search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ENGvAUS"

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 393 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.
    • 2-வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 311 ரன்கள் எடுத்துள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.

    ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 78 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 393 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 118 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பேர்ஸ்டோவ் 78 ரன்களும், சாக் கிராலி 61 ரன்களும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், ஹசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 14 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. டேவிட் வார்னர் 9 ரன்னில் அவுட்டானார். லாபுசேன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஸ்மித் 16 ரன்னில் வெளியேறினார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    4-வது விக்கெட்டுக்கு இணைந்த கவாஜா- டிராவிஸ் ஹெட் ஜோடி 81 ரன்கள் சேர்த்த நிலையில், ஹெட் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். கிரீன் 38 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 126 ரன்னும், அலெக்ஸ் கேரி 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட், மொயீன் அலி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 393 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.
    • ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி சதமடித்து 118 ரன்கள் எடுத்தார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.

    இந்நிலையில், ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 78 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 393 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 118 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பேர்ஸ்டோவ் 78 ரன்களும், சாக் கிராலி 61 ரன்களும் எடுத்தனர்.

    இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 78 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 393 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், ஹசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 14 ரன்கள் எடுத்துள்ளது.

    2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் தொடருக்கான போட்டி அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. #Ashes2019
    டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடராகும். இந்த தொடர் ஒருமுறை ஆஸ்திரேலியாவிலும், மறுமுறை இங்கிலாந்திலும் நடத்தப்படும்.

    2017-18  ஆஷஸ் தொடர் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 4-0 என வெற்றி பெற்றது. இந்நிலையில் 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.



    அடுத்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த தொடர் முடிந்தவுடன் ஆஷஸ் தொடர் தொடங்குகிறது. ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன் அயர்லாந்துக்கு எதிராக முதன்முறையாக இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் நான்கு நாட்கள் கொண்டதாகும். இது லார்ட்ஸில் ஜூலை 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது.

    ஆஷஸ் தொடருக்கான போட்டி அட்டவணை:-

    முதல் டெஸ்ட் - ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை- எட்ஜ்பாஸ்டன்
    2-வது டெஸ்ட் - ஆகஸ்ட் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை - லார்ட்ஸ்
    3-வது டெஸ்ட் - ஆகஸ்ட் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை - ஹெட்லிங்லே
    4-வது டெஸ்ட் - செப்டம்பர் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை - ஓல்டு டிராஃப்போர்டு
    5-வது மற்றும் கடைசி டெஸ்ட் - செப்டம்பர் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை - ஓவல்

    2019-ல் இருந்து ஐசிசி உலக சம்பியன்ஷிப் டெஸ்ட் லீக் அறிமுகப்படுத்துகிறது. இதன் முதல் தொடராக இந்த ஆஷஸ் தொடர அமைகிறது.
    இங்கிலாந்திற்கு எதிராக 6 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளது ஆஸ்திரேலியா. #ENGvAUS
    ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடியது. முதலில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி ஈவுயிரக்கமின்றி ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது. 5-0 என ஒயிட்வாஷ் செய்தது. ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்து உலக சாதனைப் படைத்தது.

    டி20 போட்டியிலும் 222 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா 193 ரன்கள் எடுத்து 193 ரன்கள் எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அத்துடன் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 30 வருடத்திற்குப் பிறகு ஒருநாள் தரவரிசையில் 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது.



    மோசமான தோல்வியை சந்தித்துள்ள நிலையிலும், அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு பலம் வாய்ந்த அணியாக திரும்புவோம் என்று பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    தற்போதைய நிலையில் டோனியை விட பட்லர்தான் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். #MSDhoni
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 34.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 205 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்கத்திலேயே அந்த அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஜேசன் ராய் 1 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 12 ரன்னிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 20 ரன்னிலும், ஜோ ரூட் 1 ரன்னிலும், மோர்கன் டக்அவுட்டிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

    இதனால் இங்கிலாந்து 114 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது தத்தளித்தது. ஜோஸ் பட்லர் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாடினார். அடில் ரஷித்தை ஒருபக்கம் வைத்துக் கொண்டு சிறப்பாக விளையாடினார். சிறப்பாக விளையாடியது மட்டுமல்லாமல், சதம் அடித்து கடைசி வரை நிலைத்து நின்று அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 122 பந்தில் 110 ரன்கள் சேர்த்தார்.

    அவரது பேட்டிங்கை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலியா கேப்டன், தற்போதைய நிலையில் டோனியை விட ஜோஸ் பட்லர்தான் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார்.



    இதுகுறித்து ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில் ‘‘பட்லர் சிறந்தவர். மிகவும் சிறந்தவர். தற்போதைய நிலையில் ஒயிட் பால் போட்டியில் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்.

