search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer killed"

    வத்தலக்குண்டு அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி மூளை சிதறி பலியானார்.

    வத்தலக்குண்டு:

    தேனி மாவட்டம் போடி நாயக்கனூரைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). விவசாயி. இவருக்கு அங்கீதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். வேலை நிமித்தமாக திண்டுக்கல் வந்து விட்டு மீண்டும் போடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    வத்தலக்குண்டு பைபாஸ் ரோடு பகுதி ருத்ரகாளியம்மன் கோவில் அருகே சென்ற போது தேனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த லாரி பைக் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் முருகேசன் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்து லாரி டிரைவர் பட்டி வீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவைச் சேர்ந்த மணிமுத்து பிச்சையிடம் விசாரித்து வருகின்றனர்.

    வத்தலக்குண்டு பகுதியில் லாரிகள் அதிவேகமாக சென்று வருவதால் விபத்துக்கள் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்ளாததால் வாகனங்கள் விதிகளை மீறி செல்கின்றன.

    சில லாரி டிரைவர்கள் லைசென்ஸ் மற்றும் ஆவணங்கள் இல்லாமல் ஓட்டி வருகின்றனர். எனவே புறநகர் பகுதியில் பேரிகார்டு அமைக்க வேண்டும். விதி மீறி அதி வேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    திருப்பூரில் விவசாயி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர்பாளையம் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ளது ஜி.என். பாலன் நகர். இந்த பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). விவசாயி. இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    சுப்பிரமணியுடன் அவரது மகள் ஸ்வேதா (14) வயது வசித்து வருகிறார். ஸ்வேதா இரவு நேரத்தில் அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் தூங்குவது வழக்கம். சுப்பிரமணியின் தாய் தான் காலை, மாலை சாப்பாடு சமைத்து சுப்பிரமணிக்கு கொடுப்பார்.

    இன்று காலை வழக்கம்போல் மகனுக்கு சாப்பாடு கொடுக்க வீட்டுக்கு சென்றார். வீட்டின் கேட்டு பூட்டப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த தாய் சத்தம்போட்டு அழைத்தார். பதில் எதுவும் வரவில்லை.

    அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுப்பிரமணி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகிறார்கள். சுப்பிரமணி தனியே இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரிடம் பணம், நகை அதிகம் இருக்கும் என்று நுழைந்தபோது கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமங்கலம் அருகே விவசாயி அடித்துக் கொல்லப்பட்டார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரையூர்:

    திருமங்கலத்தை அடுத்த சிந்துப்பட்டி அருகேயுள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் மொக்கமாயன் (வயது 42) விவசாயி.

    குடிப்பழக்கம் உள்ள இவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து குடும்பத் தினருடன் சண்டை போடுவார். இதனை மொக்கமாயனின் தந்தை காசிமாயன் நேற்று முன்தினம் கண்டித்தார்.

    சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் மொக்கமாயன் வி‌ஷம் குடித்து விட்டார் என அவரது மனைவி சத்தம் போட்டார். உடனே அவரை உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மொக்கமாயன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதற்கிடையே மொக்கமாயனின் தாயார் பேச்சியம்மாள் சிந்துப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகனின் நெற்றியிலும் உடலில் சில பாகங்களிலும் காயம் இருந்தது. எனவே அவரை அடித்துக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

    அதன்பேரில் போலீசார் மொக்கமாயனின் மனைவி முத்து, அவரது உறவினர் ஜோன்ஸ் மற்றும் காசிமாயன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    குடியாத்தம் அருகே நிலத்தை தனது பெயருக்கு மாற்றி எழுதி கொடுக்காததால் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி அருகேயுள்ள கதிர்குளம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 75), விவசாயி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு கீதா என்ற மகளும், பாலு என்கிற பாலசந்தர் (45) என்ற மகனும் உள்ளனர்.

    கீதா திருமணமாகி கணவருடன் ஆந்திராவில் வசித்து வருகிறார். ஆட்டோ டிரைவரான பாலு அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    கோபாலுக்கு சொந்தமான விவசாய நிலத்தை தனது பெயருக்கு மாற்றி எழுதி தரும்படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாலு கேட்டுள்ளார். அதற்கு அவர் எழுதி கொடுக்க மறுத்துள்ளார். ஆனாலும் பாலு தொடர்ந்து நிலத்தை மாற்றி தரும்படி வலியுறுத்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலை பாலு தனது தந்தையிடம் சென்று ‘உங்களுக்கு வயதாகி விட்டதால் நிலத்தை எனது பெயருக்கு மாற்றிக் கொடுங்கள்’ என்று கேட்டார் அப்போதும் கோபால் மறுத்துள்ளார்.

