search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disposal"

    • கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு பகுதிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சிவகங்கை பூங்கா அருகில் உள்ள டீக்கடை உள்பட 3 கடைகளின் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த செட், மேற்கூரை உள்ளிட்டவற்றை அகற்றக்கோரி சில வாரங்க–ளுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் சம்பந்தபட்ட கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.ஆனால் முறையாக ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் இன்று மதியம் மாநகராட்சி நகரமைப்ப அலுவலர் ராஜசேகரன், இளநிலை பொறியாளர்கள் கண்ணதாசன், ஆறுமுகம், துப்புரவு ஆய்வாளர் ராமசந்திரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர்.

    பின்னர் அந்த கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு பகுதிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. தொடர்ந்து இந்த பணி நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    • குப்பைகள் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் மூலம் அகற்றப்பட்டது.
    • தற்காலிக வடிகால் அமைத்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், வடக்குமாங்குடி ஊராட்சியில் உள்ள அரசு கட்டிடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன.

    தற்போது பெய்து வரும் பருவ மழையால் அரசு கட்டிடங்களில் மழைநீர் தேங்கி சேதமடைவதை தடுக்கும் வகையில் ஊராட்சி சார்பில் அரசு கட்டிடங்களில் சுத்தம் செய்யும் பணி நடை பெற்றது.

    ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி கட்டிடங்கள், நடுநிலைப்பள்ளி கட்டிடங்கள், ஊராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் மேல்தளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்க கட்டிடங்களின் மேல்தளத்தில் கிடந்த இலை, தழைகளையும், குப்பைகளையும் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் மூலம் அகற்றப்பட்டது.

    மேலும் சாலையிலும், தெருக்களிலும் ஆங்காங்கே தேங்கியிருந்த மழை நீரையும் தற்காலிக வடிகால் அமைத்து மழைநீரையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஏற்பாடுகளை ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் செயலாளர்கள் செய்து இருந்தனர்.

    • குளத்துக்கு செல்லும் பாதையில் சிலர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கட்டிருப்பதாக மாநகராட்சி கமிஷனருக்கு தகவல் கிடைத்தது.
    • ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மாட்டு தொழுவத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தச்சநல்லூர் போலீஸ் நிலையம் எதிரே தேனீர் குளம் உள்ளது. இந்த குளத்துக்கு செல்லும் பாதையில் சிலர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கட்டிருப்பதாக மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் கிடைத்தது.

    புகார்

    இது தொடர்பாக ஏற்கனவே அப்பகுதி மக்கள் அடிக்கடி புகார் அளித்து வந்தனர். இதை அடுத்து இன்று தச்சை மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மற்றும் உதவி பொறியாளர் லெனின் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் அங்கே சென்றனர்.

    அப்போது அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மாட்டு தொழுவத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். இதனையொட்டி அங்கு தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • பாலமேடு அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.
    • மலைப்பகுதியில் இருந்து வரும் நீர்நிலைகள், ஓடை வழியாக நேரடியாக நீர் செல்வதற்கு ஏதுவாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலையபட்டி ஊராட்சியில் நீதிமன்ற உத்தரவின்படி மஞ்சமலை ஆற்று ஓடைப்பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

    நீர்நிலைகள் செல்லும் ஓடைக்கரை பகுதியில் இருந்த விவசாய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், பிரே மா, ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி இதயசந்திரன், துணை தலைவர் புஷ்பலதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா மற்றும் வருவாய் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறையினர் முன்னிலையில் நில அளவீடு செய்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

    மலைப்பகுதியில் இருந்து வரும் நீர்நிலைகள், ஆக்கிரமிப்புகளின்றி ஓடை வழியாக நேரடியாக நீர் செல்வதற்கு ஏதுவாக அங்கு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

