என் மலர்

  செய்திகள்

  மிக இளம் வயதில் அறிமுகமாகி பிராட்டை பின்னுக்குத் தள்ளினார் சாம் குர்ரான்
  X

  மிக இளம் வயதில் அறிமுகமாகி பிராட்டை பின்னுக்குத் தள்ளினார் சாம் குர்ரான்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  46 நாட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட்டை பின்னுக்குத் தள்ளினார் சாம் குர்ரான். #ENGvAUS
  இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியில் சாம் குர்ரான் அறிமுகமானார். ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய பின்னர், இங்கிலாந்து அணியில் அறிமுகமாகிய இவருக்கு, 20 வயது 21 நாட்களே ஆகும்.

  இதன்மூலம் இளம் வயதிலேயே இங்கிலாந்து ஒருநாள் அணியில் இடம்பிடித்த 2-வது வீரர் என்ற பெருமையை ஸ்டூவர்ட் பிராட்டிடம் இருந்து தட்டிப்பறித்துள்ளார். பிராட் 20 வருடம் 67 நாட்களில் இந்த சாதனையைப் படைத்திருந்தார். 46 நாள் வித்தியாசத்தில் சாம் குர்ரான் 2-வது இடத்தில் உள்ளார்.  பென் ஹோலியாக் 19 வயது 195 நாட்களில், மிக இள வயதில் அறிமுகமானவர் என்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். பென் ஸ்டோக்ஸ் 20 வயது 82 நாட்களுடன் 4-வது இடத்திலும், ஆண்டர்சன் 20 வயது 138 நாட்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
  Next Story
  ×