search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer killed"

    • நிலம் சம்பந்தமான பிரச்சினையால் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது 50). விவசாயம் செய்து வந்தார். இவருக்கும் இவரது சகோதரி மகன் அஜித் (22) என்பவருக்கும் ஏற்கனவே நிலம் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது சம்பந்தமாக ஜோதி மீது அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் வழக்கு இருப்பதாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஜோதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது அவரை அஜித் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜோதியை வெட்டினார். பின்னர் ஜோதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். அஜித் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அஜித்தை தேடி வருகின்றனர்.

    சொத்திற்காக மாமா என்று கூட பார்க்காமல் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருநாவலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.
    • மோட்டார் சைக்கிளை விட்டு தப்பி ஓடிய நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    திருநாவலூர், ஆக.25-

    கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே லத்தாமூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிகண்ணு (வயது 55). விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் சம்பவத்தன்று தனது வீட்டிலிருந்து அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு நடந்து சென்றார். அப்போது சாலை ஓரமாக சென்ற சாமிகண்ணு மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தனர். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாமி கண்ணுவை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகி ச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக விழுப்புரம் முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சாமிகண்ணு பரிதாபமாக இருந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த விபத்தை ஏற்படுத்தி மோட்டார் சைக்கிளை விட்டு தப்பி ஓடிய நபரை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • விஜயமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது விவசாயி மீது கார் எதிர்பாராத விதமாக பலமாக மோதியது.
    • இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள கம்புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 59). இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் தங்கமுத்து தனது வீட்டில் இருந்து விஜயமங்கலம் வருவதற்காக மொபட்டில் தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது அந்த வழியாக சேலம் மார்க்கம் நோக்கி சென்ற ஒரு கார் எதிர்பாராத விதமாக இவர் மீது பலமாக மோதியது.

    இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்ட பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்- விவசாயி பலியானார்.
    • விபத்து குறித்து விழுப்புரம் தாலுாகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    உளுந்தூர்பேட்டை பரிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன்(வயது 40). விவசாயி. இவர் நேற்று காலையில் உளுந்தூர்பேட்டை பகுதியிலிருந்து சென்னை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது விழுப்புரம் அருகே பிடாகம் பகுதி அருகே வந்து கொண்டிருந்தபோது, அதே திசையில் சென்று கொண்டிருந்த மற்றொரு மகேந்திரா வேன் ஒன்று வந்து பின்னால் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    இந்த விபத்தில் , சம்பவ இடத்திலேயே பார்த்திபன் பலியானார்.தகவல் அறிந்த விழுப்புரம் தாலுாகா போலீசார் இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    விபத்து குறித்து விழுப்புரம் தாலுாகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்

    • ஏரிக்கரை ஓரமாக சென்ற போது விபத்து நடந்தது.
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா மங்கலம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45) விவசாயி. இவர் நேற்று மங்கலத்தில் இருந்து சோமாசிபாடி சாலை கானலாபாடி ஏரிக்கரை ஓரமாக டிராக்டரை ஓட்டிச் சென்றார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் ஏரியில் கவிந்தது.

    இதில் சிக்கி படுகாயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • தியாகதுருகம் அருகே கார் மோதி விவசாயி பலியானார்.
    • கள்ளக்குறிச்சி அருகே தென்னேரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 64) விவசாயி.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தென்னேரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 64) விவசாயி, இவர் நேற்று சொந்த வேலை காரணமாக எலவனாசூர்கோட்டை க்கு சென்றார். வேலை முடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது திம்மலை பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடந்த போது அவருக்கு பின்னால் சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் இவரது மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார். மேலும் கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி சாலையோர பள்ளத்தில் இறங்கியது. காரில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெங்கடேசன் மனைவி கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் கார் டிரைவர் கோவை வடமதுரை பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகள் பிரியதர்ஷினி (29) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    அரக்கோணம் அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தை- 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள குருவராஜபேட்டை காந்திநகர், சர்க்கரை தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 54). விவசாயி. இவர் நேற்று அவருடைய தம்பி மோகன் (52), அவரது மகன் சுந்தரம்(24) ஆகியோருடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள வீட்டுமனையில் வளர்ந்து இருந்த முள்செடி விறகுகளை வெட்டி கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த விஜயகுமாரின் மற்றொரு தம்பி ராமன் (50). அவரது மகன்கள் சக்திவேல்(23), லட்சுமணன்(22) ஆகியோர் விஜயகுமாரிடம் நிலத்தை பங்கு பிரிக்கவில்லை.

