search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனப்பகுதியில்"

    • புதுக்காடு வன பகுதியில் ஆண் ஒருவர் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.
    • அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் கிடந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வன சரகத்துக்குட் பட்ட எண்ணமங்கலம், கோவிலூர், புதுக்காடு வன பகுதியில் ஆண் ஒருவர் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

    அவரது பிணம் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் கிடந்தது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இது குறித்து வனத்துறைக்கும் ,பர்கூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறை யினர், சிறப்பு போலீஸ் சப்- இனஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்ற னர்.

    அவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த ஆண் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் இறந்து 4 அல்லது 5 நாட்கள் இருக்கும். இதனால் அவரது உடல் அழுகிய நிலையில் காண ப்பட்டது.

    மேலும் அவர் யார் மற்று ம் எந்த பகுதியை சேர்ந்தவர் அவர் எப்படி அந்த பகுதிக்கு வந்தார். அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வனப்பகுதியில் இரவு நேரத்தில் யானை மற்றும் வன விலங்குகள் நட மாட்டம் அதிகம் இருக்கும்.
    • இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கொம்பு தூக்கி அம்மன் கோவில் வன ப்பகுதியில் நேற்று இரவு அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி பிணம் கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வனத்துறை அதிகாரி விஸ்வநாதன் பர்கூர் போலீஸ் நிலை யத்திற்கு தகவல் தெரி வித்தார். வனப்பகுதியில் இரவு நேரத்தில் யானை மற்றும் வன விலங்குகள் நட மாட்டம் அதிகம் இருக்கும்.

    இதனால் இன்று காலை சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்ேபாது வனப்பகுதி யில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணம் அழுகிய நிலையில் இருந்தது. இதை யடுத்து அவரது உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என தெரிய வில்லை.

    மேலும் இறந்த மூதாட்டி விறகு எடுத்து வருவதற்காக வனப்பகுதிகளுக்குள் சென்ற போது வன விலங்குகள் ஏதேனும் தாக்கி உயிரிழந்து விட்டாரா? அல்லது எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் தீப்பிடித்து எரிய தொடங்கியது .
    • முள் கம்பிகளை பொருத்தும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கோடை வெயில் காரணமாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து கிடக்கி ன்றன. வறட்சியால் வனப்பகுதியில் அவ்வ போது தீ விபத்துகள் ஏற்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மதியம் தாளவாடி வனப்பகு தியில் உள்ள முதியனூர் என்ற இடத்தில் சாலையோர வனப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் மின் கசிவு காரணமாக வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது . தீ எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தாளவாடி வனத்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்நிலையில் வனப்பகுதியில் உள்ள மின் கம்பங்களை காட்டு யானைகள் சேதப்படுத்து வதால் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது.

    யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியில் உள்ள மின்கம்பங்களை சேதப்படுத்தாமல் இருப்பதற்காக மின்கம்பிகளில் முள் கம்பிகளை பொருத்தும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • காட்டுத்தீயை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீயணைப்பு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • முன் எச்சரிக்கை குறித்து கடந்த சில வாரங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் வனம் மற்றும் மலைப்பகு திகளான சத்தியமங்கலம், பண்ணாரி, தாளவாடி, ஆசனூர், அந்தியூர், பர்கூர், சென்னிமலை போன்ற பகுதிகளில் மரங்கள், செடி, கொடிகளில் இலைகள் காய்ந்து உதிர்ந்து வருகிறது.

    இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் வனத்துறையினருக்கும், மலைவாழ் மக்களுக்கும், தன்னார்வலர்களுக்கம் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடவ டிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் காட்டுத்தீயை தடுக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் வனப்பபகுதியை சேர்ந்த மக்களுக்கும், வனத்துறை ஊழியர்களுக்கும் காட்டுத்தீயை தவிர்க்க எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை குறித்து கடந்த சில வாரங்களாக விழி ப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அதேபோல் பிற வனப்பகுதி மற்றும் மலைப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டால் கட்டுப்படுத்த அதே பகுதியை சேர்ந்த தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு தயார் செய்து வைத்து ள்ளோம்.

