வேன் மோதி விவசாயி பலி

விஜயமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது விவசாயி மீது கார் எதிர்பாராத விதமாக பலமாக மோதியது.இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
வேன் மோதி விவசாயி பலி
Published on

பெருந்துறை:

பெருந்துறையை அடுத்துள்ள கம்புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 59). இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் தங்கமுத்து தனது வீட்டில் இருந்து விஜயமங்கலம் வருவதற்காக மொபட்டில் தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது அந்த வழியாக சேலம் மார்க்கம் நோக்கி சென்ற ஒரு கார் எதிர்பாராத விதமாக இவர் மீது பலமாக மோதியது.

இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்ட பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com