புல்வாமா பகுதியில் என்கவுண்டர்- பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்த பாதுகாப்பு படையினர்

பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு உள்ளனர்.பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு வீரர்களுக்கும் இடையே அந்த பகுதியில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
புல்வாமா பகுதியில் என்கவுண்டர்- பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்த பாதுகாப்பு படையினர்
Published on

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் மித்ரிகாம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து கூட்டாக அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதற்கு வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதனை அடுத்து, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு வீரர்களுக்கும் இடையே அந்த பகுதியில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

அந்த பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வீரர்கள் கொண்டு வந்து உள்ளதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com