    வனப்பகுதிகளில் மரம், செடி, கொடிகளில் இருந்து காய்ந்த இலைகள் உதிர்ந்து சருகாக வனத்தில் காணப்ப டும். அதிக வெயில், காற்றினால் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பிடிக்கும்.

    அப்போது காட்டுத்தீயாக மாறும். இது தவிர மர்மநபர்கள் வனத்திற்குள்ளோ அல்லது அதன் அருகிலே சென்று சிகரெட் அல்லது வேறு எதற்காவது தீ பற்ற வைத்து அணைக்காமல் வந்து விட்டால் அதன் மூலம் தீ பரவி காட்டுத்தீயாக மாறு கிறது.

    இதனை தடுக்கவும், வனப்பகுதியில் உள்ள காய்ந்த சருகுகளை அவ்வப்போது அப்புறப்படுத்த நட வடிக்கை எடுத்துள்ளோம்.

    வனத்தை யொட்டி சாலைகளில் இருபுறமும் சிறு பள்ளம் வெட்டி (பயர் லைன்) தீத்தடுப்பு நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வனத்துறையுடன் இணைந்து காட்டுத்தீயை தடுக்க போதிய முன்னெ ச்சரிக்கை பாதுகாப்பு நட வடிக்கை எடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சூரியன் மலைப்பகுதியில் வனத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் காடுகள் அமைந்துள்ளன.
    • கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் பகல் நேரங்களில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மரங்கள், செடிகள் காய்ந்து இருந்ததால், நேற்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கின.

    எடப்பாடி:

    எடப்பாடியை அடுத்த தங்கையூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோணமோரி அரசு கலைக் கல்லூரியின் எதிர்புறம் சூரியன் மலைப்பகுதியில் வனத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் காடுகள் அமைந்துள்ளன. கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் பகல் நேரங்களில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மரங்கள், செடிகள் காய்ந்து இருந்ததால், நேற்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கின. அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்த நிலையில் தீ மேலும் பல பகுதிகளுக்கு பரவியது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து எடப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாக போராடி தீயிணை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டுள்ள எடப்பாடி வட்டாட்சியர் லெனின், காட்டுத் தீ மேலும் வேறு பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் முன்னேற்பாடு பாதுகாப்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

    அப்பகுதியில் இருந்த சிறு செடி, கொடிகள் அகற்றப்பட்டு காற்றின் வேகத்தால் தீ வனப்பகுதியில் உள்ள மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.

    அப்பகுதியில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் காட்டுத் தீ வேறு எங்கேனும் பரவி உள்ளதா என தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கொங்கணாபுரம் போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த தீ விபத்து குறித்து எடப்பாடி வட்டாட்சியர் லெனின் கூறியதாவது:-

    தற்போது கோடை காலம் ஆரம்பமாகும் நிலையில், எடப்பாடியின் தெற்கு எல்லைப் புரத்தில் உள்ள தேவண்ணகவுண்டனூர் மற்றும் சூரியன் மலையை ஒட்டிய வனப்பகுதியில் மரம், செடி, கொடிகள் அதிக அளவில் காய்ந்து தீப்பற்றக்கூடிய நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய எந்தப் பொருளையும் வனத்தை ஒட்டிய பகுதிக்குள் எடுத்துச் செல்லவோ வைத்திருக்கவோ அனுமதி இல்லை. வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் வகையில் யாரேனும் அஜாக்கிரதையாக செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனகோட்ட துணை இயக்குநர் தேவேந்திர குமார்மீனா மற்றும் வனச்சரகர் சதீஷ் ஆகியோர் பசு மாடு இறந்த 3 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கினார்.
    • கால்நடைகளை புலி நடமாட்டம் உள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என அறிவுருத்தினர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு,காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் சேசன் நகர் பகுதியைச் சேர்ந்த நாகமணி (40 ) என்பவர் பசு மாட்டை புலி அடித்து கொன்றது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பீதியடைந்தனர்.

    இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனகோட்ட துணை இயக்குநர் தேவேந்திர குமார்மீனா மற்றும் வனச்சரகர் சதீஷ் ஆகியோர் பசு மாடு இறந்த 3 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கினார்.

