search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "encounter"

    • பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழப்பு.
    • ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்த்து தாக்குதல் நடத்தும் பிரிவு தான் ராஷ்ட்ரிய ரைஃபில்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைஃபில் பிரிவை வழிநடத்துபவர் மற்றும் உயர் அதிகாரி என இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் துணை காவல் கண்காணிப்பாளர் உயிரிழந்தார்.

    கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ஆஷிஷ் தொன்சக் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஹிமான்யுன் முசாமில் ஆகியோர் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தங்களின் உயிரை இழந்தனர். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவம் மற்றும் காவல் துறை இணைந்து துப்பாக்கி சூடு நடத்தியது.

     

    இந்திய ராணுவத்தின் 19 ராஷ்ட்ரிய ரைஃபிள் பிரிவுக்கு மன்பிரீத் சிங் வழிநடத்தும் அதிகாரியாக இருந்து வந்தார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்த்து தாக்குதல் நடத்தும் பிரிவு தான் ராஷ்ட்ரிய ரைஃபில். இந்த பிரிவு ஜம்மு காஷ்மீரில் இயங்கி வருகிறது.

    உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறை அதிகாரியின் உடல்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு விட்டன. பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தான் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

    இதில் மூன்று பேர் உயிரிழந்ததோடு, மூன்று அதிகாரிகள் பலத்த காயமுற்றனர். கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற இரண்டாவது என்கவுண்டர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • ராணுவ வீரர் வீர மரணம் அடைந்த நிலையில், 3 பேர் காயம் அடைந்துள்ளனர்
    • தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது

    ஜம்மு-காஷ்மீர்,  ஜம்முவில் உள்ள ரஜோரி மாவட்டத்தின் நர்ல்லா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பாதுகாப்புப்படை வீரர்கள் மோப்ப நாயுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் வீரர்கள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் வீர மரணம அடைந்தார். மேலும், அதிகாரி ஒருவர் உள்ளபட மூன்று பேர் காயம் அடைந்தனர்.

    அத்துடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த 21-வது ராணுவ மோப்பநாய் பிரிவின் 6 வயது பெண் மோப்ப நாயும் சண்டையில் உயிரிழந்தது. தன்னை வழிநடுத்துபவரை பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டில் இருந்து பாதுகாக்கும் வகையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டது.

    பாதுகாப்புப்படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சண்டை நீடித்து வரும் நிலையில், அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    • முழு நாடும் நமது துணிச்சலான வீரர்களால் பெருமை கொள்கிறது.

    ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அம்மாவட்டத்தின் ஹலன் பகுதியில் நேற்று இரவு ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

    இதில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

    இந்நிலையில், பயங்கரவாதிகளுடனான என்கவுண்டரில் உயிரிழந்த 3 ராணுவ வீரர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அஞ்சலி செலுத்தினார்.

    இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " பயங்கரவாதிகளுடனான மோதலில் நாட்டைக் காத்த நமது துணிச்சலான வீரர்களின் அழியா தியாகத்திற்கு எனது அஞ்சலிகள். நமது வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நம்மைக் காக்கிறார்கள். முழு நாடும் நமது துணிச்சலான வீரர்களால் பெருமை கொள்கிறது" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரவுடி சோட்டா வினோத் மீது 10 கொலை வழக்கு உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன
    • ரமேஷ் மீது 5 கொலை வழக்கு உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன

    சென்னை வண்டலூர் அடுத்துள்ள கூடுவாஞ்சேரி அருகே போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற 2 ரவுடிகள் என்கவுண்டரில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இன்று அதிகாலையில் நடைபெற்ற இந்த போலீஸ் வேட்டை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    தாம்பரம் புறநகர் பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தினமும் இரவு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் நேற்று இரவு கூடுவாஞ்சேரியை அடுத்த காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது.

    கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    இன்று அதிகாலையிலும் போலீசாரின் வாகன சோதனை நீடித்தது. அப்போது 3.30 மணியளவில் அந்த வழியாக ஸ்கோடா கார் ஒன்று வேகமாக வந்தது. மின்னல் வேகத்தில் வந்த காரை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். ஆனால் காரில் இருந்தவர்கள் வேகத்தை குறைக்காமல் போலீசாரை இடித்து தள்ளுவதுபோல சென்றனர்.

    போலீசிடமிருந்து தப்பிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் காரை ஓட்டி வந்தவர்கள் அதனை தாறுமாறாக இயக்கினார்கள். இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. பின்னர் அங்கு நின்றிருந்த போலீஸ் வாகனத்தின் மீது மோதி அதனை இடித்து தள்ளி நின்றது. இதைத்தொடர்ந்து போலீசார் காரை நோக்கி விரைந்து சென்றனர். அப்போது காரில் இருந்து 4 பேர் இறங்கினர். அவர்களில் 2 பேர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    அவர்களின் கையில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து போலீசார் 4 பேரையும் மடக்கி பிடிக்க நினைத்து அருகில் சென்றனர். ஆயுதங்களை கீழே போடுங்கடா? என்று எச்சரித்துக் கொண்டே போலீசார் அவர்களின் அருகில் சென்றனர். ஆனால் ரவுடிகள் அதனை கேட்கவில்லை.

