என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எட்டுக்குடி முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு
    X

    முருகனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    எட்டுக்குடி முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு

    • வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருக்கு வளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடைவீடான சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில், மாசி மாத கிருத்திகையை யொட்டி முருகப்பெருமானுக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின், வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

    Next Story
    ×