search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "En Mann En Makkal"

    • பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார்.
    • விமானப்படை ஹெலிகாப்டரை இறக்கி சோதனை நடத்தப்பட்டது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் வருகிற 27-ந்தேதி பா.ஜ.க. சார்பில் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார். இதற்காக கேரளாவில் இருந்து கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் மாதப்பூர் மைதானத்திற்கு செல்கிறார். இதற்காக அங்கு ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் இன்று காலை மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் சூலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட விமானப்படை ஹெலிகாப்டரை இறக்கி சோதனை நடத்தப்பட்டது.

    • பிரதமர் மோடி வருகையையொட்டி பல்லடத்தில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • பொதுக்கூட்டத்திற்கு எவ்வளவு பேர் வருவார்கள், அதற்கான பாதுகாப்பு பணியில் எவ்வளவு போலீசாரை நிறுத்துவது என ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை எதிரில் வருகிற 27-ந்தேதி பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழாவும், பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமும் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பல்லடம் பொதுக்கூட்டம் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.

    இந்தநிலையில் பல்லடம் வரும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதற்காக மாதப்பூர் பகுதியில் சாலையின் இருபுறமும் கட்சி கொடி, தோரணங்கள் கட்டும் பணிகள் தொடங்கி உள்ளது.

    மேலும் பிரதமர் வருகையையொட்டி திருப்பூர் பா.ஜனதா கட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பிரதமர் வருகையை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக திருப்பூர்-தாராபுரம் சாலை கே.செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் "நாங்கள் பிரதமர் மோடியை நேசிக்கிறோம்" (வி லவ் பி.எம்.மோடி) என்று ஆங்கில வாசகத்தில் மாணவ-மாணவிகள் 650 பேர் அணிவகுத்து நின்று பாரத பிரதமர் வருகைக்கு தங்களது அன்பை தெரிவிக்கும் விதமாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள் ஏற்பாட்டில் நடைபெற்றது.


    பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து பா.ஜனதா மாநில பொதுச்செயலாளரும், பொதுக்கூட்ட பொறுப்பாளருமான ஏ.பி.முருகானந்தம் கூறும்போது, பொதுக்கூட்டத்தில் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். பொதுக்கூட்டத்திற்கு சில மாவட்டங்களில் இருந்து பா.ஜனதா தொண்டர்கள் நடைபயணமாகவும், சைக்கிளிலும், மாட்டு வண்டி மூலமாகவும் வந்து பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் பங்கேற்கும் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றார். இதற்கிடையே பிரதமர் மோடி வருகையையொட்டி பல்லடத்தில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் பிரதமரின் பாதுகாப்புக்கான மத்திய சிறப்பு படை அதிகாரிகள் குழு நேற்றிரவு திருப்பூர் வந்தனர். அவர்கள் இன்று காலை பொதுக்கூட்டம் நடைபெறும் பல்லடம் மாதப்பூருக்கு சென்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். மேடை அமைக்கப்படும் இடம், பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் முழுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மைதானத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனால் இன்று முதல் மைதானத்திற்குள் செல்பவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்படுகின்றனர். மைதானத்தின் முக்கிய இடங்கள் மற்றும் ஹெலிகாப்டர் தளம் ஆகிய இடங்களில் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே பொதுக்கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பூர் மாவட்ட போலீசாருடன் மத்திய பாதுகாப்பு படையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுக்கூட்டத்திற்கு எவ்வளவு பேர் வருவார்கள், அதற்கான பாதுகாப்பு பணியில் எவ்வளவு போலீசாரை நிறுத்துவது என ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சூலூரில் இருந்து மாதப்பூர் வரையிலான இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

    • முஸ்லீம்கள் சவுதி அரேபியா செல்வதால் அந்த நாட்டிற்கு வருமானம் அதிகரித்துள்ளது.
    • இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலம் தமிழகம்.

    என் மண் என் மக்கள் யாத்திரை மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் அண்ணாமலை ஆட்டோ ஓட்டுநரில் காக்கிச்சட்டை அணிந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியா, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் இடம்பெற்றுள்ளது. முஸ்லீம்கள் சவுதி அரேபியா செல்வதால் அந்த நாட்டிற்கு வருமானம் அதிகரித்துள்ளது.