    அதற்குள் அதில் வளர்ந்துள்ள முள்செடி விறகுகளை எப்படி வெட்டலாம் என கேட்டுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராமன், சக்திவேல், லட்சுமணன் ஆகியோர் சேர்ந்து விஜயகுமார், மோகன், சுந்தரம் ஆகியோரை இரும்பி கம்பியாலும், உருட்டு கட்டையாலும் தாக்கினர். இதில் 3 பேரும் காயமடைந்தனர்.

    அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மோகன், சுந்தரம் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சீரஞ்சிவிலு ஆகியோர் வழக்குபதிவு செய்து ராமன், சக்திவேல், லட்சுமணன் ஆகியோரை கைது செய்தனர்.

    முன் விரோதத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட விவசாயி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கே.செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் வீரப்பதேவர் (வயது 56). விவசாயியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர்களுக்கும் தோட்ட பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று வீரப்ப தேவர் தனது தோட்டத்தில் இருந்தபோது அங்கு வந்த உறவினர்கள் முத்துக்குமார் (35), வெள்ளைச்சாமி (37), பாலு (30), சின்னராஜ் (33), முத்து கனகம்மாள் (50) ஆகியோர் பிரச்சினை செய்து தகராறில் ஈடுபட்டனர்.

    வாக்குவாதம் முற்றவே, ஆத்திரம் அடைந்த 5 பேரும் வீரப்பதேவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வீரப்பதேவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பரளச்சி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தலைமறைவான 5 பேரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக முத்துக்குமார், வெள்ளைச்சாமி ஆகிய 2 பேரும் அருப்புக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பாப்பாப்பட்டி மேலக் கொட்டத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 55), விவசாயி. இவர் சம்பவத்தன்று மேலக் கொட்டத்தில் இருந்து பாப்பாப்பட்டி சாலையில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு திருப்பத்தில் திரும்பிய போது நிலைதடுமாறி மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். 

    இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே செல்வத்தை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைகாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம்  பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி அருகே நிலத்தகராறு காரணமாக விவசாயியை வெட்டி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.
    வேப்பனஅள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஆபிரி கிராமத்தை சேர்ந்தவர் மோட்டப்பா (வயது 70). மோட்டப்பாவின் வீட்டின் அருகே அவரது தம்பி சின்னப்பா என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், சிவபிரகாஷ் (வயது 29) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் மோட்டப்பாவுக்கும் சின்னப்பாவுக்கு இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று முன் தினம் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் அங்கு வந்த சின்னப்பாவின் மகன் சிவபிரகாஷ், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தனது பெரியப்பா மோட்டப்பாவின் வலது காலை வெட்டினார். இதில் அவரது வலது கால் துண்டாகி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே சிவபிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். 

    இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மோட்டாப்பாவின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சிவபிரகாசை தேடி வந்தனர். அப்போது ஓசூரில் சுற்றி திரிந்து கொண்டிருந்த அவரை கைது செய்தனர். கைதான சிவபிரகாஷை ஓசூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி, ஓசூர் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.
    திண்டுக்கல் அருகே வேலியில் இருந்த கல்லை அகற்றிய போது விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கொடைரோடு:

    திண்டுக்கல் அருகே உள்ள கோடாங்கி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 50). விவசாயி. இவர் தனது தோட்டத்து பகுதியில் விலங்குகள் உள்ளே வராமல் இருப்பதற்காக கல் ஊன்றி வேலி அமைத்திருந்தார். இன்று காலை அந்த கல்லை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு கல் அவர் மீது சரிந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இஸ்மாயில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மனைவி சபுராபீவி அளித்த புகாரின் பேரில் நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சொத்து தகராறில் விவசாயியை அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், லாடபுரத்தை அடுத்த நாவலூரை சேர்ந்தவர் சிங்காரவேலு(வயது 65). விவசாயி. இவரது உறவினர் பாக்கியராஜ்(30). இருகுடும்பத்தினருக்கும் இடையே பொதுவாக இருந்த நிலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு பாகப்பிரிவினை செய்யப்பட்டது. அதில் சரியாக தனக்கு பங்கு பிரிக்கப்படவில்லை என்றுகூறி பாக்கியராஜ் பிரச்சினை செய்துவந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிங்காரவேலுதனது வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்தார். அப்போது பாக்கியராஜ் அங்கு சென்றார். இதையடுத்து இருவருக்கும் பாகப்பிரிவினை தொடர்பாக மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் பாக்கியராஜ் கீழே கிடந்த கட்டையை எடுத்து சிங்காரவேலுவை சரமாரியாக தாக்கினார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து தகராறை விலக்கினர். பின்பு பாக்கியராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த சிங்காரவேலுவை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிங்காரவேலு நேற்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (கூடுதல் பொறுப்பு) சுகந்தி வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பாக்கியராஜை வலைவீசி தேடி வருகின்றனர். 
    ×