    அதனால் ஆத்திரம் அடைந்த பாலு சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    பிற்பகல் 3 மணியளவில் கோபால், தனது வீட்டின் எதிரேயுள்ள மரத்தடியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலு அருகே கிடந்த பாறாங்கல்லை எடுத்து கோபாலின் தலையில் போட்டார். இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, பரதராமி சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருபாகரன், சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக பரதராமி போலீசார் வழக்குப்பதிந்து பாலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூதலூர் அருகே இடம் வாங்கும் பிரச்சினையில் விவசாயியை கழுத்து அறுத்து கொலை செய்த மளிகைக்கடைக்காரரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள இளங்காடு மேலத்தெருவை சேர்ந்த மணி என்கிற மணிவண்ணன்(வயது42). விவசாயி. இவர் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு இளங்காட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள பிள்ளைவாய்க்கால் பாலத்தின் அருகே மணிவண்ணன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து மணிவண்ணன் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை பார்த்து கதறி அழுதனர். 

    திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மணிவண்ணன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மணி வண்ணனை அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மளிகை கடைக்காரர் மோகனவேலு (29) என்பவர் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. மணிவண்ணனுக்கும், மோகனவேலுக்கும் இடையே அப்பகுதியில் ஒரு இடம் வாங்குவது சம்பந்தமாக போட்டி இருந்து வந்தது. இதில் மணிவண்ணன், அந்த இடத்தை அதிக விலை கொடுத்து வாங்கி விட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த மோகனவேலு, தனது அக்காள் மகன் பருத்திக் கோட்டையை சேர்ந்த அரவிந்த் என்பவருடன் சேர்ந்து மணிவண்ணனை கழுத்து அறுத்து கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 

    இதையடுத்து போலீசார் தேடுவதை அறிந்த மோகனவேலு, மளிகை கடையை பூட்டி விட்டு தலை மறைவாகி விட்டார். இதனால் தலைமறைவான மோகன வேலு, மற்றும் வாலிபர் அரவிந்த் ஆகிய 2 பேரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
    கள்ளத்தொடர்புக்கு குறுக்கே இருந்ததால் பெண்ணின் கணவரை கல்லைபோட்டு கொலை செய்தோம் என்று கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அருகே உள்ள மோட்டூரான்கொட்டாய் வீராட்சிகுப்பம் கஞ்சானூர் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டன் (வயது38). விவசாயி.

    இவரது மனைவி விஜயலட்சுமி (32). இவர்களுக்கு சவுமியா (15), சரண்யா (13) என்கிற மகள்களும், சரவணன் (11) என்ற மகனும் உள்ளனர்.

    கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒன்றை வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் கல்லாவி அருகே உள்ள கல் குண்டு இடத்தில் ரெயில்வே தண்டவாளத்தில் கோதண்டன் தலை பகுதி சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    மர்மமான முறையில் அவர் இறந்து கிடக்கும் தகவலை அறிந்த சேலம் ரெயில்வே போலீசார் உடனே அங்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் ரெயில்வே போலீசார் இந்த வழக்கு தொடர்பாக கல்லாவி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் கோதண்டன் தலையில் மர்ம நபர்கள் யாரோ கல்லைப்போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இந்த கொலை தொடர்பாக ஊத்தங்கரை டி.எஸ்.பி. அர்ஜூனன் தனிப்படை அமைத்து கொலையாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    நேற்று சந்தேகத்தின் பேரில் வீராட்சிகுப்பத்தை பகுதியைச் சேர்ந்த பழனிவேல் என்கிற பழநேசன் (27) மற்றும் அவரது நண்பர் கஞ்சனூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் பழனிவேல் என்கிற பழநேசன் விஜயலட்சுமியிடன் ஏற்பட்ட கள்ளகாதலுக்கு கோதண்டன் இடையூறாக இருந்ததால் தனது நண்பர்கள் 3 பேர் உதவியுடன் கொலை செய்தது அவர்கள் தான் என்று தெரியவந்தது.