    அயோத்திக்கு 5 கோடி பேர் செல்வார்கள் என ஆய்வறிக்கை கூறுகிறது. 5 கோடி பேர் வருகையால் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 4 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

    உ.பி அரசுக்கு மட்டும் 25 ஆயிரம் கோடி வரியாக கிடைக்கும். ராமர் கோவில் நமக்கு வழிகாட்டுகிறது.

    இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலம் தமிழகம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் அவதிப்படுகின்றனர்.

    முழுமையாக சென்னை மாநகரை மாற்ற வேண்டிய நேரம் இது. பள்ளி, சாலை, மருத்துவமனை உள்பட அனைத்தையும் சரிசெய்ய வேண்டிய நேரம் இந்த தேர்தல்.

    மத்தியில் அமைப்புச்சார தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிப்ரவரி 11-ந்தேதி "என் மண் என் மக்கள்" யாத்திரை 200-வது தொகுதியாக சென்னை வர இருக்கிறது.
    • தற்போது வரை 183 தொகுதிகளை கடந்திருக்கிறோம். பல்லடத்தில் யாத்திரை நிறைவு பெறுகிறது.

    தமிழக பா.ஜனதாவின் தலைமை தேர்தல் அலுவலகம் சென்னை அமைந்தகரையில் அமைக்கப்பட்டு உள்ளது. 40 தொகுதிகளுக்கும் தனித்தனி அறைகள், மற்றும் பல்வேறு துறைகளுக்கான அறைகள் இணையதள வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதன் திறப்பு விழா இன்று நடந்தது. தேர்தல் பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் ஆகியோர் முன்னிலையில் இந்த அலுவலகத்தை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிர்வாகிகள் மத்தியில் பேசியதாவது:-

    கடந்த 2019 தேர்தலை வைத்து பார்க்கும்போது வருகிற ஏப்ரல் 2 அல்லது 3-வது வாரத்தில் தமிழகத்தில் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.

    பா.ஜனதாவுக்காக காலம் காலமாக உழைத்தவர்களின் ஏக்கமும், கனவும் நிறைவேறும் காலம் நெருங்கி வருகிறது. இன்னும் 75 நாட்கள் இருக்கிறது. இதுவரை கட்சிக்காக உழைத்து கொண்டிருப்பவர்கள் தங்கள் உழைப்பை இரட்டிப்பாக்க வேண்டும்.

    என் மண் என் மக்கள் யாத்திரை மூலமாக இதுவரை 183 சட்டமன்ற தொகுதிகளை சந்தித்துள்ளோம். 200-வது தொகுதியாக சென்னையில் வருகிற 11-ந்தேதி யாத்திரை செல்கிறோம். இதில் ஜே.பி. நட்டா கலந்து கொள்வார். 234-வது தொகுதியாக திருப்பூரில் யாத்திரை நிறைவு பெறுகிறது.

    எல்லா தொகுதிகளிலும் பிரதமர் மோடியின் திட்டங்களால் பயன் அடைந்த 100 பேரை தேடி கண்டுபிடித்து அவர்களில் 10 பேரை மேடையில் ஏற்றி பேச வைத்தோம்.

    ரோட்டில் நடந்து சென்ற யாத்திரையை தாண்டி பல தரப்பட்ட மக்களை சந்தித்து வருகிறோம். அரசியல் களம் எப்படி மாறி இருக்கிறது என்பது நமக்கு தெரியும். இந்த ஆண்டு மிகப்பெரிய அரசியல் புரட்சி ஏற்படும்.

    பிரதமர் மோடி ராமர் சிலை பிரதிஷ்டைக்காக சங்கல்பம் மேற்கொண்டு 11 நாள் விரதம் இருந்தார். அதேபோல் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வருகிற 75 நாட்களும் உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என் மண் என் மக்கள் யாத்திரை வருகிற 25-ந்தேதி பல்லடத்தில் நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட கூட்டம் நடக்கிறது. இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள்.

