search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "property disputes"

    • ஆஸ்பத்திரியில் தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • தாக்குதல் நடத்தி சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆக்க னூர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு ராஜா என்ற ராஜேந்திரன், கிருஷ்ணன், அசோக்ராஜ், தர்மராஜ் என்ற 4 மகன்கள் உள்ளனர். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்ற னர். இவர்களில் ராஜேந்திர னுக்கும், கிருஷ்ணணுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அசோக்ராஜூக்கும், தர்ம ராஜூக்கும் திருமணம் ஆக வில்லை. ராஜேந்திரனை தவிர மற்று 3 பேரும் பரம சிவத்திடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளனர். அப்போது மூத்த மகன் ராஜேந்திரன் பின்னர் பார்ப்போம் என்று கூறி வந்தார். இந்நிலையில் தற்போது கடைசி மகனான தர்மராஜ் மீண்டும் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். பின்னர் தர்மராஜ் தனது அண்ணன் அசோக்ராசுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் திட்டக்குடி இடைச்செருவாய் அய்யனார் கோவில் அருகே மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த ராஜேந்திரன், அவரது மகன் சக்திவேல் மற்றும் சிலர் சேர்ந்து தர்மராஜ், அசோக்ராஜ் சென்ற மோட்டார் சைக்கிளை மறித்து அவர்கள் வைத்தி ருந்த கம்பியால் 2 பேரை யும் பலமாக தாக்கினர். இதில் வலிதாங்க முடியா மல் அசோக்ராஜ் அங்கிருந்து தப்பித்து அய்யனார் கோவில் அருகில் இருந்த காட்டு பகுதிக்குள் சென்றார். தர்மராஜை அந்த கும்பல் தலை, கை, கால்களில் பலமாக தாக்கியது. இந்த தாக்குதலில் தர்மராஜ் ரத்த வெள்ளத்தில் சாலையில் சுருண்டு விழுந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சென்றது. அந்த வழியாக கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள், வாகனங்களில் வந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து திட்டக்குடி போலீஸ் நிலை யத்திற்கு தகவல் தெரிவித்த னர்.

    தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த தர்மராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து தாக்குதல் நடத்திய ராஜேந்திரன் உள்ளிட்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். சொத்திற்காக தம்பியை அண்ணனே கும்பலுடன் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சுரேஷ்குமார் (வயது 52). வார்டு உறுப்பினர், தி.மு.க. கிளைச் செயலாளர், இவரது தம்பி ரமேஷ் (50). பா.ஜ.க. பிரமுகர்.இவர்களுக்குள் சொத்து தகராறு அடிக்கடி ஏற்படும். .
    • இவர்களுக்கு நடந்த தகராறில் நிலை தடுமாறிய ரமேஷ் அங்கேயே மயங்கி விழுந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் சென்னை சாலையில் வ.வு.சி. நகர் உள்ளது. இங்கு சுரேஷ்குமார் (வயது 52). வார்டு உறுப்பினர், தி.மு.க. கிளைச் செயலாளர். வெட்கிரைண்டர் சர்வீஸ் செய்யும் பணி செய்கிறார். இவரது தம்பி ரமேஷ் (50). பா.ஜ.க. பிரமுகர். இவர் கட்டில், பீரோ செய்து விற்பனை செய்கிறார். இவர்கள் 2 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது தந்தை மறைவிற்கு பின்னர், இவர்களுக்குள் சொத்து தகராறு அடிக்கடி ஏற்படும்  இந்நிலையில், இன்று காலை சுரேஷ்குமார் மனைவிக்கும், ரமேஷின் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் 2 பேரும் ஈடுபட்டனர். அப்போது 4 பேருக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ரமேஷை, சுரேஷ்குமார் பிடித்து தள்ளினார். இதில் வீட்டின் சுவற்றில் ரமேஷின் தலை மோதியது.

    இதனால் நிலை தடுமாறிய ரமேஷ் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரமேஷ் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ரமேஷின் மனைவி அனு பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும், தள்ளுமுள்ளு நடந்த போது ரமேஷின் மகள் செல்போனில் வீடியோ எடுத்திருந்தார். இதனையும் போலீசாரிடம் காண்பித்து ரமேஷின் மனைவி அனு புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, சரண்யா தலைமையிலான போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    • ராஜபாளையம் அருகே சொத்து தகராறில் வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்ைதயடுத்த மங்காபுரத்தை சேர்ந்தவர் சமுத்திரம். இவரது சகோதரர் முருகன். இவர்களுக்கு இடையே குடும்ப சொத்து தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