    மேலும் தொடர்ந்து பழனிவேல் என்கிற பழநேசன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    கோதண்டனும், அவரது மனைவி விஜயலட்சுமியும் கருந்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். இதனை பயன்படுத்திக் கொண்ட நான் விஜயலட்சுமியுடன் பழக்கம் ஏற்படுத்தி கொண்டேன். இதுகுறித்து தகவலறிந்த கோதண்டன் என்னிடம் வந்து தனது மனைவியை சந்திக்க கூடாது என்று கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் கோதண்டனை கொலை செய்ய திட்டமிட்டேன். சம்பவத்தன்று நானும் எனது நண்பர்கள் சக்திவேல், ராஜா, மாது ஆகியோருடன் மது குடித்தோம். பின்னர் 4 பேரும் சேர்ந்து கோதண்டன் தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்று அவரை கல்குண்டு அருகே உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு குண்டு கட்டாக தூக்கி கொண்டு வந்தோம். அங்கு வைத்து கோதண்டன் வாயில் மதுவை ஊற்றினோம்.

    மதுகுடித்த அவர் அங்கேயே மயங்கி கிடந்தார். உடனே நான் அருகில் இருந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு கொலை செய்தேன். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக கோதண்டன் உயிர் இழந்தார். உடனே நானும் எனது நண்பர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டோம் என்று கூறினார்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராஜா, மாது ஆகிய 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கள்ளத்தொடர்புக்கு குறுக்கே இருந்ததால் விஜயலட்சுமியின் கணவரை கல்லைபோட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுக்கோட்டை அருகே இரு தரப்பினர் மோதலில் விவசாயி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள புதுநகர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 40), விவசாயி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவருக்கும் இடத்தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக நேற்று தோட்டத்தில் வைத்து  இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

     அப்போது அங்கு வந்த சங்கரின் தம்பி சித்திரைவேல் (37) இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் ஆத்திரமடைந்த  சுந்தர்ராஜ், அருகில் கிடந்த கம்பை எடுத்து சங்கர் மற்றும் சித்திரைவேல் ஆகியோரை சரமாரி தாக்கினார். பதிலுக்கு அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து சுந்தர்ராஜை  தாக்கினர். 

    இதையடுத்து சுந்தர்ராஜ்  தனது சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவே,  5-க்கும் மேற்பட்டோர் அரிவாள்  உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்து சங்கர் மற்றும் சித்திரைவேல் ஆகியோரை அரிவாளால் 
    வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த 2 பேரையும், அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

    சோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் படுகாயமடைந்த சித்திரைவேலுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரு தரப்பினர் மோதலில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இது குறித்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை டி.எஸ்.பி.ஆறுமுகம், கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் இன்று காலை சுந்தர்ராஜை கைது செய்தனர். மற்ற 5 பேரையும் தேடி வருகின்றனர். 
    தேன்கனிக்கோட்டை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்தார். அவருடைய நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சந்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர் வனப்பகுதிக்கு தனது நண்பர்கள் விக்ரம், அனுமந்தகவுடா ஆகியோருடன் காரில் சென்றார்.

    அங்கு அவர்கள் வனப்பகுதியை சுற்றி பார்த்து விட்டு மீண்டும் காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை சுரேஷ் ஓட்டி வந்தார். உனிசெட்டி அருகில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரத்தில் இருந்த பெரிய பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் சுரேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விக்ரம், அனுமந்தகவுடா ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் இறந்த சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன் கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    பல்லடம் அருகே விவசாயியை அடித்து கொன்ற மகன் போலீசில் சரண் அடைந்தார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மேற்கு ராசா கவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம் (65). விவசாயி.இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

    இதில் காய்கறிகள், கீரைகள் பயிரிட்டு விற்பனை செய்து வந்தார்.இவரது மகன் முருகேசன்.

    விசைத்தறி கூடம் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விசைத்தறி ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார்.முருகேசன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தனது தந்தை வீட்டின் அருகில் தனித்குடித்தனம் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு விவசாயி அருணாசலம் தனது வீட்டின் முன் உட்கார்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த முருகேசன் தனது தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார்.

    இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகேசன் விசைத்தறிக்கு பயன்படுத்தும் மரக் கட்டையால் தனது தந்தை அருணாசலம் தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அங்கு வந்த அருணாசலம் மனைவி கணவரை வீட்டிற்குள் அழைத்து சென்றார்.

    சிறிது நேரத்தில் அருணாசலம் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

    அவரை பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அருண £சலத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தந்தை இறந்த தகவல் கிடைத்ததும் முருகேசன் அதிர்ச்சி அடைந்தார். அவர் பல்லடம் போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×