என் மலர்

  நீங்கள் தேடியது "Ball Tampering"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மெல்போர்ன் டெஸ்ட் போட்டி தொடங்கும் நேரத்தில் பால் டேம்பரிங் குறித்த ஸ்மித், பான்கிராப்ட் பேட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டதால் ரிக்கி பாண்டிங் அதிர்ச்சியடைந்துள்ளார்.
  பாம் டேம்பரிங் விவகாரத்தில் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டும், பான்கிராப்ட்டிற்கு 9 மாதமும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் தடை விதித்தது.

  மூன்று பேரின் தடைக்காலம் 9 மாதங்கள் நிறைவந்து விட்டன. ரசிகர்கள் பால் டேம்பரிங் சம்பவத்தை ஓரளவிற்கு மறந்து விட்டனர். ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான தொடருக்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

  இந்நிலையில் ஸ்மித் மற்றும் பான்கிராப்ட் ஆகியோரின் பேட்டி பாக்ஸ் கிரிக்கெட் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நேரம் ரிக்கி பாண்டிங்கை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

  இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘ஒரு முழுமையான பத்திரிகையின் அணுகுமுறையில் இருந்து, ஸ்மித் மற்றும் பான்கிராப்ட் ஆகியோரின் பேட்டி ஒளிபரப்பப்பட்டதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியும். இன்று ஏராளமான மக்கள் கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாளை அவர்கள் இதுகுறித்த செய்தியை படிப்பார்கள். என்ன நடக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும்.

  இது வீரர்கள் அல்லது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு எப்படி மகிழ்ச்சியாக இருக்கும் என்பது குறித்து எனக்கு உறுதியாக தெரியாது. இன்றைய பாக்சிங் டே டெஸ்ட் ஆஸ்திரேலியாவிற்கு மிகவும் சிறப்பான தருணம். ஆகவே, இந்த பேட்டி எப்படி எதிரொலிக்கப்போகிறது என்று பார்ப்போம்.

  பேட்டியின் சில தலைப்புகளை பார்த்தேன். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. சில விஷயங்கள் எனக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. கேப் டவுனில் என்ன நடந்து என்பதை கடந்த 9 மாதங்களாக நாம் பெரிய அளவில் விவாதித்து விட்டோம். தற்போது இந்த செய்தி வெளிவந்துள்ளது. நாளைய செய்தி பேப்பரில் எப்படி எழுதப்போகிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேப் டவுன் டெஸ்டில் பந்தை சேதப்படுத்தும்படி துணைக்கேப்டனாக இருந்த வார்னர் என்னைத் தூண்டினார் என கேமரூன் பான்கிராப்ட் தெரிவித்துள்ளார். #BallTampering
  தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்துவதற்கு துணைக் கேப்டன் வார்னர்தான் மூளைக்காரணமாக இருந்தார் என்றும், இந்த விஷயம் ஸ்மித்திற்கு தெரிந்திருந்தது எனவும் விசாரணையில தெரிய வந்தது.

  இதனால் பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஓராண்டு தடையும் விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.

  இந்த விவகாரத்திற்குப் பிறகு முதன்முறையாக கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்மித் பேட்டியளித்தார். அப்போது ‘‘நான் பால் டேம்பரிங் விவகாரத்தை தடுத்திருக்கலாம். கேப்டன் பொறுப்பில் தோல்வியடைந்து விட்டேன்’’ என்று கூறினார்.  இந்நிலையில் துணைக்கேப்டனாக இருந்த வார்னர்தான் பந்தை சேதப்படுத்தும்படி என்னைத் துண்டினார் என்று பான் கிராப்ட் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து பான் கிராப்ட் கூறுகையில் ‘‘நாங்கள் பீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது வார்னர் என்னிடம் வந்து பந்தை சேதப்படுத்தும்படி கூறினார். அது நல்லதா? என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், நான் இளம் வீரர் என்பதால் அணியில் தன்னுடைய மதிப்பு என்ன என்பதை யோசிக்க வேண்டியிருந்தது.

  சீனியர் வீரர்களிடம் இருந்து மரியாதை பெற வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. மேலும் தவறுக்காக மிகப்பெரிய விலைக்கொடுக்க போகிறோம் என்பதையும் உணர்ந்திருந்தேன்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பால் டேம்பரிங் என்பது சர்வதேச அளவிலான பிரச்சனை என்று ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார். #JustinLanger
  ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடும்போது கேப் டவுனில் நடைபெற்ற போட்டியில் வார்னர், ஸ்மித், பான்கிராப்ட் ஆகியோருக்கு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஒரு வருடம் தடைவிதித்துள்ளது.