    கடந்த 2 ஆண்டுகளாக பிரதமர் மோடி கோவை பகுதிக்கு செல்லவில்லை. எனவே இந்த கூட்டத்தை பல்லடத்தில் நடத்துகிறோம்.

    இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல். மாற்று கட்சிகளை சேர்ந்தவர்களும் மத்தியில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பு கிறார்கள். தமிழகத்தில் பா.ஜனதா மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. எல்லோரும் திரும்பி பார்க்கும் வகையில் தேர்தல் முடிவுகள் அமையும்.

    கூட்டணியை பொறுத்த வரை ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தை என்பது கடினமான ஒன்று. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது. இன்னும் காலம் இருக்கிறது.

    தி.மு.க. 31 மாதங்களில் செய்துள்ள தவறுகளை சுட்டிக் காட்டுவோம். பா.ஜனதா அரசு செய்துள்ள சாதனைகளையும் மக்கள் மத்தியில் எடுத்து சொல் வோம். அவர்கள் முடிவு செய்வார்கள்.

    இந்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படபோவதில்லை. இப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் வரப்போவதில்லை. மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் தமிழக பா.ஜனதா தேர்தல் குழுக்களின் ஒருங்கிணைப்பாளராக சக்கரவர்த்தியும், இணை ஒருங்கிணைப்பாளர்களாக நாராயணன் திருப்பதி, நரேந்திரன், நாச்சியப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

    • ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
    • நகர பகுதிகளில் நடந்து 1700 கி.மீ. தூரமும் மற்ற பகுதிகளில் சிறப்பு பேருந்துகள் மூலம் 900 கி.மீ. தூரமும் யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்தார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனையை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்லும் நோக்கில் "என் மண் என் மக்கள்" என்ற நடைபயணத்தை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஜூலை மாதம் 18-ந்தேதி தொடங்கினார். ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

    நகர பகுதிகளில் நடந்து 1700 கி.மீ. தூரமும் மற்ற பகுதிகளில் சிறப்பு பேருந்துகள் மூலம் 900 கி.மீ. தூரமும் யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்தார். 5 கட்டங்களாக 168 நாட்களில் 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையிலும், வருகிற ஜனவரி 20-ந்தேதிக்குள் யாத்திரையை முடிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 10 மாநகர பகுதிகளில் பொதுக்கூட்டங்களும் நடத்தப்படுகிறது.

    நான்கு கட்ட பாத யாத்திரை முடிவடைந்த நிலையில் ஐந்தாம் கட்டம் மற்றும் கடைசி கட்ட யாத்திரையை டிசம்பர் 16-ந்தேதி தொடங்கியுள்ளார். அடுத்த மாதம் 10-ந்தேதி யாத்திரையை நிறைவு செய்கிறார்.

    • மத வழிபாட்டு தலங்கள், மக்கள் கூடும் இடங்கள், மருத்துவமனைகள் இருப்பதால் அனுமதி மறுப்பு
    • நோட்டீஸை ஏற்காமல், காவல்துறையுடன் பா.ஜனதாவினர் வாக்குவாதம்

    பா.ஜனதா தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற பாதயாத்திரையை (நடைபயணம்) மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாவட்டங்களில் நடைபயணத்தை முடித்துள்ளார். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    இந்த நிலையில் காவல்துறை அவரது நடைபயணத்திற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது. யாத்திரை நடைபெறும் பகுதிகளில் மத வழிபாட்டு தலங்கள், மக்கள் கூடும் இடங்கள், மருத்துவமனைகள் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் வழங்கிய நோட்டீஸை ஏற்காமல், அறிவிக்கப்படட வழியில்தான் யாத்திரை நடைபெறும் என பா.ஜனதாவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாற்றுப் பாதையில் அனுமதி வழங்க பா.ஜனதாவடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக முறையிடுபவர்களுக்கு கட்சியினரால் செய்ய முடிந்த உதவிகளை உடனடியாக செய்து கொடுக்கிறார்.
    • நாளை மாலை கரூரில் இருந்து தனது 52வது நாள் யாத்திரையை தொடங்குகிறார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண்... என் மக்கள்...' யாத்திரையை ராமேசுவரத்தில் தொடங்கினார். மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். ஊரக பகுதி, நகர் பகுதிகளில் நடந்தும் மற்ற பகுதிகளில் வேனிலும் யாத்திரை செய்கிறார்.

