search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consecration"

    • சுவாமி விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யும் விழா நடந்தது,
    • ஆராதனை வழிபாடு செய்து சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப ட்டது.

    சென்னிமலை, 

    சென்னிமலை அடுத்து ள்ள முருங்கத்தொ ழுவில் மிக பழமையான பிரம்மன் பூஜித்த தலமாக அமைந்து ள்ள வடிவுள்ள மங்கை உடனமர் பிரம்மலிங்கே ஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு பக்தர்களால் காணி க்கையாக அளிக்கப்பட்ட நடராஜர், சிவகாமசுந்தரி மற்றும் ரிஷப வாகனத்துடன் நின்ற மேனியில் பிரதோஷ நாயனார் (சந்திரசேகர மூர்த்தி) ஆகிய சுவாமி விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யும் விழா நடந்தது,

    இதில் காலையில் கோவில் பரம்பரை அர்ச்சகர் சிவகாம திலகம் அமிர்லிங்க சிவச்சாரியார் தலைமையில் விநாயகர் வழிபாடு மற்றும் சிறப்பு யாக பூஜை மற்றும் புதிய சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீப ஆராதனை வழிபாடு செய்து சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த விழாவில் 20-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் வசித்த பஞ்ச வாத்தியம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ராமலிங்க பிரதிஷ்டை விழாவில் விபீஷ்ணருக்கு பட்டாபிஷேகம் நடந்தது.
    • சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராம நாதசாமி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 2-ம் நாளான இன்று தனுஷ்கோடி செல்லும் சாலையில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவிலில் விபீஷ்ணருக்கு பட்டாபிஷேகம் நடந்தது.

    இதையொட்டி இன்று அதிகாலையில் ராமநாத சுவாமி கோவிலில் சுவாமி சன்னதி மற்றும் பர்வத வர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை கள், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.அதன் பின்னர் விபீஷ்ணர் மற்றும் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மன் ஆகியோர் வாகனத்தில் புறப்பாடாகி 4 ரத வீதிகள் வழியாக நகர் வலம் வந்தனர்.

    பின்னர் ராமர்தீர்த்தம் பகுதியில் உள்ள ராமர் கோவிலை சென்ற டைந்தனர்.அங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் ராமர் சுவாமியை அழைத்து கொண்டு தனுஷ்கோடி சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவிலை சென்றடைந்தது. அங்கு பகல் 1 மணிக்கு மேல் விபீஷ்ணருக்கு பட்டா பிஷேகம் நடந்தது.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக சுவாமிகள் சென்றதையடுத்து ராமநாத சுவாமி கோவிலில் இன்று காலை நடைகள் சாத்தப்பட்டது. விபீஷ்ணர் பட்டாபிஷேகம் முடிந்தவுடன் அங்கிருந்து சுவாமி புறப்படாகி மாலையில் கோவிலுக்கு வந்தடைந்தவுடன் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

    • ராமலிங்க பிரதிஷ்டை விழா வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.
    • நான்கு ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது. இந்த விழா 3 நாட்கள் நடைபெறும்.

    27-ந் தேதி திட்டக்குடி சாலை சந்திப்பு அருகில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோவில் பகுதியில் ராமனுக்கு முக்தி அளித்த நிகழ்ச்சி நடைபெறும். 28-ந் தேதி தனுஷ்கோடி செல்லும் சாலையில் அமைந்துள்ள கோதண்ட ராமர் கோவிலில் விபிச னருக்கு முடி சூட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

