என் மலர்
நீங்கள் தேடியது "hanged in the"
- புதுக்காடு வன பகுதியில் ஆண் ஒருவர் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.
- அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் கிடந்தது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வன சரகத்துக்குட் பட்ட எண்ணமங்கலம், கோவிலூர், புதுக்காடு வன பகுதியில் ஆண் ஒருவர் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.
அவரது பிணம் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் கிடந்தது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இது குறித்து வனத்துறைக்கும் ,பர்கூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறை யினர், சிறப்பு போலீஸ் சப்- இனஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்ற னர்.
அவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த ஆண் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் இறந்து 4 அல்லது 5 நாட்கள் இருக்கும். இதனால் அவரது உடல் அழுகிய நிலையில் காண ப்பட்டது.
மேலும் அவர் யார் மற்று ம் எந்த பகுதியை சேர்ந்தவர் அவர் எப்படி அந்த பகுதிக்கு வந்தார். அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.