    அவரது இந்த யாத்திரை பா.ஜனதாவுக்கு எழுச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவே கருதப்படுகிறது. இதுவரை 51 நாட்கள் யாத்திரை சென்றுள்ளார். 92 சட்டமன்ற தொகுதிகளையும் கடந்து சென்றுள்ளார்.

    இந்த யாத்திரையை பொறுத்தவரை அவர்களே எதிர்பாராத அளவுக்கு கூட்டம் திரள்வதாக கூறுகிறார்கள். அதிக அளவில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் காணப்படுகிறார்கள். அவர்களில் கட்சி சாராத பலர் கட்சியினரிடையே முட்டி மோதி அண்ணாமலையுடன் செல்பி எடுத்து கொள்ளவும், கை குலுக்கவும், பேசவும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஏராளமானவர்கள் யாத்திரை செல்லும் வழிகளில் காத்து நிற்பதையும் பார்க்க முடிகிறது.

    சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரம் பேர் வரை திரளுவதாக கணக்கிட்டுள்ளனர். அதன்படி இதுவரை 10 லட்சம் பேரை சந்தித்துள்ளார்.

    தனது யாத்திரையை முழுக்க முழுக்க தேர்தல் பிரசாரம் போலவே நடத்தி வருகிறார். ஆளும் தி.மு.க. அரசு கொடுத்த பொதுவான வாக்குறுதிகள் அதில் நிறைவேற்றாமல் இருப்பது பற்றி தி.மு.க. தேர்தல் அறிக்கையை மேற்கோள் காட்டி பேசி வருகிறார்.

    குறிப்பாக தான் செல்லும் தொகுதிகளின் பிரச்சனை, அந்த தொகுதி சார்ந்த நிறைவேற்றப்படாத பிரச்சனைகளையும் எடுத்துச் சொல்கிறார். அத்துடன் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் அந்தந்த தொகுதியில் பயன்பெற்றவர்களின் பட்டியலையும் அறிவிக்கிறார்.


    யாத்திரை செல்லும் இடங்களில் பொதுமக்களும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக புகார் கொடுக்கிறார்கள். அந்த மனுக்களை பெற்றுக்கொள்ளும் அண்ணாமலை அதை தினமும் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கிறார். இந்த மனுக்களை துறை வாரியாக பிரிப்பது, கம்ப்யூட்டரில் பதிவு செய்வது மனு கொடுத்தவர்களிடம் தொடர்பு கொண்டு விசாரிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள கமலாலயத்தில் 10 பேர் கொண்ட குழு செயல்படுகிறது. அவர்கள் மனுக்களை பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு அனுப்பி வருகிறார்கள்.

    தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக முறையிடுபவர்களுக்கு கட்சியினரால் செய்ய முடிந்த உதவிகளை உடனடியாக செய்து கொடுக்கிறார்.

    ஒரு இடத்தில் கால்வாயை கடந்து செல்ல வசதியில்லை என்றார்கள். உடனடியாக சிமெண்ட் சிலாப் அமைத்து கொடுத்தார். கரூரை சேர்ந்தவர் லண்டனில் இறந்து விட்டார். அவரது உடலை கொண்டு வர முடியாமல் தவிப்பதாக அவரது குடும்பத்தினர் முறையிட்டார்கள். உடனடியாக மத்திய அரசு மற்றும் லண்டன் தமிழ் சங்கம் ஆகியவற்றை தொடர்பு கொண்டு உடலை கரூர் கொண்டு வர ஏற்பாடு செய்ததோடு கட்சியினரிடம் நிதி திரட்டி அந்த குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் நிதி வழங்கினார்.

    பரமத்திவேலூரில் தாய்-மகன் கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் அந்த வீட்டுக்கு சென்று விசாரித்து ஆறுதல் கூறினார்.

