search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கம்பி அறுந்து விழுந்து வனப்பகுதியில் தீ விபத்து
    X

    மின் கம்பி அறுந்து விழுந்து வனப்பகுதியில் தீ விபத்து

    • வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் தீப்பிடித்து எரிய தொடங்கியது .
    • முள் கம்பிகளை பொருத்தும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கோடை வெயில் காரணமாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து கிடக்கி ன்றன. வறட்சியால் வனப்பகுதியில் அவ்வ போது தீ விபத்துகள் ஏற்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மதியம் தாளவாடி வனப்பகு தியில் உள்ள முதியனூர் என்ற இடத்தில் சாலையோர வனப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் மின் கசிவு காரணமாக வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது . தீ எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தாளவாடி வனத்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்நிலையில் வனப்பகுதியில் உள்ள மின் கம்பங்களை காட்டு யானைகள் சேதப்படுத்து வதால் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது.

    யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியில் உள்ள மின்கம்பங்களை சேதப்படுத்தாமல் இருப்பதற்காக மின்கம்பிகளில் முள் கம்பிகளை பொருத்தும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×