    அவர்களில் ஒருவன் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதனை அரிவாளால் வெட்டி பயங்கர தாக்குதலில் ஈடுபட்டான். அவரது இடது கையில் முதலில் வெட்டிய அவன் பின்னர் தலையிலும் வெட்டினான். ஆனால் சிவகுருநாதன் குனிந்து கொண்டார். இதனால் தொப்பியில் வெட்டு விழுந்தது.

    ரவுடிகளின் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் இன்ஸ்பெக்டர் முருகேசன் இருவரும் தங்களது துப்பாக்கியை தூக்கினர். தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள இருவரும் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ரவுடி, இன்னொரு ரவுடி ஆகிய இருவர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதில் அலறி துடித்த இருவரும் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தனர். உடனடியாக இருவரையும் ஆஸ்பத்திரிக்கு போலீசார் தூக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே இருவரும் உயிரிழந்து விட்டனர்.

    போலீஸ் என்கவுண்டரில் சுட்டுத்தள்ளப்பட்ட 2 ரவுடிகளும் பயங்கர ரவுடிகள் என்பது தெரியவந்தது. ஒருவனது பெயர் சோட்டா வினோத். இவனுக்கு 35 வயதாகிறது. இன்னொருவன் பெயர் ரமேஷ். இவனுக்கு வயது 32. இருவரும் ஓட்டேரி போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆவர்.

    இவர்கள் தங்களது கூட்டாளிகளுடன் நேற்று இரவு காரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நோக்கில் ஆயுதங்களுடன் காரில் சுற்றி திரிந்துள்ளனர். அப்போதுதான் வாகன சோதனையின்போது போலீசில் சிக்கி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்.

    சிறுவயதிலேயே தவறான பழக்க வழக்கங்கள் காரணமாக சோட்டா வினோத்தும், ரமேசும் ரவுடிகளாக மாறி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    சோட்டா வினோத் ஏ-பிளஸ் ரவுடியாக வலம் வந்துள்ளான். ஓட்டேரி, மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வந்த இவன் அப்பகுதியில் பெரிய தாதாவாக வலம் வந்துள்ளான். தொழில் அதிபர்கள் மற்றும் பெரிய நிறுவன உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிப்பது, அடிதடியில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சோட்டா வினோத் மீது 10 கொலை வழக்குகளும், 15 கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன.

    ரவுடியான இவன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு கொள்ளையில் ஈடுபட்டு அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபோன்று 10 இடங்களில் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட வழக்கும், 15 இடங்களில் அடிதடியில் ஈடுபட்டு பொதுமக்களை பயமுறுத்திய வழக்கும் உள்ளது. இதுபோன்று 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் சோட்டா வினோத் மீது உள்ளன.

    என்கவுண்டரில் பலியான இன்னொரு ரவுடியான ரமேஷ் ஏ-வகையை சேர்ந்த ரவுடி ஆவான். இவன் மீதும் ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வந்தது.

    இவன் மீது 5 கொலை, 7 கொலை முயற்சி, 8 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    2 ரவுடிகளின் உடல்களும் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் இன்னும் திருமணமாக வில்லை. பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக ஆஸ்பத்திரி மற்றும் ஓட்டேரி சுற்று வட்டார பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ரவுடிகள் அரிவாளால் வெட்டியதில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயர் போலீஸ் அதிகாரிகள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    அதிகாலையில் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு 2 ரவுடிகள் இரையான சம்பவம் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ரவுடிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றனர்.
    • அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கிச்சூடு சண்டை நடந்தது. இதில், 4 முதல் 6 நக்சலைட்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. ஆனால், இதில் இவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனரா என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.

    காரணம், துப்பாக்கிச்சூடுக்கு பிறகு அந்த இடத்தில் நக்சலைட்களின் உடல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    சிந்தாகுஃபா மற்றும் கிஸ்டாரம் காவல் நிலைய எல்லையில் உள்ள மாவோயிஸ்டுகளின் கோட்டையான சோடேகெட்வால் கிராமத்தின் வனப்பகுதியில் நடந்த இந்த என்கவுண்டரில் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் எலைட் கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா) ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • துப்பாக்கிகள், கியாஸ் சிலிண்டர்கள், வெடிகுண்டுகள் பறிமுதல்
    • 20 முதல் 30 கொள்ளையர்கள் பதுங்கி உள்ளதால் தேடுதல் வேட்டை நீடித்து வருகிறது

    பீகார் மாநிலம் சம்பாரன் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் இன்று காலை போலீசார் கொள்ளையர்களை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு கொள்ளையர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மூன்று போலீசார் காயம் அடைந்தனர். காயம் அடைந்த போலீசார் சதார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கொள்ளையர்களிடம் இருந்து துப்பாக்கி, கியாஸ் சிலிண்டர், செயல் இழக்காத வெடிகுண்டு, கியாஸ் கட்டர் போன்றவை கைப்பற்றப்பட்டதாக மோடிகாரி எஸ்.பி. கந்தேஷ் குமார் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

    மேலும், ''வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் குழுவிற்கு தகவல் அனுப்பியுள்ளோம். இன்னும் பல குண்டுகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. 25 முதல் 30 கொள்ளையர்கள் அந்தப் பகுதியில் உள்ளனர். அவர்களை தேடிவருகிறோம்.

