search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிக்கி பாண்டியால் மேக்ஸ்வெல்லை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் - லாங்கர் நம்பிக்கை
    X

    ரிக்கி பாண்டியால் மேக்ஸ்வெல்லை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் - லாங்கர் நம்பிக்கை

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டியால் மேக்வெல்லை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்று லாங்கர் தெரிவித்துள்ளார். #ENGvAUS
    ஆஸ்திரேலியா அணி ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் முதல் தொடர் இதுவாகும். இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி விரும்புகிறது. பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆனால் அதிரடி பேட்ஸ்மேன் ஆன மேக்ஸ்வெல் இரண்டில் ஒற்றையிலக்க ரன்னிலேயே வெளியேறினார்.

    மேக்ஸ்வெல் ஃபார்ம் இன்றி தவித்தாலும் ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளார். இந்த தொடரில் ரிக்கி பாண்டிங் வர்ணனையாளராக செயல்பட இருக்கிறார். தொடருக்கு முன் ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்து டிப்ஸ் வழங்க இருக்கிறார்.



    அப்போது மேக்ஸ்வெல்லை ரிக்கி பாண்டியால் பழைய பார்முக்கு கொண்டு வருவார் என்று லாங்கர் கூறியுள்ளார். இதுகுறித்து லாங்கர் கூறுகையில் ‘‘இங்கிலாந்து தொடருக்கான மேக்ஸ்வெல்லின் தயார்படுத்துதல் நிலை சிறப்பாக உள்ளது. அவர் விரைவில் மிகப்பெரிய ஸ்கோரை எட்டவில்லை எனில், நான் மிகவும் ஆச்சர்யம் அடைவேன். அவரைப் பற்றி பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், அவர் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்து வருவது எனக்கு ஈர்ப்பை கொடுத்துள்ளது.

    மேக்ஸ்வெல் இரண்டு மாதங்களாக ரிக்கி பாண்டிங் உடன் இணைந்து ஐபிஎல் தொடரில் பணியாற்றியுள்ளார். ரிக்கி பாண்டிங் உடனான இந்த நிகழ்வு முக்கியமானது. ரிக்கி பாண்டிங் எங்கள் அணியுடன் ஞாயிற்றுக்கிழமை (இன்று) இணைவார். மேக்ஸ்வெல் அவரது பயிற்சியை சிறப்பாக செய்து, அவர் மீது நம்பிக்கை வைத்தால், அவர் சிறந்த வீரராக மாறுவது வெகுதூரத்தில் இல்லை. அவர் ஏராளமான திறமையை பெற்றுள்ளார்’’ என்றார்.
    Next Story
    ×