கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை வனப்பகுதியில் விரட்டும் பணி தீவிரம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனகோட்ட துணை இயக்குநர் தேவேந்திர குமார்மீனா மற்றும் வனச்சரகர் சதீஷ் ஆகியோர் பசு மாடு இறந்த 3 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கினார்.கால்நடைகளை புலி நடமாட்டம் உள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என அறிவுருத்தினர்.
கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை வனப்பகுதியில் விரட்டும் பணி தீவிரம்
Published on

தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு,காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் சேசன் நகர் பகுதியைச் சேர்ந்த நாகமணி (40 ) என்பவர் பசு மாட்டை புலி அடித்து கொன்றது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பீதியடைந்தனர்.

இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனகோட்ட துணை இயக்குநர் தேவேந்திர குமார்மீனா மற்றும் வனச்சரகர் சதீஷ் ஆகியோர் பசு மாடு இறந்த 3 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கினார்.

பின்னர் கர்நாடக வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் கர்நாடக வனத்துறையுடன் இணைந்து புலி விவசாய தோட்டித்தில் புகாதவாறு கண்காணித்து புலியை அடந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்கபடும் எனவும் கால்நடைகளை புலி நடமாட்டம் உள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என அறிவுருத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com