி அம்மா லட்சுமி உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருநாவலூர் அருகே முன்விரோதத்தில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருநாவலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள பெரும்பாக்கம் காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விவசாயி சாமிக்கண்ணு (வயது 75) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சந்திரசேகர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து சந்திரசேகர் குடும்பத்தினருக்கும், சாமிக்கண்ணு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் முன்விரோதம் ஏற்பட்டது.

    நேற்று மாலையில் சந்திரசேகரின் குடும்பத்தினர் சாமிக்கண்ணுவிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    அப்போது அவர்கள் ஆபாசமாக பேசி சாமிக்கண்ணுவை தாக்கியதாக தெரிகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். வீட்டுக்கு வந்த சாமிக்கண்ணுக்கு திடீரென்று நெஞ்சி வலி ஏற்பட்டது.

    உடனே அவரை வீட்டில் இருந்தவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் சாமிக்கண்ணு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதை கேட்டதும் அவர்கள் கதறி அழுதனர். இது குறித்து சாமிக்கண்ணுவின் மகன் விபூஷ்ணு திருநாவலூர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் எங்கள் குடும்பத்துக்கும், சந்திரசேகர் குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அவர்கள் எனது தந்தையிடம் தகராறு செய்து அடித்து தாக்கியுள்ளனர். இதனால் அவர் இறந்து விட்டார்.

    இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பரணி நாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். பெரும்பாக்கம் காலனி பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் பதிவான காட்சிகளை வைத்து சாமிக்கண்ணுவை அடித்து கொலை செய்தார்களா? அல்லது அவரது சாவில் வேறுஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இறந்துப்போன சாமிக்கண்ணுக்கு, ராணி, சாரதம்மாள் ஆகிய 2 மனைவிகள் உள்ளனர்.
    தண்டராம்பட்டில் விவசாயியை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள கீழ்ராவந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராமன் (வயது 55), விவசாயி. இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு விக்னேஷ் (20) என்ற மகனும், கவுசல்யா, லாவண்யா என்ற 2 மகள்களும் உள்ளனர். கவுசல்யாவுக்கு திருமணமாகி விட்டது. நேற்று முன்தினம் வழக்கம் போல் சுந்தர்ராமன் அருகில் உள்ள அவருக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றார்.

    நள்ளிரவாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த விஜயா நிலத்துக்கு சென்று பார்த்து உள்ளார். அப்போது சுந்தர்ராமன் கழுத்து, கால் உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயா அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் தண்டராம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

    இறந்த சுந்தர்ராமனின் மகன் விக்னேஷ் டிப்ளமோ படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்து உள்ளார். இவர் அடிக்கடி அவரது தந்தை சுந்தர்ராமனிடம் செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் விக்னேஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணை திருமணம் செய்யக் கூடாது என சுந்தரராமன் மறுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    எனவே, விக்னேஷ் தான் தந்தையை கொலை செய்து இருக்க வேண்டும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தந்தையை எந்த காரணத்திற்காக கொலை செய்தார். எப்படி கொலை சம்பவம் நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பளுகல் அருகே தகராறில் விவசாயியை அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    குழித்துறை:

    களியக்காவிளை அருகே பளுகல் இடைக்கோடு காஞ்சிரதட்டு விளையை சேர்ந்தவர் சுபின் (வயது 31). கட்டிட தொழிலாளி.

    இவரது வீட்டின் முன்பு நின்ற சந்தன மரம் ஒன்றை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருட்டுபோனது. இது தொடர்பாக சுபின் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் செல்வதாசுடன் தகராறில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி செல்வதாஸ் தனது மாடு ஒன்றை அந்த பகுதியில் கட்டி இருந்தார். அதை சுபின் பிடித்துக்கொண்டு தனது வீட்டின் அருகே கட்டினார்.

    இதை தட்டி கேட்பதற்காக செல்வதாஸ் அங்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சுபின் உறவினர் செல்வதாசை கம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த செல்வதாஸ் பலத்த காயம் அடைந்தார்.

    அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செல்வதாஸ் தாக்கப்பட்டது குறித்து பளுகல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சுபின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த சுபின் தலைமறைவாகி விட்டார்.

    இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த செல்வதாஸ் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வதாஸ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    செல்வதாஸ் பலியானதை அடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. பலியான செல்வதாசின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.

    சிதம்பரம் அருகே சண்டையை விலக்கச் சென்ற விவசாயி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பெரியபட்டு காட்டுத் தெருவை சேர்ந்தவர் அய்யார்(வயது 74). விவசாயி. இவரது தம்பி கலியபெருமாள். இவரது மகன்கள் ராமசந்திரன்(41), தண்டபாணி(48).

    நேற்று மாலை அய்யார் தனது வயலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பெருமாள் கோவில் அருகே ராமச்சந்திரனும், தண்டபாணியும் மோதலில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டிருந்தனர்.

    இதைபார்த்த அய்யார் ஏன் தகராறு செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று 2 பேரிடமும் கேட்டார். மேலும் அவர்களை சமாதானம் செய்ய முயன்றார்.

    இதில் ஆத்திரமடைந்த ராமச்சந்திரனும், தண்டபாணியும் சேர்ந்து அய்யாரை சரமாரியாக தாக்கினர். மேலும் அங்கு கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் ஓங்கி அடித்தனர்.

    இதில் அய்யாரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அய்யாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நிலை மோசமாக இருந்ததால் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அய்யார் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விவசாயியை தாக்கி கொலை செய்த ராமச்சந்திரன், தண்டபாணி ஆகியோரை கைது செய்தனர்.

    சண்டையை விலக்கச் சென்றவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    செய்யாறு அருகே விவசாயி அடித்து கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்யாறு:

    செய்யாறு அருகே வடதண்டலம் பகுதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 35). விவசாயி. இவரது மனைவி உமா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    நேற்று இரவு விநாயக மூர்த்தி அருகே உள்ள அவரது விவசாய நிலத்திற்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. நிலத்திலே படுத்து தூங்கி இருக்கலாம் என்று குடும்பத்தினர் கருதினர்.

    இந்நிலையில் இன்று காலை விநாயக மூர்த்தியின் தந்தை முனுசாமி விவசாய நிலத்திற்கு சென்றார். அங்கு டிராக்டர் மட்டும் இருந்தது. விநாயமூர்த்தியை காணவில்லை. பக்கத்து நிலத்திற்கு சென்று பார்த்த போது அங்கு விநாயக மூர்த்தி இறந்து கிடந்தார்.

    அதிர்ச்சியடைந்த முனுசாமி இது குறித்து செய்யாறு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை பார்வையிட்டனர். விநாயகமூர்த்தி உடல் முழுவதும் ரத்த காயங்கள் இருந்தன. மேலும் அவரது உடல் அருகே ரத்த கரையுடன் கடப்பாறை இருந்தை கண்டு பிடித்தனர்.

    விநாயகமூர்த்தியை யாரோ அடித்து கொலை செய்து விட்டு பக்கத்து நிலத்தில் வீசி சென்றிருக்கலாம் என்று தெரிய வந்தது. உடலை மீட்ட போலீசார் செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விநாயகமூர்த்தியை முன் விரோத காரணமாக கொலை செய்யபட்டாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விவசாயி அடித்து கொலை செய்யபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    காரியாபட்டி அருகே விவசாயியை எரித்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 60), விவசாயி. இவரது மனைவி மகாலட்சுமி (55).

    இன்று காலை காட்டுப்பகுயில் முட்புதற்களுக்கிடையில் வீரபத்திரன் தலையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார். மேலும் அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.

    இதை பார்த்த அப்பகுதியினர் உடனே மல்லாங் கிணறு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீரபத்திரன் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக வீரபத்திரனின் மனைவி மகாலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

    இதனால் அவர் மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தியதில் கணவரை கொலை செய்ததை மகாலட்சுமி ஒப்புக்கொண்டார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவர் அடிக்கடி துன்புறுத்தியதால் கொலை செய்ததாக மகாலட்சுமி வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    ×