என் மலர்

  நீங்கள் தேடியது "Australia WhiteWash"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒயிட்வாஷ் ஆன ஆஸ்திரேலியா 100 புள்ளிகளுடன் ஐசிசி தரவரிசையில் 6-வது இடத்திலும், இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்திலும் நீடிக்கிறது. #ENGvAUS
  இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. நேற்றுடன் முடிவடைந்த இந்த தொடரை இங்கிலாந்து 5-0 எனக் கைப்பற்றியது. 2-0 என இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும்போது, ஆஸ்திரேலியா சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தரவரிசையில் 6-வது இடத்திற்கு சரிந்தது.

  தற்போது ஒயிட்வாஷ் ஆன பின்னர் தரவரிசையில் நான்கு புள்ளிகள் குறைந்து சரியாக 100 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், வங்காள தேசம் 93 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளது.  இந்தியா 122 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 113 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், நியூசிலாந்து 112 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளது.
  ×