என் மலர்
உள்ளூர் செய்திகள்

உதவி திட்ட அதிகாரி நக்கீரன் தலைமையில் குப்பைகள் அகற்றும் பணி நடந்தபோது எடுத்தபடம்.
நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் குப்பைகள் அகற்றும் பணி
- சேலம் மாவட்டம் சங்க கிரி ஊராட்சி ஒன்றியம் ஐவேலி ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது.
- அள்ளப்பட்டு மீண்டும் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டம் சங்க கிரி ஊராட்சி ஒன்றியம் ஐவேலி ஊராட்சியில் 'நம்ம ஊரு சூப்பரு' என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இதையொட்டி ஊரில் பொது இடத்தில் குவிக்கப்பட்ட குப்பைகள் அள்ளப்பட்டு மீண்டும் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு உதவி திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு) எல். நக்கீரன் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர். ஒன்றியக்குழு உறுப்பினர். வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ). வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களும் ஊராட்சி செயலாளர் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






