search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Justin Langer"

    பால் டேம்பரிங் என்பது சர்வதேச அளவிலான பிரச்சனை என்று ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார். #JustinLanger
    ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடும்போது கேப் டவுனில் நடைபெற்ற போட்டியில் வார்னர், ஸ்மித், பான்கிராப்ட் ஆகியோருக்கு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஒரு வருடம் தடைவிதித்துள்ளது.

    இந்த விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. முக்கிய வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால் ஆஸ்திரேலியா அணி திணறி வருகிறது.

    உட்சக்கட்டமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பால் டேம்பரிங் தனித்துவிடப்பட்ட விஷயம் அல்ல. எனது காலக்கட்டத்தில் இதுபோன்று நடக்கவே நடக்காது என்று ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜஸ்டின் லேங்கர் கூறுகையில் ‘‘விளையாட்டு நடந்த கொண்டிருக்கும்போது ஆஸ்திரேலிய வீரர்கள் உப்பத்தாளை (sandpaper) என்படி எடுத்தார்கள் என்பதை ஒரு நொடி என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. எனக்கு தெரிந்த வகையில் பால் டேம்பரிங் என்பது உலகளவில் இருந்து கொண்டு வருகிறது. இது மிகவும் கவலைத்தரக்கூடிய விஷயம். குறிப்பாக ஆடுகளம் பந்து வீச்சுக்கு எடுபடாத நிலையில்தான் இதுபோன்ற சம்பவம் அரங்கேறுகிறது’’ என்றார்.
    ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் தேசிய அணிக்கு திரும்புவதற்கு பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். #Smith
    ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பான் கிராப்ட் ஆகியோர் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ளனர். ஸ்மித், வார்னருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஓராண்டும், பான் கிராப்ட்டிற்கு 9 மாதமும் தடை விதித்துள்ளது.

    இந்த தடை முடிந்த பின்னர் மூன்று பேரும் எளிதாக மீண்டும் அணிக்கு திரும்ப முடியுமா? என்ற கேள்வி எழுந்து கொண்டே வருகிறது.

    வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் ஆஸ்திரேலியா அணியின் முதுகெலும்பாக திகழ்வதால் அணிக்கு திரும்ப வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலியா வீரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.



    இந்நிலையில் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் தடைக்காலம் முடிந்து மீண்டும் தேசிய அணிக்கு ஏன் திரும்ப முடியாது என்பதற்கான எந்த காரணமும் இல்லை ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார்.

    இதனால் அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் ஸ்மித் மற்றும் வார்னர் பங்கேற்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஜஸ்டின் லாங்கர் டி20 தேர்வு குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். #JustinLanger
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டி20 தேர்வு குழுத் தலைவராக முன்னாள் வீரர் மார்க் வாக் இருந்தார். இவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனால் அந்த பதவி காலியாக இருந்தார். இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஜஸ்டின் லாங்கர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் செயல்திறன் மேலாளர் பாட் ஹோவார்ட் கூறுகையில், ‘‘ஐசிசி டி20 உலகக்கோப்பை வரும் 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்வு குழுத்தலைவராக லேங்கர் நியமிக்கப்பட்டிருப்பது சிறப்பானது.



    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அனைத்து போட்டிகளுக்கும் பயிற்சியாளராக விளங்கும் ஜஸ்டின் லேங்கர், உள்ளூர் போட்டியான பிக் பாஷ் லீக் தொடரையும், அத்தொடரில் விளையாடும் வீரர்கள் பற்றியும் அறிவதில் பெரும் ஆற்றல் மிக்கவர்.

    மேலாளர்கள் மற்றும் பிக் பாஷ் லீக் தொடர் பயிற்சியாளர்களோடு இணைந்து ஜஸ்டின் லேங்கர் ஆஸ்திரேலிய அணியின் டி20 தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வார்” எனக் கூறினார்.
    இங்கிலாந்திற்கு எதிராக 6 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளது ஆஸ்திரேலியா. #ENGvAUS
    ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடியது. முதலில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி ஈவுயிரக்கமின்றி ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது. 5-0 என ஒயிட்வாஷ் செய்தது. ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்து உலக சாதனைப் படைத்தது.

    டி20 போட்டியிலும் 222 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா 193 ரன்கள் எடுத்து 193 ரன்கள் எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அத்துடன் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 30 வருடத்திற்குப் பிறகு ஒருநாள் தரவரிசையில் 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது.



    மோசமான தோல்வியை சந்தித்துள்ள நிலையிலும், அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு பலம் வாய்ந்த அணியாக திரும்புவோம் என்று பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டியால் மேக்வெல்லை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்று லாங்கர் தெரிவித்துள்ளார். #ENGvAUS
    ஆஸ்திரேலியா அணி ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் முதல் தொடர் இதுவாகும். இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி விரும்புகிறது. பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆனால் அதிரடி பேட்ஸ்மேன் ஆன மேக்ஸ்வெல் இரண்டில் ஒற்றையிலக்க ரன்னிலேயே வெளியேறினார்.

    மேக்ஸ்வெல் ஃபார்ம் இன்றி தவித்தாலும் ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளார். இந்த தொடரில் ரிக்கி பாண்டிங் வர்ணனையாளராக செயல்பட இருக்கிறார். தொடருக்கு முன் ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்து டிப்ஸ் வழங்க இருக்கிறார்.



