search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "communist"

    • புதுவையில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது.
    • 26-ந் தேதி நாடு முழுவதும் கவர்னர் பதவிகளை ரத்துசெய்யக்கோரியும், புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரியும் தேசியளவிலான கருத்தரங்கு நடத்தப்படும்.

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. காஷ்மீர் முதல் தமிழகம் வரை உள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 150 உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். ஓட்டல் ஜெயராமில் கூட்டம் நடக்கிறது.

    முக்கிய கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு மத்திய பா.ஜனதா அரசை வீழ்த்த இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைந்து போராட வியூகம் வகுக்கப்படும்.

    கேரள அமைச்சர்கள், பீகார் எம்.எல்.ஏ.க்கள், தேசிய செயலர்கள் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர். 28-ந் தேதி மாநில கட்சி கட்டுப்பாட்டுக்குழு கூட்டமும் நடக்கிறது. புதுவையில் முதல் முறையாக இந்த கூட்டம் நடக்கிறது. 26-ந் தேதி நாடு முழுவதும் கவர்னர் பதவிகளை ரத்துசெய்யக்கோரியும், புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரியும் தேசியளவிலான கருத்தரங்கு நடத்தப்படும்.

    இதில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ராஜா, தமிழக மாநில செயலாளர் முத்தரசன், தேசிய செயலாளர் கானம் ராஜேந்திரன், தெலுங்கானா செயலாளர் நாராயணசாமி, மார்க்சிஸ்டு கட்சி ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார், புதுவை எதிர்கட்சித்தலைவர் சிவா உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

    புதுவையில் தேர்வு நேரத்தில் ஏழை மக்களின் மின் இணைப்பை துண்டித்து வருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டண பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும். ரெஸ்டோ பாரை கண்டித்து போராட்டம் நடத்தியவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து ஜாமீன் வழங்கியுள்ளனர். இதை கண்டித்து மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும்.

    என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையில் மாநில அந்தஸ்து விவகாரத்தில் முரண்பாடு நிலவுகிறது. பா.ஜனதா கூட்டணியிலிருந்து வெளியேறி மாநில அந்தஸ்துக்காக முதல்-அமைச்சர் ரங்கசாமி போராடினால் அவரோடு இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாராகலைநாதன், பொதுச்செயலாளர் சேதுசெல்வம், ஏ.ஐ.டி.யூ.சி. தினேஷ்பொன்னையா ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஊராட்சிக்கு உட்பட்ட குளங்களில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சுடுகாட்டிற்கு சாலைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    எரவாஞ்சேரி ஊராட்சியில் பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள மக்களின் அடிப்படை தேவை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு வழங்கினர். நிகழ்விற்கு கட்சியின் கிளைச் செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார்.

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். கட்சியின் ஒன்றிய செயலா ளர் ஸ்டாலின் பாபு, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் பாலு,விவசாய சங்க நிர்வாகி ஜெகநாதன், சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் தமிழரசன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

    மனுவில் நாட்டார்ம ங்கலத்தில் பயன்பாடு இன்றி கிடக்கும் சேவை மைய கட்டிடத்தில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வடக்கு தெருவில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,ஊராட்சிக்கு உட்பட்ட குளங்களில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுடுகாட்டிற்கு சாலைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்த ப்பட்டுள்ளது.

    • வள்ளியூர் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பஸ்நிலையம் இடிக்கப்பட்டு புதிதாக சீரமைப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
    • திருச்செந்தூர் செல்லும் பேருந்தை பழைய பேருந்துநிலையம் பகுதியில் நிறுத்தாமல் புதிய பேருந்து நிலையம் வரையில் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

    வள்ளியூர்:

    வள்ளியூர் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பஸ்நிலையம் இடிக்கப்பட்டு புதிதாக சீரமைப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதற்காக பஸ் நிலையம் மூடப்பட்டு அனைத்து பேருந்துகளும் பஸ்நிலையத்திற்கு வெளியே சாலையோரம் நிறுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சாலையோரம் வெயிலிலும் மழையிலும் நனைந்தபடி பாதுகாப்பின்றி காத்திருக்கின்றனர்.

    இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வள்ளியூர் நகர செயலாளர் கலைமுருகன், ராதாபுரம் வட்டாரச் செயலாளர் சேதுராமலிங்கம், மணியன் ஆகியோர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    வள்ளியூர் பஸ் நிலையத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்டும் வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பயணிகள் காத்திருப்பதற்கு மழை, வெயிலில் பயணிகளை பாதிக்காதவாறு பெரிய அளவில் மேற்கூரையுடன் கூடிய காத்திருப்பு கூடாரம் அமைக்கவேண்டும். மேலும் பஸ்நிலைய கட்டுமானபணி குறித்த திட்டமதிப்பீடு, வேலையின் கால நிர்ணயம், ஒப்பந்தகாரர் விபரம் உள்ளிட்ட அறிவிப்பு கள் அடங்கிய பலகை அமைக்கவேண்டும். இது தவிர திருச்செந்தூர் செல்லும் பேருந்தை பழைய பேருந்துநிலையம் பகுதியில் நிறுத்தாமல் புதிய பேருந்து நிலையம் வரையில் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • கம்யூனிஸ்ட்டு கட்சி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது
    • ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு

    புதுக்கோட்டை

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கத்தின் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆவுடையார்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ஜெபமாலைபிச்சை தலைமை வகித்தார். ஆர்பாட்டத்தில்

    100 நாள் வேலை திட்டத்தில் காலை 7 மணிக்கு பணிக்கு செல்ல வேண்டும் என்பதை மாற்றி 9 மணிக்கு பணிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்,100 நாள் வேலை திட்டத்தில் புதிய செயலியை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது அதை நீக்க வேண்டும்,100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடக்கூடிய விவசாய தொழிலாளர் சங்க குழுமங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் ஆறு லட்சத்தில் 400 சதுர அடியில் வீடு கட்டி கொடுக்க வேண்டும்,மாதம் 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நூர்முகமது ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி புறநகர் குழு சார்பில் முத்தையாபுரம் பல்க் பஜார் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புறநகர் குழு உறுப்பினர் பூராடன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நூர்முகமது ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    சி.பி.எம். மாநில குழு உறுப்பினர் பூமியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து,புறநகர செயலாளர் ராஜா ஆகியோர் கண்டன உரையாற்றி பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    மழைக்காலத்திற்கு முன் மழைநீர்,கழிவு நீர் தெருக்களில் தேங்காமல் வெளியேறுவதற்கு முறையான வடிகால் வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும், சில தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள வடிகால்களில் கழிவுநீர், மழை நீர் தேங்கும் வகையில் உள்ளது அதனை தேங்காமல் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திறந்தவெளி வடிகாலில் மூடிகள் அமைத்திட வேண்டும்,தெற்கு மண்டல பகுதிகளில் போக்கு வரத்திற்கு தகுதியற்ற தெரு சாலைகளை சீரமைத்திட வேண்டும், உப்பாற்று ஓடையில் இருந்து கோவளம் கடற்கரை வரை மழை நீர் செல்லும் கால்வாய் ஓரங்களில் வெள்ள தடுப்புச்சுவர் அமைத்திட வேண்டும்.

    ஸ்பிக், பல்க், தோப்பு உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்களில் நிழல் கூடம் அமைத்திட வேண்டும், சுந்தர் நகர்,ஜே.எஸ்.நகர், சவேரியார் புரம், சுனாமி காலனி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய நலக்கூடங்களை மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்த வேண்டும், அனைத்து வாடுகளிலும் சமுதாய நலக்கூடங்கள் அமைத்திட வேண்டும்.

    குடிநீர் இணைப்புக்கான டெபாசிட் தொகையை தவணை முறையில் பெற்றிட வேண்டும், குடிநீர் குழாய் பதிப்பதற்கும் சரி செய்வதற்கும் கூடுதலாக பணம் பறிப்பதை கைவிட வேண்டும், புதிதாக வீடு கட்டுவோரிடம் பிளான் அப்ரூவல் என்ற பெயரில் பொது மக்களிடம் கொள்ளை அடிப்பதை கைவிட வேண்டும், உப்பாற்று ஓடையின் வடபுறம் தனி நபர்கள் ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பூங்கா மற்றும் நடைமேடை அமைத்து விட வேண்டும்.

    டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்களை ஒழித்திட சுகாதார ஊழியர்களை அதிகப்படுத்த வேண்டும், கோவில் பிள்ளை நகரில் இருந்து பைபாஸ் ரோடு வரை ஹைமாஸ் விளக்குகள் அமைத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் புறநகர் குழு உறுப்பினர்கள் முருகன், முனியசாமி, டேனியல் ராஜ், சுப்பையா, வன்னியராஜா, சரஸ்வதி, கிளைச் செயலாளர்கள் மகாராஜன், செல்வி, சமுத்திரபாண்டி, சுடலைமணி, வீரபெருமாள், கண்ணன்,மாரியப்பன், கிருஷ்ண பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநதி - ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டப்பணியை விரைந்து தொடங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆர்ப்பாட்டத்திற்கு கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.

