search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election Commision"

    திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்காணல் ஜனவரி 4ம் தேதி நடைபெறும் என பொது செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். #ThiruvarurBypoll #DMK
    சென்னை:
     
    தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

    இந்நிலையில், திருவாரூர் தொகுதிக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் ஜனவரி 4-ம் தேதி நடைபெறும் என திமுக பொது செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனவரி 4-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெறும். இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ஜனவரி 2-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை தங்களது விண்ணப்பங்களை வழங்கலாம்.

    வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் 25 ஆயிரம் ரூபாய் என்றும், விண்ணப்ப படிவம் ஒன்றுக்கு ரூ. 1000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். #ThiruvarurBypoll #DMK
    திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. #ThiruvarurByElections #ElectionCommision
    சென்னை:

    முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவை தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலியாக இருந்து வருகிறது.

    இந்நிலையில், திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.



    இடைத்தேர்தலுக்கான மனுதாக்கல் ஜனவரி 3ம் தேதியும், மனுதாக்கல் செய்ய இறுதி நாள் ஜனவரி 10ம் தேதி என்றும்,  ஜனவரி 11 முதல் வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம் என்றும், வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14ம் தேதி இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கை ஜனவரி 31ம் தேதி அன்று நடைபெறும். இதையடுத்து திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது. #ThiruvarurByElections #ElectionCommision
    ராஜஸ்தானில் 72.67 சதவீதமும், தெலுங்கானாவில் 67 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #Rajasthan #Telangana #AssemblyElections #ElectionCommision
    புதுடெல்லி:

    தெலுங்கானாவில் முதல் மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. மொத்தம் 119 இடங்களை கொண்ட சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு  மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 13 தொகுதிகளில் மட்டும் ஓட்டுப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது. 

    தெலுங்கானா மாநிலத்தில் 67 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

    ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



    இதேபோல், சட்டசபை தேர்தல் நடைபெற்ற மற்றொரு மாநிலமான ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 200 இடங்கள் கொண்ட சட்டசபையில் ஒரே ஒரு இடத்தை தவிர 199 தொகுதிகளுக்கு இன்று  காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    மாலை 5 மணியுடன் நிறைவடைந்த ராஜஸ்தானில் 72.67 சதவீத  வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இங்கு பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது. 

    இதற்கிடையே ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் வரும் 11-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.  நாடாளுமன்ற கூட்டத்தொடரும் அன்றைய நாளில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. #Rajasthan #Telangana #AssemblyElections #ElectionCommision
    தெலுங்கானா மாநிலத்தில் இலவச சேலைகளை வழங்கக் கூடாது என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. #Telangana #EC #BathukammaFestival
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியை சேர்ந்த சந்திரசேகர் ராவ் ஆட்சி செய்து வந்தார். கடந்த மாதம் தனது ஆட்சியை கலைத்தார். இதையடுத்து, இந்த ஆண்டின் இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    மாநில ஆட்சி கலைக்கப்பட்டதால் அங்கு தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



    இதற்கிடையே, தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள பதுகம்மா திருவிழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதிலும் 90 லட்சம் சேலைகள் இலவசமாக வழங்கப்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி ராமாராவ் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், மாநில அரசின் இலவச சேலை விநியோகம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து, தெலுங்கானா மாநிலத்தில் இலவச சேலைகளை விநியோகம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #Telangana #EC #BathukammaFestival
    பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்களின் போது வேட்பாளர்களின் செலவுகளுக்காக தனி வங்கிக்கணக்கு தொடங்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் வேட்பாளர்கள் போட்டியிடும் போது அவர்கள் குறிப்பட தொகை மட்டுமே செலவு செய்ய வேண்டும் என விதிகள் உள்ளன. தேர்தல் முடிந்த பின்னர், வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்கை தாக்க வேண்டும். அலுவலர்களால் அந்த கணக்கு சரிபார்க்கப்படும்.

    இந்நிலையில், வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவுகளுக்கு என தனி வங்கிக்கணக்கு தொடங்க உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் இன்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட பின் இந்த வங்கிகணக்குகள் தொடங்கப்பட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    உ.பி.யின் கைரானா மக்களவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 54 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #KairanaBypoll #Electioncommision
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசத்தில் உள்ள கைரானா மக்களவை தொகுதி எம்.பியான பா.ஜ.க.வை சேர்ந்த ஹுகும் சிங் கடந்த பிப்ரவரியில் காலமானார். இதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தாரா-கோண்டியா மற்றும் பால்கர், நாகாலாந்தில் ஒரு தொகுதிக்கும் என மொத்தம் 4 மக்களவை தொகுதிகளுக்கும் மே 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இந்நிலையில், உ.பி.யின் கைரானா மக்களவை தொகுதியில் நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில் 54 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், உ.பி.யின் கைரானா தொகுதியில் 54 சதவீதம் வாக்குகள் பதிவானது. மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தாரா - கோண்டியா தொகுதியில் 42 சதவீதமும், பால்கர் தொகுதியில் 46 சதவீதம் வாக்குப்பதிவும் நடைபெற்றது.

    மேலும், நாகாலாந்தின் ஒரு தொகுதியில் 75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.



    நேற்று இடைத்தேர்தல் நடைபெற்ற மக்களவை தொகுதிகளின் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிவர வேலை செய்யவில்லை என எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தனர். 

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அதிக வெப்பத்தின் காரணமாகவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிவர வேலை செய்யவில்லை. மக்களவை தொகுதிகள் இடைத்தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 31-ம் தேதி தொடங்கி, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். #KairanaBypoll #Electioncommision
    உ.பி.யின் கைரானா தொகுதி உள்பட 4 மக்களவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. #KairanaBypoll #Electioncommision
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசத்தில் உள்ள கைரானா மக்களவை தொகுதி எம்.பியான பா.ஜ.க.வை சேர்ந்த ஹுகும் சிங் கடந்த பிப்ரவரியில் காலமானார். இதனால் அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.  

    இதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தாரா-கோண்டியா மற்றும் பால்கர், நாகாலாந்தில் ஒரு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே , உ.பி.யின் கைரானா தொகுதி உள்பட 4 மக்களவை தொகுதிகளுக்கு மே 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், உ.பி.யின் கைரானா, மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தாரா - கோண்டியா மற்றும் பால்கர், நாகாலாந்தில் ஒரு தொகுதி என மொத்தம் 4 மக்களவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பலத்த பாதுகாப்புடன் செய்யப்பட்டுள்ளது.

    இன்று தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் பணி மே 31-ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர். #KairanaBypoll #Electioncommision
    பாகிஸ்தான் நாட்டில் ஜூலை 25-ம் தேதி அன்று பொதுத் தேர்தலை நடத்தலாம் என அதிபர் மம்னூன் ஹுசைனுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. #ElectionCommissionofPakistan #generalpolls #MamnoonHussai
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் வரும் மே 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது. மேலும் காபந்து பிரதம மந்திரிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி, எதிர்க்கட்சி தலைவர் குர்ஷித் ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் உள்ள தேர்தல் ஆணையம் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தொடங்கி உள்ளது.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் ஜூலை 25-ம் தேதி அன்று பொதுத் தேர்தலை நடத்தலாம் என அதிபர் மம்னூன் ஹுசைனுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. #ElectionCommissionofPakistan #generalpolls #MamnoonHussain
    ×