    வீடு இல்லை என்று பலர் கேட்டனர். அவர்கள் பெயர் விவரங்களை கேட்டு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.

    அவரது இந்த பயணத்தின் மூலம் எல்லா பகுதிகளிலும் பா.ஜனதாவை காலூன்ற வைத்து வருகிறார். இன்று இலங்கை சென்றுள்ளதால் பயணம் நடைபெறவில்லை.

    நாளை மாலை கரூரில் இருந்து தனது 52வது நாள் யாத்திரையை தொடங்குகிறார். 8-ந் தேதி திருச்சியில் முடிக்கிறார். அதன் பிறகு 4-வது கட்ட யாத்திரை தீபாவளிக்கு பிறகு 15 அல்லது 16-ந் தேதியில் தொடங்கும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • 50 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்த அரசு சார்பில் கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டு செயல்படுகிறது.
    • பல்வேறு மக்களுடைய கோரிக்கைகளை சட்டமன்றத்திலே பேசி அவற்றை நிறைவேற்றுகின்ற முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றேன்.

    திருச்செங்கோடு:

    தமிழகம் முழுவதும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தின்போது பொதுமக்களை சந்தித்து பிரதமர் மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறுகிறார். குறிப்பாக பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் மாலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. சட்டமன்ற உரைகளை பற்றியும், தொகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் விமர்சித்து இருந்தார்.

    இதற்கு பதிலளித்து ஈஸ்வரன் எம்.எல்.ஏ. அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 30 மாதங்களில் பலமுறை நான் சட்டமன்றத்திலே பேசியிருக்கிறேன். திருச்செங்கோடு மலைக்கு ரோப் கார் அமைப்பதை பற்றி சட்டமன்றத்தில் பேசி இருக்கிறேன். ரோப் கார் என்பது சட்டமன்றத்திலேயே அறிவிக்கப்பட்டு திருச்செங்கோடு மலைக்கு ரோப் கார் அமைக்க முடியுமா என்பதை ஒரு குழு ஆய்வு செய்து சாத்தியக்கூறு இல்லை என்பதை அறிவித்த பின் இந்து சமய அறநிலையத்துறை மாற்று சாலையை அமைப்பதற்கு நெடுஞ்சாலை துறையிடம் கருத்துரு அனுப்பி இருக்கிறது. இது நெடுஞ்சாலைத்துறை ஆய்வில் தற்போது இருக்கிறது.

    50 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்த அரசு சார்பில் கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டு செயல்படுகிறது. திருச்செங்கோடு புறவழிச்சாலை 50 சதவீதம் முடிக்கப்பட்டு மீதி பகுதிகளுக்கு ஒப்பந்ததாரர் பணிகளை தொடங்க இருக்கிறார். 9 கோடி ரூபாய் செலவில் வாரச்சந்தை மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 5 கோடி ரூபாய் செலவில் தினசரி சந்தை மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 17 வழித்தடங்களில் புதிதாக பஸ்கள் விடப்பட்டு இருக்கின்றன.

    இன்னும் பல்வேறு பணிகள் தொகுதி முழுவதும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இன்னும் பல்வேறு மக்களுடைய கோரிக்கைகளை சட்டமன்றத்திலே பேசி அவற்றை நிறைவேற்றுகின்ற முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றேன்.

    எதுவுமே தெரியாமல் திருச்செங்கோட்டிலே வந்து பொய்யான கருத்துக்களை பேசி இருப்பது நியாயமா? என்னுடைய செயல்பாடுகளை கேள்வி கேட்க ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமை இருக்கிறது. அதே சமயம் பதில் சொல்ல வேண்டிய கடமையும் எனக்கு இருக்கிறது.

    என்னுடைய சட்டமன்ற உரைகளைப் பற்றியும் சட்டமன்ற உறுப்பினராக என் செயல்பாடுகள் பற்றியும் அண்ணாமலை என்னோடு விவாதிக்க தயாரா? தேதியையும், நேரமும், இடமும் குறிப்பிடுங்கள் விவாதத்திற்கு நான் தயார்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • நாமக்கல்லில் இருந்து புறப்பட்டு திருச்செங்கோட்டிற்கு சென்று நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
    • ராசிபுரம் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் அண்ணாமலை பேச உள்ளார்.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டார்.

