வனப்பகுதியில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த மூதாட்டி

வனப்பகுதியில் இரவு நேரத்தில் யானை மற்றும் வன விலங்குகள் நட மாட்டம் அதிகம் இருக்கும். இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
வனப்பகுதியில் அழுகிய நிலையில்  பிணமாக கிடந்த மூதாட்டி
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கொம்பு தூக்கி அம்மன் கோவில் வன ப்பகுதியில் நேற்று இரவு அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி பிணம் கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனத்துறை அதிகாரி விஸ்வநாதன் பர்கூர் போலீஸ் நிலை யத்திற்கு தகவல் தெரி வித்தார். வனப்பகுதியில் இரவு நேரத்தில் யானை மற்றும் வன விலங்குகள் நட மாட்டம் அதிகம் இருக்கும்.

இதனால் இன்று காலை சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

அப்ேபாது வனப்பகுதி யில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணம் அழுகிய நிலையில் இருந்தது. இதை யடுத்து அவரது உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என தெரிய வில்லை.

மேலும் இறந்த மூதாட்டி விறகு எடுத்து வருவதற்காக வனப்பகுதிகளுக்குள் சென்ற போது வன விலங்குகள் ஏதேனும் தாக்கி உயிரிழந்து விட்டாரா? அல்லது எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com