    29-ந் தேதி ராமநாதசுவாமி கோவிலில் ராமர் புறப்பாடாகி வீதி உலா வந்து ராமநாதசாமி கோவிலில் ஆஞ்சநேயர் வேடமணிந்து ஆக்ரோ சத்துடன் ராமநாதன் சன்னதியை சுற்றி வலம் வந்து ராமநாதசுவாமியை வணங்கி காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பின்னர் மூலவர் சன்னதி யில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை வழிபாடுகள் நடைபெறும். இரவு 8 மணிக்கு ராமர் மற்றும் பஞ்ச மூர்த்திகளுடன் ராமநாத சுவாமி கோவிலில் இருந்து புறப்பாடாகி நான்கு ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    • சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவிலில் பட்டாபிஷேகம் நடந்தது.
    • தமிழாசிரியர் ராமகிருஷ்ணன் சொற்பொழிவாற்றினார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவில் தீர்த்த வாரி திருவிழா நடந்தது. இதையொட்டி காலையில் அக்னி கரகம் கோவிலாளர் வீட்டுக்கு சென்றது. இதைத் தொடர்ந்து மஞ்சள் நீராடுதல் நடந்தது.

    மாலையில் திருவிழா கொடி இறக்கம் நடைபெற்றது. அம்மன் வைகை ஆற்றுக்குச் சென்று தீர்த்தமாடி கோவில் வளாகத்தில் பூ அலங்காரத்துடன் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடந்தது.

    அதிகாலை ரிஷப வாகனத்தில் அம்மன் பவனி வந்தது. நேற்று மாலை பட்டாபிஷேகம் நடந்தது.

    இதில் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ராம கிருஷ்ணன் பட்டாபிஷே சொற்பொழிவாற்றினார்.

    • வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருக்கு வளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடைவீடான சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில், மாசி மாத கிருத்திகையை யொட்டி முருகப்பெருமானுக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின், வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

    • இங்கு தான் ராகவேந்திர சுவாமிகள் சன்னியாசம் பெற்றார்.
    • புகழ்பெற்ற ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்தில் பட்டாபிஷேகம் மகோற்சவம் விழாவை முன்னிட்டு 108கலச பூஜைகள் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வட வாற்றங்கரை ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனம் மிகவும் பழைமையானது. இங்கு தான் ராகவேந்திர சுவாமிகள் சன்னியாசம் பெற்றார். மூல பிருந்தாவனம் செல்ல முடியாத பக்தர்கள் இந்த பிருந்தாவனத்தில் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இத்தகைய புகழ்பெற்ற ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்தில் பட்டாபிஷேகம் மகோற்சவம் விழாவை முன்னிட்டு 108கலச பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் பட்டாபிஷேகம் மகோற்சவம் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்கள் ஆலய பிரதிஷ்டை பண்டிகை 6 நாட்கள் நடைபெற்றது
    • பார்வை இழந்தோர் பாடசாலை மாணவ, மாணவிகளின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது

    நாசரேத்:

    நாசரேத் அருகிலுள்ள வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்கள் ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன பண்டிகை விழா 6 நாட்கள் நடைபெற்றது.

    முதல் நாள் இரவு ஊரை சுற்றி ஆயத்த ஜெப பவனி நடைபெற்றது. 2-வது நாள் மாலையில் கன்வென்ஷன் கூட்டத்தில் ராஜன் அகஸ்டின் செய்தி கொடுத்தார். 3, 4-வது நாள் இரவு கூட்டங்களில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியர் எட்வின் சாம்ராஜ் சிறப்பு செய்தி கொடுத்தார். 5-வது நாள் மாலை பண்டிகை ஆயத்த ஆராதனை மற்றும் ஞானஸ்தான ஆராதனை மூக்குபேறி சேகரத்தலைவர் டேனியல்ஞான பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஜெபராஜ் தேவசெய்தி கொடுத்தார். இரவு 9 மணிக்கு பார்வை இழந்தோர் பாடசாலை மாணவ, மாணவிகளின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    6-வது நாள் பிரதிஷ்டைப் பண்டிகை ஆராதனையும் பரிசுத்த நற்கருணை, ஆராதனையும் மூக்குப்பேறி சேகர தலைவர் டேனியல் ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரைன்ட்நகர் சேகரத் தலைவரும், ஜி.எம்.எஸ். பொதுச் காரியதசியுமான டேனியல் எட்வின் சிறப்பு செய்தி கொடுத்தார். மாலை 3 மணிக்கு அசனவிருந்து நடைபெற்றது. ஏற்பாடுகளை சேகரத் தலைவர் டேனியல் ஞானப்பிரகாசம் தலைமையில் சபை ஊழியர் ஜாண் வில்சன் முன்னிலையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • திருவண்ணாமலை உள்பட பல கோவில்களில் யாக வேள்வி, பூஜை.
    • கும்பகோணம் அருகே பல சிவ ஸ்தலங்களில் யாகபூஜை நடத்தி வழிபாடு.