    இன்று (சனிக்கிழமை) நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் மதியம் 2 மணி அளவில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் சாலையில் உள்ள எல்.எம்.ஆர். தியேட்டர் அருகே நடைபயணத்தை தொடங்குகிறார்.

    பின்னர் சேலம் ரோடு கார்னர், நேதாஜி சிலை, பலபட்டறை மாரியம்மன் கோவில், சிங்கப்பூர் பிளாசா மற்றும் மணிக்கூண்டு வழியாக பரமத்தி சாலையில் தில்லைபுரம் வரை நடந்து செல்ல உள்ளார்.

    பின்னர் அங்கு மாலை 6 மணி அளவில் வாகனத்தில் நின்றவாறு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில துணை தலைவர்களான சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் கே.பி.ராமலிங்கம், நாமக்கல் மாவட்ட பார்வையாளர் வி.பி.துரைசாமி, ரத யாத்திரையின் மாநில பொறுப்பாளர் நரேந்திரன், கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில்நாதன், மாநில சார்பு அணி நிர்வாகிகள் டாக்டர் ஷியாம் சுந்தர், லோகேந்திரன், மாநில மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

    அதன் பிறகு நாமக்கல்லில் இருந்து புறப்பட்டு திருச்செங்கோட்டிற்கு சென்று நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். அதேபோல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் சேந்தமங்கலத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, பின்னர் மாலையில் ராசிபுரம் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் பேச உள்ளார். இதையொட்டி கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    • பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.
    • இரண்டு வாரங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தல்.

    தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்திற்கு அவர் என் மண் என் மக்கள் என பெயரிட்டுள்ளார். பலக்கட்டங்களாக நடைபயணம் மேற்கொண்டு வந்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் திடீர் டெல்லி பயணம் காரணமாக யாத்திரை அக்டோபர் 4-ம் தேதியில் இருந்து அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில், அக்டோபர் 6-ம் தேதி துவங்க இருந்த பாத யாத்திரை அக்டோபர் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பா.ஜ.க. தமிழ்நாடு அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் இரண்டு வாரங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறிய நிலையில் டெல்லி சென்று திரும்பிய தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்டோபர் 5-ம் தேதி பா.ஜ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டம் அக்டோபர் 3-ம் தேதி நடைபெற இருந்த நிலையில், அண்ணாமலையின் டெல்லி பயணம் காரணமாக அக்டோபர் 5-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • 2-ம் கட்ட பாத யாத்திரை அடுத்த மாதம் 2-ந்தேதி தேனியில் தொடங்குகிறது.
    • 3-ம் கட்ட பாத யாத்திரை அக்டோபர் மாதம் திருப்பூரில் தொடங்கி தஞ்சாவூரில் நிறைவடைகிறது.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது பாத யாத்திரையின் முதல்கட்டமாக ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு சென்றார்.

    இந்த யாத்திரையின் போது பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெறுவதற்காக புகார் பெட்டிகளும் கொண்டு செல்லப்பட்டன.

    அப்போது 1000-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் வந்துள்ளன. அந்த மனுக்களை ஆய்வு செய்யும் பணியில் 30 பேர் ஈடுபட்டு உள்ளார்கள்.

    இந்த குழுவினர் மனுவை பார்த்து சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டு விசாரித்து தேவைப்படும் கூடுதல் ஆவணங்களையும் கேட்டு பெற்று வருகிறார்கள்.

    உண்மை தன்மை இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படுகிறது. இந்த ஆய்வு முடிந்ததும் தகுதியான மனுக்கள் கட்சியின் சம்பந்தப்பட்ட பிரிவு அணிகள் மூலம் அரசின் துறைகளிடம் வழங்கப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    2-ம் கட்ட பாத யாத்திரை அடுத்த மாதம் 2-ந்தேதி தேனியில் தொடங்குகிறது. 3-ம் கட்ட பாத யாத்திரை அக்டோபர் மாதம் திருப்பூரில் தொடங்கி தஞ்சாவூரில் நிறைவடைகிறது.

    • பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.2 லட்சம் பேர் பலன் அடைந்து உள்ளார்கள்.
    • தி.மு.க. மத்திய அரசின் திட்டங்களை தங்கள் திட்டங்களாக காட்டி மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ள தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தான் பயணிக்கும் தொகுதிகளில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை சுட்டிக்காட்டியும், தி.மு.க., காங்கிரசை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செய்ய தவறியது பற்றியும் குறிப்பிட்டு வருகிறார்.

    அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்ட போது, திருநாவுக்கரசர் மீதும் அவரது மகனும் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் மீதும் குறை கூறினார். அவர் கூறியதாவது:-

    சிறு, குறு தொழில்கள் பலன் பெற ரூ.750 கோடி நிதி உதவி. அதன்மூலம் 31 ஆயிரத்து 965 சிறு தொழில் நிறுவனங்கள். 5 லட்சம் வேலைவாய்ப்புகள் என பிரதமர் கொண்டு வந்த நலத்திட்டங்கள் பல.

    புதுக்கோட்டை மாவட்டத்துக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினார்களா? திருச்சி எம்.பி. திருநாவுக்கரசரும், அவரது மகன் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ராமச்சந்திரனும் அவர்கள் குடும்பத்தை தவிர மக்களுக்கென்று எதுவும் செய்தார்களா?

    அறந்தாங்கியில் மோடியின் முகவரியாக செயல்படும் குறைந்த விலை மக்கள் மருந்தகங்கள் திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 820 மருந்தகங்களில் அறந்தாங்கியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரும் ஒரு கடை நடத்தி வருகிறார்.

    பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.2 லட்சம் பேர் பலன் அடைந்து உள்ளார்கள். அவர்களில் ஷகீலாபானுவும் ஒருவர். இலவச உணவு தானிய திட்டத்தில் பயன் அடைபவர்களில் கறம்பக்குடி பாக்கியலட்சுமியும் ஒருவர்.

    கடந்த 9 ஆண்டுகளில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகத்துக்கு ரூ.48 ஆயிரத்து 506 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    2.2 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ஸ்வானிதி திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் உதாரணத்துக்கு அஞ்சுகம். இவர்களெல்லாம் மோடியின் முகவரிகளாக இருக்கிறார்கள்.

    ஆனால் ஆட்சிக்கு வந்த தி.மு.க. மத்திய அரசின் திட்டங்களை தங்கள் திட்டங்களாக காட்டி மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி. வருகிற தேர்தலில் இது தோல்வியை தழுவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து திருநாவுக்கரசர் எம்.பி. கூறியதாவது:-

    அறந்தாங்கி தொகுதி இப்போது ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குள் உள்ளது. அது கூட தெரியாமல் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசி இருக்கிறார்.

    10 நிமிடம் அறந்தாங்கி தொகுதியில் நடந்து விட்டு சொகுசு வாகனத்தில் ஏறி சென்றிருக்கிறார். அதற்குள் தொகுதி முழுவதையும் பார்த்து தெரிந்து கொண்டாரா? அந்த தொகுதிக்குள் நிறைவேற்றப்பட்டுள்ள அடிப்படை தேவைகள், ரூ.20 கோடியில் நிறைவேற்றப்படும் குடிநீர் திட்டப்பணிகள், மாவட்ட மருத்துவமனை விரிவாக்கம் என்று எவ்வளவோ பணிகள் நடக்கின்றன. எம்.எல்.ஏ.விடம் கேட்டால் அவர் பட்டியலை தரப்போகிறார். ஆனால் அண்ணாமலைக்கு தெரிந்தது அவ்வளவுதான். பாவம்.

    ஒரு பஞ்சாயத்து தேர்தலில் கூட ஜெயிக்காத அண்ணாமலை எங்களை விமர்சிக்கிறார். ஒரு பகுதிக்கு செல்லும்போது ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக எதையாவது பேசி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×