என் மலர்

  செய்திகள்

  கடைசி ஒருநாள் கிரிக்கெட்- மொயீன் அலி சுழலில் 205 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா
  X

  கடைசி ஒருநாள் கிரிக்கெட்- மொயீன் அலி சுழலில் 205 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மொயீன் அலியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா 35 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 205 ரன்னில் சுருண்டது. #ENGvAUS
  இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

  டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆரோன் பிஞ்ச், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.  இந்த ஜோடி 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் குவித்தது. இந்த ஜோடியை மொயீன் அலி பிரித்தார். 7-வது ஓவரை மொயீன் அலி வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ஆரோன் பிஞ்ச் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் க்ளீன் போல்டானார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 5-வது பந்தில் டக்அவுட் ஆனார்.  அதன்பின் வந்த ஷேன் மார்ஷ் 8 ரன்னி்ல் மொயீன் அலி பந்தில் ஸ்டம்பிங் ஆகி வெளியேற, ஆஸ்திரேலியா தடம்புரள ஆரம்பித்தது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் தன் பங்கிற்கு 56 ரன்கள் சேர்த்தார். கேரி 44 ரன்களும், ஆர்கி ஷார்ட் அவுட்டாகாமல் 47 ரன்களும் சேர்க்க ஆஸ்திரேலியா 34.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 205 ரன்னில் சுருண்டது.
  Next Story
  ×