    உயிரிழந்த கொள்ளையர்களின் உடல்கள் உடல்பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். உள்ளூர் காவல் நிலையங்களுக்கு அவர்களது போட்டோவை அனுப்பி வைத்துள்ளோம். நேபாள எல்லையில் சம்பவம் நடைபெற்றதால் அங்குள்ள காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்துள்ளோம்.

    • ரஜோரிக்கு அருகிலுள்ள தஸ்சல் குஜ்ரான் வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயங்கரவாதிகளின் நடமாட்டம்.
    • என்கவுன்டரை அடுத்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் நேற்று நள்ளிரவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரஜோரிக்கு அருகிலுள்ள தஸ்சல் குஜ்ரான் வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்ததை அடுத்து ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    பின்னர், பாதுகாபு்பு படையினர் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. 

    இந்நிலையில், பயங்கரவாதிகளை நோக்கி பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் நடத்தினர்.

    இதில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஜம்மு காஷ்மீரின் உரி செக்டார் பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை.
    • குப்வாராவில் ஊடுருவல் முயற்சியை முறியடித்தது மற்றும் இரண்டு பயங்கரவாதிகளை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அன்ட்வான் சாகம் பகுதியில் இன்று காலை என்கவுன்டர் நடந்தது. ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல், நேற்று அதிகாலையில் ஜம்மு காஷ்மீரின் உரி செக்டார் பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. பாகிஸ்தான் தரப்பில் குவாட்காப்டரை பறக்கவிட முயன்றபோது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் என்கவுண்டர் நடத்தி பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர்.

    கடந்த மே 3ம் தேதி அன்று, இந்திய ராணுவம் குப்வாராவில் ஊடுருவல் முயற்சியை முறியடித்தது மற்றும் இரண்டு பயங்கரவாதிகளை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

    • அவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது.
    • குற்றவாளிகளிடம் இருந்து வெளிநாட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக சட்டம் ஒழுங்கு பிரிவு சிறப்பு டிஜிபி தெரிவித்தார்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் ரவுடியுமான அத்திக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியான வக்கீல் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அத்திக் அகமது மற்றும் அவரது மகன் ஆசாத், கூட்டாளி குலாம் ஆகியோர்  குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். ஆசாத், குலாம் ஆகியோர் குறித்து துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது.

    இந்நிலையில், அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவரது கூட்டாளி குலாம் ஆகியோர் இன்று போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜான்சியில் அவர்களை மாநில அதிரடிப்படை போலீசார் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். குற்றவாளிகளிடம் இருந்து வெளிநாட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக சட்டம் ஒழுங்கு பிரிவு சிறப்பு டிஜிபி தெரிவித்தார்.

    உமேஷ் பால் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் அத்திக் அகமது மற்றும் அவரது கூட்டாளிகள் கான் சவுலத், தினேஷ் பாசி ஆகியோருக்கு சமீபத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு உள்ளனர்.
    • பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு வீரர்களுக்கும் இடையே அந்த பகுதியில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

    ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் மித்ரிகாம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து கூட்டாக அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்நிலையில், பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதற்கு வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    இதனை அடுத்து, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு வீரர்களுக்கும் இடையே அந்த பகுதியில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

    அந்த பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வீரர்கள் கொண்டு வந்து உள்ளதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • இரு தரப்புக்கும் இடையே சில மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நீடித்தது.
    • பயங்கரவாதிகள் மேலும் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    சோபியான் மாவட்டம் சைனாபுரா நகரில் முன்ஜா மர்க் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே சில மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நீடித்தது.

    இந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். என்கவுண்டர் நடைபெற்ற பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நடிகை கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில் பயங்கரவாதிகள் இருவரையும் பாதுகாப்பு படையினர் வேட்டையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் பட்கம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிரபல டி.வி. நடிகை அம்ரீன்பட் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    பாதுகாப்பு படையினர் இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் நடிகையை சுட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த 2 பயங்கரவாதிகளையும் கண்டுபிடிக்க நேற்று காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது 2 பயங்கரவாதிகளும் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா என்ற பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். நேற்று மாலை முதல் அந்த 2 பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

    நீண்ட துப்பாக்கி சண்டைக்கு பிறகு அந்த 2 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் தான் டி.வி. நடிகையை சுட்டுக்கொன்றது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. நடிகை கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில் பயங்கரவாதிகள் இருவரையும் பாதுகாப்பு படையினர் வேட்டையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோன்று ஸ்ரீநகர் அருகே சவுரா என்ற இடத்திலும் 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை முற்றுகையிட்டு 2 பயங்கரவாதிகளையும் சுட்டுக்கொன்றனர்.

    காஷ்மீரில் கடந்த 3 நாட்களில் நடந்த சண்டையில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் 3 பேர் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள்.
    ×