    அப்போது மேக்ஸ்வெல்லை ரிக்கி பாண்டியால் பழைய பார்முக்கு கொண்டு வருவார் என்று லாங்கர் கூறியுள்ளார். இதுகுறித்து லாங்கர் கூறுகையில் ‘‘இங்கிலாந்து தொடருக்கான மேக்ஸ்வெல்லின் தயார்படுத்துதல் நிலை சிறப்பாக உள்ளது. அவர் விரைவில் மிகப்பெரிய ஸ்கோரை எட்டவில்லை எனில், நான் மிகவும் ஆச்சர்யம் அடைவேன். அவரைப் பற்றி பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், அவர் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்து வருவது எனக்கு ஈர்ப்பை கொடுத்துள்ளது.

    மேக்ஸ்வெல் இரண்டு மாதங்களாக ரிக்கி பாண்டிங் உடன் இணைந்து ஐபிஎல் தொடரில் பணியாற்றியுள்ளார். ரிக்கி பாண்டிங் உடனான இந்த நிகழ்வு முக்கியமானது. ரிக்கி பாண்டிங் எங்கள் அணியுடன் ஞாயிற்றுக்கிழமை (இன்று) இணைவார். மேக்ஸ்வெல் அவரது பயிற்சியை சிறப்பாக செய்து, அவர் மீது நம்பிக்கை வைத்தால், அவர் சிறந்த வீரராக மாறுவது வெகுதூரத்தில் இல்லை. அவர் ஏராளமான திறமையை பெற்றுள்ளார்’’ என்றார்.
    உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணியாக உருவெடுக்க வேண்டும் என்பதே ஆஸ்திரேலியாவின் இலக்கு என ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.#ENGvAUS
    ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி தென்ஆப்பிரிக்கா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்டின்போது ஆஸ்திரேலியா வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இதற்கு வார்னர் மற்றும் கேப்டன் ஸ்மித் ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதனால் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோருக்கு தலா ஓராண்டு தடையும். பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் விதிக்கப்பட்டது.

    இந்த செயலால் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டிற்கு பெரிய அளவில் கலங்கம் ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து மீள ஆஸ்திரேலியா முயற்சி செய்து வருகிறது.

    இந்த சம்பவத்திற்குப் பிறகு முதன்முறையாக ஆஸ்திரேலியா சர்வதேச போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கு தயாராகி வரும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், சர்வதேச அளவில் தலைசிறந்த அணியாக வேண்டும் என்பதே இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து லாங்கர் கூறுகையில் ‘‘நீங்கள் எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள் அல்லது எத்தனை போட்டியில் விளையாடுகிறீர்கள் அல்லது எத்தனை ரன்கள் அடிக்கிறீர்கள் என்பது பெரிய விஷயம் அல்லை. நீங்கள் உண்மையாக விளையாடவில்லை எனில், மக்கள் அதை நினைவில் கொள்வார்கள்.



    நமக்குள்ள நட்புணர்வு மிகவும் முக்கியமானது. நாம் அதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆஸ்திரேலியா அணியில் உள்ள எல்லோருக்கும் இது பொருந்தும். மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நம்முடைய பழக்க வழக்கம் நன்றாக இருந்தால், ரசிகர்களிடம் இருந்து மரியாதை மற்றும் உண்மைத்தன்மையை பெற முடியும்.

    ஆஸ்திரேலியா மக்கள் உண்மையிலேயே ஆஸ்திரேலிய அணியின் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளனர். சிறந்த கிரிக்கெட் வீரர்களை விட அது அதிகமானது. நாம் கடந்த காலத்தில் ஏராளமான சாதனைகளை படைத்திருக்கிறோம். அதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் என்பதற்கான நாம் பெருமைப்பட வேண்டும். நாம் அந்த வழயில் சென்று அதேபோல் செயல்பட வேண்டும். அதில் இருந்து நாம் விலகிவிடக்கூடாது’’ என்றார்.

    இங்கிலாந்து - ஆஸதிரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜூன் 13-ந்தேதி தொடங்குகிறது. 
    ஆலன் பார்டன் என்னிடம் கேட்டிருந்தால் பந்தை சேதப்படுத்தியிருப்பேன் என ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்கா சென்று நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்ற நிலையில், 3-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்றது. தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது.

    பின்னர் நடைபெற்ற விசாரணையில் வார்னர்தான் இதற்கு மூலக்காரணமாக இருந்தார் என்பது தெரியவந்தது. அத்துடன் கேப்டன் ஸ்மித் இந்த விவகாரம் தனக்குத் தெரியும் என்றார். இதனால் பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும், வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தால் தலைமை பயிற்சியாளராக இருந்த லீமென் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக ஜஸ்டின் லாங்கர் தற்போது தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.



    சீனியர் வீரர்கள் சொல்லியிருந்தால் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியிருக்கனும். நான் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அடிலெய்டில் 1993-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்டில் அறிமுகமானார். அப்போதுள்ள அணி வேறு. அந்த காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்றார்.

    மேலும், இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘பந்தை சேதப்படுத்த வேண்டும் என்று ஆலன் பார்டன் என்னிடம் கேட்டிருந்தால், நான் பந்தை சேதப்படுத்தியிருப்பேன். ஏனென்றால், நான் அதிக அளவில் பயந்திருக்கமாட்டேன். ஆனால் ஆலன் பார்டன் இதுபோன்று ஒருபோதும் என்னிடம் கேட்டிருக்கமாட்டார். பயிற்சியாளர் பாபி சிம்சனும் என்னை கொன்றிருக்கமாட்டார்’’ என்றார்.
    ×