    இந்த நிலையில் அதே பகுதியில் வீரம்மாள் என்பவர் இறந்து விட்டார். இதையொட்டி துக்கம் விசாரிப்பதற்காக சமுத்திரம் சென்றார். அப்போது அங்கு முருகனும் வந்தார். அவரை கண்ட சமுத்திரம் தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.இதுபற்றி அறிந்த முருகனின் மகன் சரவணன் மற்றும் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் சமுத்திரத்தின் மகன் நாகராஜ் (வயது 23) கொண்டேரி கண்மாய் மாரியம்மன் கோவில் பூக்குழி திடல் பகுதியில் சென்ற போது அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சிறந்த செல்போன் செயலிகளை உருவாக்கிய 7 கல்லூரிகளின் மாணவர் குழுவுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு பெற்றனர்.
    • முதல் நாளில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    சிவகாசி

    மத்திய கல்வித்துறை அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ), பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் மற்றும் ஐ.டி.சி. இன்னோவேசன் செல் இணைந்து ''ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2022'' என்ற தலைப்பில் தேசிய அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மென்பொருள் தொழில்நுட்ப திறன்களை அறியும் இறுதிப்போட்டி சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி மையத்தில் 2 நாட்கள் நடந்தது.

    முதல் நாளில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். இரண்டாம் நாள் ஹேக்கத்தான் போட்டியின் நிறைவு விழா நடந்தது.

    பி.எஸ்.ஆர்.கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கருணாமூர்த்தி, மத்திய கல்வி அமைச்சரகத்தின் மைய தலைவர் உத்யன் மவுரியா,

    ஐ.சி.டி. அகாடமியின் மாநில தலைவர் பூர்ணபிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

    கல்லூரிகளுக்கு இடையேயான 30 குழுக்கள் பங்கேற்ற இந்த போட்டியில் 7 குழுக்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சிறந்த டிஜிட்டல் கற்றல் செயலியை உருவாக்கிய சென்னை ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி, கண்டென்ட் கிரியேசன் செயலியை உருவாக்கிய கோவை ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, டிஜிட்டல் கல்வி செயலியை உருவாக்கிய சென்னை சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, விளையாட்டு அடிப்படையில் கற்பிப்பதற்கான செயலியை உருவாக்கிய மும்பை சங்கி பொறியியல் கல்லூரி, செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் மாணவர்கள்-பெற்றோர்களுக்கு உதவும் வகையில் செயலியை உருவாக்கிய பஞ்சாப் தாப்பார் என்ஜினீயரிங் கல்லூரி, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கல்வி வழிகாட்டுதல், தகவல் ஆய்வு செய்வதற்கான மென்பொருளை உருவாக்கிய டெல்லி சூரஜ்மால் தொழில்நுட்ப கல்லூரி, வாசிப்பு திறனை மேம்படுத்துவற்கு தேவைப்படும் மென்பொருளை உருவாக்கிய இந்தூர் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய 7 கல்லூரி மாணவர் குழுவுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இேத போன்று ஜூனியர் ஹேக்கத்தான் போட்டியில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி குழு, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 3 பள்ளி குழுக்களின் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், மாதவன் மற்றும் பேராசிரியர் இணைந்து செய்திருந்தனர்.

    சொத்து தகராறில் விவசாயியை அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், லாடபுரத்தை அடுத்த நாவலூரை சேர்ந்தவர் சிங்காரவேலு(வயது 65). விவசாயி. இவரது உறவினர் பாக்கியராஜ்(30). இருகுடும்பத்தினருக்கும் இடையே பொதுவாக இருந்த நிலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு பாகப்பிரிவினை செய்யப்பட்டது. அதில் சரியாக தனக்கு பங்கு பிரிக்கப்படவில்லை என்றுகூறி பாக்கியராஜ் பிரச்சினை செய்துவந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிங்காரவேலுதனது வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்தார். அப்போது பாக்கியராஜ் அங்கு சென்றார். இதையடுத்து இருவருக்கும் பாகப்பிரிவினை தொடர்பாக மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் பாக்கியராஜ் கீழே கிடந்த கட்டையை எடுத்து சிங்காரவேலுவை சரமாரியாக தாக்கினார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து தகராறை விலக்கினர். பின்பு பாக்கியராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த சிங்காரவேலுவை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிங்காரவேலு நேற்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (கூடுதல் பொறுப்பு) சுகந்தி வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பாக்கியராஜை வலைவீசி தேடி வருகின்றனர். 
    ×