    அவருக்கு போட்டியாக தற்போது ஏராளமான போட்டியாளர்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. எம்எஸ் டோனி மிகவும் சிறந்த வீரர். ஆனால், தற்போதைய நிலையில் பட்லர் முன்னிலையில் இருக்கிறார். ஜோஸ் பட்லர் ஒருநாள் போட்டியில் தனது பலன் என்ன என்பதை புரிந்து வைத்திருக்கிறார்’’ என்றார்.
    ஒயிட்வாஷ் ஆன ஆஸ்திரேலியா 100 புள்ளிகளுடன் ஐசிசி தரவரிசையில் 6-வது இடத்திலும், இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்திலும் நீடிக்கிறது. #ENGvAUS
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. நேற்றுடன் முடிவடைந்த இந்த தொடரை இங்கிலாந்து 5-0 எனக் கைப்பற்றியது. 2-0 என இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும்போது, ஆஸ்திரேலியா சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தரவரிசையில் 6-வது இடத்திற்கு சரிந்தது.

    தற்போது ஒயிட்வாஷ் ஆன பின்னர் தரவரிசையில் நான்கு புள்ளிகள் குறைந்து சரியாக 100 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், வங்காள தேசம் 93 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளது.



    இந்தியா 122 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 113 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், நியூசிலாந்து 112 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளது.
    46 நாட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட்டை பின்னுக்குத் தள்ளினார் சாம் குர்ரான். #ENGvAUS
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியில் சாம் குர்ரான் அறிமுகமானார். ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய பின்னர், இங்கிலாந்து அணியில் அறிமுகமாகிய இவருக்கு, 20 வயது 21 நாட்களே ஆகும்.

    இதன்மூலம் இளம் வயதிலேயே இங்கிலாந்து ஒருநாள் அணியில் இடம்பிடித்த 2-வது வீரர் என்ற பெருமையை ஸ்டூவர்ட் பிராட்டிடம் இருந்து தட்டிப்பறித்துள்ளார். பிராட் 20 வருடம் 67 நாட்களில் இந்த சாதனையைப் படைத்திருந்தார். 46 நாள் வித்தியாசத்தில் சாம் குர்ரான் 2-வது இடத்தில் உள்ளார்.



    பென் ஹோலியாக் 19 வயது 195 நாட்களில், மிக இள வயதில் அறிமுகமானவர் என்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். பென் ஸ்டோக்ஸ் 20 வயது 82 நாட்களுடன் 4-வது இடத்திலும், ஆண்டர்சன் 20 வயது 138 நாட்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
    இருநாடுகளுக்கு இடையிலான தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தி அடில் ரஷித், மொயீன் அலி சாதனைப் படைத்துள்ளனர் #ENGvAUS
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்டெக் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, ஒரு கட்டத்தில் 6.3 ஓவரில் 60 ரன்கள் என்றிருந்த நிலையில், மொயீன் அலியின் சுழல் பந்தில் சிக்சி 34.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 205 ரன்னில் சுருண்டது. மொயீன் அலி 46 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
    மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.



    இந்த தொடரில் இருவரும் தலா 12 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள். இதன்மூலம் இருநாடுகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர். இதற்கு முன் ஸ்வான் 2010-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 11 விக்கெட்டுக்களும், 2013-ல் ட்ரெட்வெல் இந்தியாவிற்கு எதிராக 11 விக்கெடடுக்கள் வீழ்த்தியதுமே சாதனையாக இருந்தது.
    மொயீன் அலியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா 35 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 205 ரன்னில் சுருண்டது. #ENGvAUS
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆரோன் பிஞ்ச், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.



    இந்த ஜோடி 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் குவித்தது. இந்த ஜோடியை மொயீன் அலி பிரித்தார். 7-வது ஓவரை மொயீன் அலி வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ஆரோன் பிஞ்ச் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் க்ளீன் போல்டானார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 5-வது பந்தில் டக்அவுட் ஆனார்.



    அதன்பின் வந்த ஷேன் மார்ஷ் 8 ரன்னி்ல் மொயீன் அலி பந்தில் ஸ்டம்பிங் ஆகி வெளியேற, ஆஸ்திரேலியா தடம்புரள ஆரம்பித்தது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் தன் பங்கிற்கு 56 ரன்கள் சேர்த்தார். கேரி 44 ரன்களும், ஆர்கி ஷார்ட் அவுட்டாகாமல் 47 ரன்களும் சேர்க்க ஆஸ்திரேலியா 34.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 205 ரன்னில் சுருண்டது.
    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #ENGvAUS
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று 4-0 என முன்னிலையில் இருக்கிறது. முதல் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 38 ரன்கள் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் 242 ரன்கள் வித்தியாசத்திலும், 4-வது போடடியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியிலும் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால் ஒயிட்வாஷ் ஆகும். ஒயிட்வாஷை தடுக்கும் நோக்கத்தில் ஆஸ்திரேலியாவும், ஒயிட்வாஷ் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கிலாந்தும் களம் இறங்குவதால் இன்றைய ஆட்டம் பரபரப்பானதாக காணப்படும்.



    ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஆரோன் பிஞ்ச், 2. டிராவிஸ் ஹெட், 3. ஷேன் மார்ஷ், 4. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 5. டி'ஆர்கி ஷார்ட், 6. அலெக்ஸ் கேரி, 7. டிம் பெய்ன், 8. அஷ்டோன் அகர், 9.  கேன் ரிச்சர்ட்சன், 10. நாதன் லயன், 11. பில்லி ஸ்டேன்லேக்.

    இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஜேசன் ராய், 2. பேர்ஸ்டோவ், 3. ஹேல்ஸ், 4. ஜோ ரூட், 5. மோர்கன், 6. பட்லர், 7. மொயீன் அலி, 8. சாம் குர்ரான், 9. லியாம் பிளங்கெட், 10 அடில் ரஷித், 11. ஜேக் பால். சாம் குர்ரானுக்கு இது முதல் ஒருநாள் போட்டியாகும்.
    ஒருநாள் போட்டியில் 400 ரன்களுக்கு மேல் குவித்து, பவுலர்களை திண்டாட வைப்பதற்கு இரண்டு புதிய பந்து முறைதான் காரணம் என சச்சின் கூறியுள்ளார். #ENGvAUS
    ஒருநாள் கிரிக்கெட்டில் 463 போட்டிகளில் 49 சதங்களுடன், 18 ஆயிரம் 426 ரன்கள் குவித்து இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்ற அழைக்கப்படும் சச்சின் தெண்டுகர் அசைக்க முடியாத சாதனைப் படைத்துள்ளார். இவர் 1989-ம் ஆண்டு முதல் 2012 வரை சுமார் 23 வருடங்கள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினார். இவரது காலக்கட்டத்தில் விதிமுறை, முன்னணி பந்து வீச்சாளர்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு ரன்கள் குவிப்பது எளிதான காரியம் அல்ல.

    ஆனால், டி20 கிரிக்கெட் அறிமுகம் படுத்திய பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் சுவாரஸ்யம் கூட்டுவதற்காக பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் ஒன்று இரண்டு புதிய பந்துகள் என்பது. இரு முனைகளிலும் இருந்து தலா ஒரு பந்து மூலம் பந்து வீசப்படும். இதனால் ஒரு பந்தில் 25 ஓவர்கள்தான் வீசமுடியம். இதனால் கடைசி கட்டத்தில் ரிவர்ஸ் ஸ்விங்கை பார்க்க முடிவதில்லை. இதை பயன்படுத்தில் சர்வசாதரணமாக தற்போது 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா தொடரின்போது இங்கிலாந்து 481 ரன்கள் குவித்து சரித்திர சாதனைப் படைத்துள்ளது.

    இரண்டு புதிய பந்து முறைதான் இதுபோன்று 400 ரன்களுக்கு மேல் எளிதாக அடிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று சச்சின் தெண்டுல்கர் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஒருநாள் போட்டியில் இரண்டு புதிய பந்துகள் என்பது பேரழிவிற்கான சரியான முறை. இரண்டு பந்துதிற்கும் பழைய பந்தாக மாறி ரிவர்ஸ் ஸிவிங் ஆக நேரம் போதுமானதாக இல்லை. நாம் ஒருநாள் போட்டியில் டெத்ஓவர்களை உள்ளடக்கிய கடைசி கட்டத்தில் ரிவர்ஸ் ஸ்விங்கை பார்க்க முடிவதில்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.
    இங்கிலாந்திற்கு எதிரான படுதோல்வியால் அணியில் அதிரடி மாற்றத்தை உருவாக்க விரும்பவில்லை என்று ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார். #ENGvAUS
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 50 ஓவரில் 481 ரன்கள் குவித்து உலக சாதனைப் படைத்தது. பின்னர், பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 239 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.

    இந்த தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘இங்கிலாந்தின் இந்த ஆட்டம் தற்செயலாக நடந்தது அல்ல. அவர்கள் நம்பர் ஒன் இடத்தில் உள்ளனர். நான் இதுபோன்ற எந்தவொரு ஆட்டத்தையும் இதுபோன்ற பார்த்ததில்லை.

    இளம் வீரர்களை கொண்ட எங்கள் அணி இதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த ஆட்டத்தை விட மிகக்கடினமாக இருக்காது. முதல் மூன்று வீரர்கள் துவம்சம் செய்துவிட்டனர்.



    அணியில் அதிரடி மாற்றம் கொண்டு வர நான் விரும்பவில்லை. நாங்கள் அணியை ஏதாவது ஒரு வகையில் கட்டமைக்க வேண்டும். நீங்கள் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், ஏராளமான மாற்றத்தை நோக்கி செல்ல முடியாது. நாதன் லயன் அதிகமான போட்டியில் விளையாடியுள்ளார். அவர் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.
    ×