  இந்த விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. முக்கிய வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால் ஆஸ்திரேலியா அணி திணறி வருகிறது.

  உட்சக்கட்டமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பால் டேம்பரிங் தனித்துவிடப்பட்ட விஷயம் அல்ல. எனது காலக்கட்டத்தில் இதுபோன்று நடக்கவே நடக்காது என்று ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து ஜஸ்டின் லேங்கர் கூறுகையில் ‘‘விளையாட்டு நடந்த கொண்டிருக்கும்போது ஆஸ்திரேலிய வீரர்கள் உப்பத்தாளை (sandpaper) என்படி எடுத்தார்கள் என்பதை ஒரு நொடி என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. எனக்கு தெரிந்த வகையில் பால் டேம்பரிங் என்பது உலகளவில் இருந்து கொண்டு வருகிறது. இது மிகவும் கவலைத்தரக்கூடிய விஷயம். குறிப்பாக ஆடுகளம் பந்து வீச்சுக்கு எடுபடாத நிலையில்தான் இதுபோன்ற சம்பவம் அரங்கேறுகிறது’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த டேவிட் பீவெர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். #CA
  ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடும்போது கேப்டவுன் டெஸ்டில் பான் கிராப்ட், டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கினர். ஐசிசி அவர்களுக்கு அபராதத்துடன் ஒன்றிரண்டு போட்டிகளில் தடைவித்தாலும், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு ஓராண்டு தடைவித்தது.

  ஒருபக்கம் தடைவிதித்தாலும் மறுபக்கம் அவர்களுடைய தண்டனையை திரும்பப் பெற வேண்டும் என்று வலுயுறுத்தப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அதை நிராகரித்தது.  ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியதிற்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது டேவிட் பீவெர் 2-வது முறையாக சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார்.

  இந்நிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் டேவிட் பீவெர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இயர்ல் எட்டிங்ஸ் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்ற டேவிட் வார்னர், முதன்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெறும் கிரிக்கெட்டில் களம் இறங்கியுள்ளார். #Warner
  ஆஸ்திரேலியா அணியின் துணைக் கேப்டனாக திகழ்ந்தவர் டேவிட் வார்னர். கடந்த மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்டின்போது பந்தை சேதப்படுத்திய விவாகரம் விஷ்வரூபம் எடுத்தது. இதில் தொடர்புடைய டேவிட் வார்னருக்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடைவிதித்தது.

  இதனால் சர்வதேச போட்டியிலும், ஐபிஎல் தொடரில் வார்னர் பங்கேற்கவில்லை. அதன்பிறகு வெளிநாட்டில் நடைபெறும் லீக்கிலும், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மிகவும் குறைந்த லெவல் தொடரிலும் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது.  சமீபத்தில் கனடா சென்று கனடா குளோபல் டி20 லீக் தொடரில் விளையாடினார். இந்நிலையில் இன்று முதன்முறையாக தடைக்குப்பின் சொந்த மண்ணில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் வார்னர் கலந்து கொண்டு விளையாடினார்.

  டார்வினில் ஸ்ட்ரைக் லீக் தொடர் நடைபெறுகிறது. இதில் சிட்டி சைகுளோன் அணிக்காக விளையாடி 32 பந்தில் 36 ரன்கள் சேர்த்தார். ‘‘நான் இங்கு கிரிக்கெட் விளையாட வந்திருக்கிறேன். அதை நான் விரும் செய்துகிறேன்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிரிக்கெட் போட்டியில் பந்தை சேதப்படுத்தினால் இனிமேல் 6 டெஸ்ட் அல்லது 12 ஒருநாள் போட்டியில் விளையாட தடைவிதிக்கப்படும். #ICC
  தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான கேப்டவுன் டெஸ்டின்போது ஆஸ்திரேலியா வீரர்கள் பான்கிராப்ட், கேப்டன் ஸ்மித், துணைக்கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கியது தெரியவந்தது. இதனால் ஐசிசி அவர்களுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதித்ததுடன், அபராதமும் விதித்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்தான் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டு தடைவிதித்தது.

  அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை இடையிலான டெஸ்ட் போட்டியின்போது இலங்கை கேப்டன் சண்டிமல் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் சண்டிமலுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.  இந்நிலையில் பந்தை சேதப்படுத்தும் வீரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கான விதிமுறையை தெளிவாக வகுக்க வேண்டும் என்றும் முன்னணி வீரர்கள் கோரிக்கை விடுத்தார்கள். இந்நிலையில் ஐசிசியின் ஆண்டு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

  இதில் பந்தை சேதப்படுத்தினால், குற்றத்திற்கான லெவல் 4-ன் கீழ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரை ஏற்கப்பட்டது. இதனால் இனிமேல் பந்தை சேதப்படுத்திய விவகாரம் நிரூபிக்கப்பட்டால் 6 டெஸ்ட் போட்டிகள் அல்லது 12 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்படும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக இலங்கை அணி கேப்டன் சண்டிமல் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஐசிசி நிராகரித்துள்ளது. #DineshChandimal #BallTampering #ICC

  பார்படோஸ்:

  வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் நடைபெற்றது.

  2-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாள் ஆட்டத்திற்கு இலங்கை வீரர்கள் களம் இறங்க தயாராக இருந்த நிலையில், போட்டி நடுவர்கள் இலங்கை நிர்வாகத்திடம் 2-வது நாள் ஆட்டத்தின்போது இலங்கை அணி (கேப்டன் சண்டிமல்) பந்தை சேதப்படுத்தியுள்ளது. இதனால் வேறு பந்துடன் நீங்கள் பந்து வீச வேண்டும் என்று கூறினார்கள்.

  இதற்கு இலங்கை அணி கேப்டன் சண்டிமல், பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா, மானேஜர் அசங்கா குருசிங்கா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் களம் இறங்க மறுத்துவிட்டனர்.  சுமார் ஒன்றரை மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் இலங்கை வீரர்கள் களம் இறங்கினார்கள். சண்டிமல் மீது பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக போட்டி நடுவர் அவருக்கு 100 சதவிகித அபாரத்துடன் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதித்தார். இதை எதிர்த்து சண்டிமல் மேல்முறையீடு செய்தார். இதுகுறித்து விசாரணை நடத்த மைக்கேல் பெலோஃப்-ஐ ஐசிசி அறிவித்தது.

  இந்நிலையில், சண்டிமலின் மேல்முறையீட்டை மைக்கேல் பெலோஃப் நிராகரித்துள்ளார். சுமார் 4 மணி நேர விசாரணைக்கு பின்னர் இதை அவர் தெரிவித்தார். இதனால் இன்று தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ்-இலங்கை இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என கூறப்பட்டுள்ளது.

  இதையடுத்து, இன்றைய போட்டியில் சண்டிமலுக்கு பதிலாக சுரங்கா லக்மல் கேப்டனாக களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டாவது போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தின்போது சுமார் ஒன்றரை மணிநேரம் தாமதமாக களமிறங்கியதற்காக சண்டிமல், பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா, மானேஜர் அசங்கா குருசிங்கா ஆகியோர் மீது  குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #DineshChandimal #BallTampering #ICC
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓராண்டு தடைக்காலம் மார்ச் மாதத்துடன் முடிவடைவதால் தானாகவே உலகக்கோப்பைக்கு தேர்வாக வாய்ப்புள்ளது என மைக் ஹசி தெரிவித்துள்ளார். #Smith #Hussey
  ஆஸ்திரேலியா அணியின் சிறந்த பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும், துணைக் கேப்டனாகவும் விளங்கியவர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர். இருவரும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்றுள்ளனர். இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கான போட்டிகளில் விளையாட முடியாத நிலை உள்ளது.

  ஆனால், தரம்குறைந்த உள்ளூர் போட்டிகளிலும், வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்கிலும் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னணி பேட்ஸ்மேன்களான இவர்கள் இருவரும், பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ், மிட்டிசெல் மார்ஷ் ஆகியோர் இல்லாமல் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் தடுமாறி வருகிறது.

  எப்போதும் இல்லாத அளவிற்கு 34 ஆண்டுகளுக்குப் பிறகு 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது. அத்துடன் 481 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான உலக சாதனையை தன்வசமாக்கியுள்ளது.

