சொத்து தகராறில் வாலிபர் மீது தாக்குதல்

ராஜபாளையம் அருகே சொத்து தகராறில் வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சொத்து தகராறில் வாலிபர் மீது தாக்குதல்
Published on

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்ைதயடுத்த மங்காபுரத்தை சேர்ந்தவர் சமுத்திரம். இவரது சகோதரர் முருகன். இவர்களுக்கு இடையே குடும்ப சொத்து தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

இந்த நிலையில் அதே பகுதியில் வீரம்மாள் என்பவர் இறந்து விட்டார். இதையொட்டி துக்கம் விசாரிப்பதற்காக சமுத்திரம் சென்றார். அப்போது அங்கு முருகனும் வந்தார். அவரை கண்ட சமுத்திரம் தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.இதுபற்றி அறிந்த முருகனின் மகன் சரவணன் மற்றும் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் சமுத்திரத்தின் மகன் நாகராஜ் (வயது 23) கொண்டேரி கண்மாய் மாரியம்மன் கோவில் பூக்குழி திடல் பகுதியில் சென்ற போது அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com