    பின்னர் கர்நாடக வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் கர்நாடக வனத்துறையுடன் இணைந்து புலி விவசாய தோட்டித்தில் புகாதவாறு கண்காணித்து புலியை அடந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்கபடும் எனவும் கால்நடைகளை புலி நடமாட்டம் உள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என அறிவுருத்தினர்.

    • டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் வனச்சோதனை சாவடி முதல் கடம்பூர் வரை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
    • பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீச வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் வனச்சரக மலைப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், சிறுத்தை, காட்டுப்பன்றி, உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    கடம்பூர் மலை குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் இரு சக்கர வாகனங்கள் பஸ் உள்பட பல்வேறு வாகனங்களில் செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை பயன்படுத்திய பிறகு வனப்பகுதிகளில் வீசி செல்கின்றனர்.

    இதை வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகள் சாப்பிட்டு செரிக்காமல் உடல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் நிகழ்கிறது, இதனை கருத்தில் கொண்டு வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில், டி.என்.பாளையம் வனச்சரகம் சார்பில் பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் தமிழ் நாடு சிறப்பு இலக்குப் படை இணைந்து டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் வனச்சோதனை சாவடி முதல் கடம்பூர் வரை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

    டி.என்.பாளையம் வனச்சரக அலுவலர் கணேஷ் பாண்டியன், நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார், வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கே.என்.பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும், வனச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீச வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    • ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குனர் தேவேந்திர குமார் முன்னிலையில் மயக்க ஊசி செலுத்தப்பட்டு வேறு கூண்டுக்கு மாற்றப்பட்டது. அப்போது அந்த சிறுத்தை எதிர்பாராத விதமாக தப்பி ஓடியது.
    • சிறுத்தையை வேனில் ஏற்றி பவானிசாகர் வன சரகத்துக்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியான தெங்குமரஹடா மங்கள பட்டி கொண்டு சென்றனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஆசனூர் மற்றும் சுற்று வட்டார வனப்பகுதிகளில் யானை, கரடி, புலி, சிறுத்தை என ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

    இந்த வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் புலி, சிறுத்தைகள் விவசாய தோட்டத்தில் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டை யாடி வருகிறது.

    மேலும் சிறுத்தைகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராங்களில் புகுந்து கால்நடைகளை அடித்து கொன்று விட்டு அருகே உள்ள கல்கு வாரியில் பதுங்கி கொள்வது தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதையடுத்து தாளவாடி அடுத்த ஓசூர் கிராமத்தின் அருகே உள்ள கல்குவாரில் பதுங்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறை கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூண்டு வைத்தனர். கூண்டில் இறைச்சியை கட்டி வைத்து வந்தனர். ஆனால் சிறுத்தை சிக்காமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் போக்கு காட்டி வந்த அந்த சிறுத்தை கூண்டில் சிக்கிக் கொண்டது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குனர் தேவேந்திர குமார் முன்னிலையில் மயக்க ஊசி செலுத்தப்பட்டு வேறு கூண்டுக்கு மாற்றப்பட்டது. அப்போது அந்த சிறுத்தை எதிர்பாராத விதமாக தப்பி ஓடியது.

    சிறுத்தை ஓடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்வது அறியாமல் தலைதெறிக்க ஓடினார்கள்.

    தொடர்ந்து வனத்துறையினர் தப்பிய சிறுத்தையை அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் தேடினர். அப்போது கல்குவாரி கல்லுக்கு அடியில் சிறுத்தை படுத்து கிடந்தது தெரிய வந்தது.

    பின்னர் மயக்க ஊசி செலுத்தி அந்த சிறுத்தையை பிடித்தனர். பின்னர் சிறுத்தையை சாக்கு பையில் மூட்டைகட்டி மீண்டும் கூண்டில் அடைத்தனர்.

    இதையடுத்து நேற்று இரவு சிறுத்தையை வேனில் ஏற்றி பவானிசாகர் வன சரகத்துக்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியான தெங்குமரஹடா மங்கள பட்டி கொண்டு சென்றனர். அங்கு கூண்டு திறந்து விடப்பட்டது.

    இதையடுத்து அந்த சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

    ×