    சீர்காழி:

    ஜப்பானில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழ் ஆர்வலர் கோபால் பிள்ளை சுப்ரமணியன் தலைமையில் ஜப்பானைச் சேர்ந்த குருஜி பாலகும்ப குருமுனி எனும் தக்காயூகி உள்ளிட்ட 15 பேர் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு உலக அமைதிக்காக தமிழகத்தில் திருவண்ணாமலை உள்பட பல கோவில்களில் யாக வேள்வி, பூஜைகள் செய்து வருகின்றனர்.

    நாடி ஜோதிடர் அடையார் கல்யாணசுந்தரம் வழிகாட்டலின் மூலம் கும்பகோணம் அருகே பல சிவ ஸ்தலங்களில் யாக பூஜை நடத்தி வருகிறார்கள்.

    அதன் ஒரு பகுதியாக சீர்காழி சட்டைநாதர் கோவிலில் ஜப்பான் நாட்டினர் சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக பிரம்மபுரீஸ்வரர் சுவாமி, திருநிலைநாயகி அம்மன், சட்டநாதர் சுவாமி, தோணியப்பர், திருஞானசம்பந்தர் சந்நிதிகளில் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    • வடரெங்கம் ரெங்கநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.
    • இக்கோயிலை 2-வது முறையாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் பழமை வாய்ந்த வடரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.

    இந்த கோயில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டு வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது ஆகும்.

    இந்த கோயில் பஞ்சரங்கத்தில் ஒரு ரங்கமாக விளங்கி வருகிறது. கடந்த 1924ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கோயில் முழுவதும் மூழ்கியது

    இதனையடுத்து அந்தப் பகுதி மக்கள் வடரங்கம் பகுதியிலேயே புதிய கோயிலை கட்டி அதில் வடரங்கநாதரை வைத்து தரிசனம் செய்து வந்தனர்.

    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் தற்போது கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு இருகரைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    இதனால் கரையோரம் அமைந்துள்ள பழமை வாய்ந்த வடரங்கம் ரெங்கநாத பெருமாள் கோயிலை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இதுவரை 5 முறை ‌‌‌‌ தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் இக்கோயிலை 2வது முறையாக தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    • ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
    • நல்ல மழைபொழிந்து விவசாயம் செழிக்க சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்யப்பட்டது.

    திருவையாறு:

    திருவையாறு பாவாசாமி அக்ரஹாரத்தில் சத்குரு தியாகராஜர் சுவாமிகளால் வழிபாடு செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலில் நேற்று புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

    ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. உற்சவருக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டது. மேலும் 'பக்தர்களின் குடும்ப நலன்கள், தேச நலன், நல்ல மழைபொழிந்து விவசாயம் செழிக்கவும், உலகநாடுகளிடையே ஒற்றுமை, அமைதி நிலவவும் வேண்டி சங்கல்பம் செய்து சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டது.

    இவ் வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வணங்கினர். ஏற்பாடுகளை திருவையாறு பாவாசாமி அக்ரஹாரம் ஸ்ரீஆஞ்சநேயர் கோவில் பரம்பரை அறங்காவலர் குருமூர்த்தி மற்றும் பக்தர்கள் செய்திருந்தார்கள்.