  இந்நிலையில் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இடம்பிடிப்பதில் சிக்கல் இருக்காது என மைக் ஹசி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து மைக் ஹசி கூறுகையில் ‘‘தற்போது வரை இதுகுறித்து பேசுவது கடினம்தான். ஆனால், தரமான வீரர்கள் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெறுவார்கள் என்பதை நீங்கள் சொல்லனும். அணியின் வளர்ச்சிக்கு அவர்கள் எல்லாவற்றையும் சரியாக செய்வார்கள். அவர்கள் சிறந்த டச் உடன்தான் இருக்கிறார்கள். அதேபோல் நல்ல உடற்தகுதியுடன் உள்ளனர். காயம் குறித்த எந்த கவலையும் கொள்ள வேண்டியதில்லை. எல்லாவற்றிலும் சரியாக இருந்தும், தரமான வீரர்கள் என்பதால் நேராக உள்ளே வருவது குறித்து யோசிக்க வேண்டும்.

  நீண்ட காலமாக அவர்கள் இருவரும் சிறந்த வீரர்களாக இருந்துள்ளனர். கிரிக்கெட்டில் உயர்ந்த இடத்தை பிடித்ததுடன், ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரராகவும் இருந்துள்ளனர். அவர்கள் மீண்டும் அணிக்க திரும்ப எல்லா வழிகளும் உள்ளது என்று நினைக்கிறேன்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடுமையான விதிமுறை மீறல் செய்த காரணத்திற்காக பெரிய தண்டனையை எதிர்நோக்கி இலங்கை கேப்டன் சண்டிமல் உள்ளார். #WIvSL #Chandimal
  வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் நடைபெற்றது.

  2-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாள் ஆட்டத்திற்கு இலங்கை வீரர்கள் களம் இறங்க தயாராக இருந்த நிலையில், போட்டி நடுவர்கள் இலங்கை நிர்வாகத்திடம் 2-வது நாள் ஆட்டத்தின்போது இலங்கை அணி (கேப்டன் சண்டிமல்) பந்தை சேதப்படுத்தியுள்ளது. இதனால் வேறு பந்துடன் நீங்கள் பந்து வீச வேண்டும் என்று கூறினார்கள்.

  இதற்கு இலங்கை அணி கேப்டன் சண்டிமல், பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா, மானேஜர் அசங்கா குருசிங்கா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் களம் இறங்க மறுத்துவிட்டனர்.

  சுமார் ஒன்றரை மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் இலங்கை வீரர்கள் களம் இறங்கினார்கள். சண்டிமல் மீது பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக போட்டி நடுவர் அவருக்கு 100 சதவிகித அபாரத்துடன் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதித்தார். இதை எதிர்த்து சண்டிமல் மேல்முறையீடு செய்துள்ளார்.  இந்நிலையில் 3-வது நாள் காலையில் ஒன்றரை மணி நேரம் களம் இறங்காதது ஐசிசியின் விதிமுறையை கடுமையாக மீறியதாக மூன்று பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

  இதுகுறித்து விசாரணை நடத்த மைக்கேல் பெலோஃப்-ஐ ஐசிசி அறிவித்துள்ளது. இவர் விசாரணை முடிவில் தண்டனை வழங்குவார்கள். இவர்கள் செய்த குற்றம் ஐசிசியின் லெவல் 3 அபாரதத்திற்குள் வருவதால், இரண்டு முதல் நான்கு டெஸ்ட் போட்டியில் விளையாடிய அல்லது நான்கில் இருந்து 8 ஒருநாள் போட்டியில் விளையாட தடைவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய இலங்கை அணி கேப்டன் தினேஷ் சந்திமல் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. #WIvSL #SLvWI #DineshChandimal #BallTampering

  வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிரா ஆனது.

  இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இலங்கை அணி கேப்டன் சந்திமல் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆட்டம் இரண்டு மணி நேரம் தடைபட்டது. இதையடுத்து அந்த போட்டி முடிந்தபின் போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.   விசாரணையின் முடிவில் சந்திமல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 2 தகுதி நீக்க புள்ளிகள் வழங்கப்பட்டு, ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி பகல்-இரவு ஆட்டமாக விளையாடப்பட உள்ளது.

  மேலும் போட்டிக்கான மொத்த ஊதியமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே தென்னாப்ரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஒரு ஆண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாத தடையும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #WIvSL #SLvWI #DineshChandimal #BallTampering
  • Whatsapp
  • Telegram