    மேலும் ஊராட்சியில் உள்ள பல இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் படிப்படியாக அகற்றுவதற்கான நடவடிக் கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மஞ்சமலை ஓடை பகுதி யில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற பட்டு வருகிறது.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சியில் ஆகாயத்தாமரைகள் அகற்றினார்கள்.
    • ஜே.சி.பி. எந்திரம் மற்றும் ஆட்களை கொண்டு சுத்தம் செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள வாவிக்கிணறு மற்றும் மழைநீர் சேகரிப்பு குளம் ஆகியவற்றில் இருந்த ஏராளமான ஆகாயத்தாமரைகள் மற்றும் முட்புதர்கள் ஆகியவற்றை நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் ஜே.சி.பி. எந்திரம் மற்றும் ஆட்களை கொண்டு சுத்தம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.இப்பணியினை நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பொன்.விஜய்ராகுல் தொடங்கி வைத்தார்

    இதில் துணைத் தலைவர் விஜயசாந்தி, ஊராட்சி செயலாளர் ராஜா, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கவிதா ராஜா மற்றும் ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டம் சங்க கிரி ஊராட்சி ஒன்றியம் ஐவேலி ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது.
    • அள்ளப்பட்டு மீண்டும் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்க கிரி ஊராட்சி ஒன்றியம் ஐவேலி ஊராட்சியில் 'நம்ம ஊரு சூப்பரு' என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    இதையொட்டி ஊரில் பொது இடத்தில் குவிக்கப்பட்ட குப்பைகள் அள்ளப்பட்டு மீண்டும் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு உதவி திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு) எல். நக்கீரன் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர். ஒன்றியக்குழு உறுப்பினர். வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ). வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களும் ஊராட்சி செயலாளர் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள வாய்க்காலில் சிலர் வலைகளை கட்டி மீன்பிடித்து வருகின்றனர்.
    • தண்ணீர் தடைபட்டு தேங்கி செல்வதால் குறுவை வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம்தாலுக்கா தலைஞாயிறு மல்லியனா ருமற்றும் பெரிய வாய்க்கால் பகுதியில் குறுவைசாகுபடி க்காக தண்ணீர் திறக்கப்பட்டு ள்ளது இந்த வாய்க்காலில் சிலர் வலைகளை கட்டி மீன்பிடித்து வருகின்றனர் இதனால் தண்ணீர் தடை பட்டுதேங்கிசெல்வ தால் குறுவை வயல்க ளுக்கு தண்ணீர்பாய்ச்சு வதில் சிரமம் ஏற்பட்டு ள்ளது இக்குறித்துபொது ப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் ஆற்றின் குறுக்கே உள்ள மீன்பிடி வலைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர் இதனை ஏற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாசன உதவியாளர்கள் மற்றும் பொதுபணித்துறை பணியா ளர்கள் மல்லியனாறு மற்றும் பெரியவாய்காலில் தண்ணீர் செல்ல தடையாக ஜந்து இடங்களில் வைக்கபட்டிருந்த மீன்பிடி வலைகளை அகற்றினர் மீன்பிடி வலைகளில் அகற்றியதால் தண்ணீர் தற்போது குறுவை சாகுபடிக்கு வேகமாக செல்கின்றன இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் வனச்சோதனை சாவடி முதல் கடம்பூர் வரை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
    • பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீச வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் வனச்சரக மலைப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், சிறுத்தை, காட்டுப்பன்றி, உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    கடம்பூர் மலை குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் இரு சக்கர வாகனங்கள் பஸ் உள்பட பல்வேறு வாகனங்களில் செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை பயன்படுத்திய பிறகு வனப்பகுதிகளில் வீசி செல்கின்றனர்.

    இதை வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகள் சாப்பிட்டு செரிக்காமல் உடல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் நிகழ்கிறது, இதனை கருத்தில் கொண்டு வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில், டி.என்.பாளையம் வனச்சரகம் சார்பில் பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் தமிழ் நாடு சிறப்பு இலக்குப் படை இணைந்து டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் வனச்சோதனை சாவடி முதல் கடம்பூர் வரை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

    டி.என்.பாளையம் வனச்சரக அலுவலர் கணேஷ் பாண்டியன், நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார், வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கே.என்.பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும், வனச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீச வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    ×