    • பல்வேறு கோவில்களில் 286 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டன.
    • குதிரை விநாயகர், எலி விநாயகர், வீர விநாயகர் என பல்வேறு வடிவங்களில் 3 முதல் 7 அடி வரை உள்ள பலவண்ண நிறத்தில் பக்தர்களை கவரும் வகையில் இருந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் 286 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர்.

    மயிலாடுதுறையில் 41 இடங்களில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி துலாக்கட்டத்தில் கரைக்கப்பட்டன.

    விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி மயிலாடுதுறை மாவ ட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுக்காவில் உள்ள பல்வேறு கோயில்களில் 286 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபா ட்டிற்காக வைக்கப்பட்டன.

    மயிலாடுதுறையில் செம்மங்குளம் முனீஸ்வரர் ஆலயத்தில் எழுச்சி விநாயகர், மாயூரநாதர் கீழவீதி;

    பரிவார விநாயகர் மற்றும் காமதேனு விநாயகர், குதிரை விநாயகர், எலி விநாயகர், வீர விநாயகர் என பல்வேறு வடிவங்களில் 3 அடி முதல் 7 அடிவரை உள்ள பலவண்ண நிறத்தில் பக்தர்களை கவரும் வகையில்;

    விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

    இந்து முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் சரன்ராஜ் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கரைக்க ப்பட்டு வருகின்றன.

    மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் 3-ஆம் நாளான நேற்று ஊர்வமாக முக்கிய நகர சாலை வழியாக துலா கட்டம் வந்தடைந்தது.

    இதில் சிறப்பு அழைப்பாளர் பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம், இந்து முன்னணி பொதுச் செயலாளர் சுவாமிநாதன், முத்துக்குமார், பாஜக ஒருங்கிணைப்பாளர் நாஞ்சில் பாலு, நகர தலைவர் வினோத் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது
    • மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாதர் கோவில் சன்னதி திடலில் 9 அடி உயரமுள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது

    நெல்லை:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று நூற்றுக்கணக்கான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வைக்கப்பட்ட அதே இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி சுமார் 250 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறது. இதனையொட்டி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை மாநகர பகுதியில் சுமார் 100 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை நடைபெற்று வருகிறது. இன்று மதியம் வரையிலும் சுமார் 75 இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டன. டவுன், கருங்குளம், விளாகம், கருப்பந்துறை, பேட்டை உள்ளிட்ட இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

    மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாதர் கோவில் சன்னதி திடலில் 9 அடி உயரமுள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் அங்கு 4 நாட்கள் வழிபாடுகள் நடைபெறுகிறது.

    மேலப்பாளையம் மருதுபாண்டியர் 1-வது தெருவில் களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை சிறுவர்கள் தள்ளுவண்டியில் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

    பாதுகாப்பு

    மாநகர பகுதியில் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவின்பேரில் துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவண குமார், அனிதா ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப் பட்டுள்ளது. சிலைகள் வைக்கும் இடங்களில் தன்னார்வலர்கள் இருக்க வேண்டும்.

    அந்த பகுதியில் மின் விளக்கு வெளிச்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று ஏற்கனவே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிலைகள் பிரதிஷ்டை செய்யும் இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஒரு சில இடங்களில் நாளையும், பெரும்பாலான இடங்களில் 4-ந்தேதியும் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளன.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் 250 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டையில் மட்டும் 34 இடங்களில் பிரதிஷ்டைக்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதுதவிர ஆழ்வார்குறிச்சி, புளியங்குடி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், பாவூர்சத்திரம், அச்சன்புதூர் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் சிலைகள் வைக்கப் பட்டுள்ளன.

    செங்கோட்டை பகுதியில் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 250 போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் 1200 போலீசார் பாதுகாப்பில் உள்ளனர்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 500 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகின்றன. மாநகர பகுதியில் மட்டும் 100 விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் 3 அடி முதல் 10 அடி உயரம் வரையில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×