    தென்காசி:

    மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், தென்காசி-நெல்லை நான்கு வழிச் சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும், ராமநதி - ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டப்பணியை விரைந்து தொடங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாடசாமி,வேலு, மாதவன், முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.தென்காசி மாவட்ட செயலாளர் அய்யப்பன் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஷேக்மைதீன், முத்துசாமி, சுப்பிரமணியன், குருசாமி, பிச்சுமணி, செல்வமணி ஆகியோர் பேசினர். ஏ.ஐ.சி.டி.யு மாநில தலைவர் சங்கரபாண்டியன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் அரிபாலகிருஷ்ணன், அண்ணாதுரை,ராமசாமி, பாலசுப்பிர மணியன்,நடராஜகுமார், கருப்பையா, அரிச்சந்திரன் ,சிவசக்தி, முப்புடாதிமுத்து, இசக்கிமுத்து, கோவிந்தராஜன் மற்றும் தூய்மை பணியாளர்கள், பெண்கள் திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஒன்றிய கமிட்டி உறுப்பினர் மாரியப்பன் நன்றி கூறினார்.


    • ராஜபாளையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர், சமூக விரோதிகளால் தாக்கப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ராஜபாளையம்

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் வீரபாண்டியன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டதை கண்டித்தும், சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி அரசரடி பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கண்டன ஆர்ப்பட்டம் நடந்தது.

    முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான லிங்கம் தலைமை தாங்கினார். இதில் கணேசமூர்த்தி, வழக்கறிஞர் பகத்சிங், வரதராஜன், சேத்தூர் நகரச் செயலாளர் ராஜா, அய்யணன், மாயாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    • ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து முறையாக விசாரணை நடத்த ஒரு குழு ஒன்று அமைக்க வேண்டும்.
    • நான்காவது குடிநீர் திட்ட பணிகளில் விடுபட்ட பகுதிகளை இணைக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று காலை மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டு பகுதியில் உள்ள குறைகளை கோரிக்கையாக பேசினர். அ.தி.மு.க. கவுன்சிலரும் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி பேசியதாவது:- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அ.தி.மு.க. ஊழல் செய்துள்ளது என்பதை ஏற்க முடியாது. ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து முறையாக விசாரணை நடத்த ஒரு குழு ஒன்று அமைக்க வேண்டும். இந்த குழு விசாரணைக்கு முழுமையாக அ.தி.மு.க. ஒத்துழைப்பு வழங்கும். பாதாள சாக்கடை மற்றும் நான்காவது குடிநீர் திட்ட பணிகளில் விடுபட்ட பகுதிகளை இணைக்க வேண்டும். இதுபோல் எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அங்கன்வாடி மற்றும் ரேஷன் கடைகள் அமைக்க இட வசதி இல்லை. இதன் காரணமாக பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே மாநகராட்சி சார்பில் ஒரு வரையறை செய்து எந்தெந்த பகுதியில் இடம் உள்ளது என்பது குறித்து தெளிவாக தெரியப்படுத்த வேண்டும். மின்விளக்கு வசதி இல்லாத காரணத்தினால் பல்வேறு இடங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே அந்த பகுதிகளில் மின் விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

    அதேபோல் பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் நான்காவது கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக மூடி தார் சாலை அமைக்க வேண்டும்.மின் விளக்குகள் சரிவர எரியாததால் அதனை சரி செய்ய வேண்டும். அதேபோல் குப்பைகள் அதிக அளவு தேங்கி கிடப்பதால் அதனை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

    ம.தி.மு.க. கவுன்சிலர் நாகராஜ் பேசியதாவது:- காண்டிராக்ட் எடுத்தவர்கள் எந்த வேலையையும் சரிவர செய்யாமல் அரைகுறையாக விட்டு சென்றுள்ளனர். குறிப்பாக மாநகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் மட்டும் அதிகப்படியான வேலைகள் நடந்துள்ளது. ஆனால் வடக்கு பகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை தோண்டுவதற்கு குழி தோண்டும்போது அனைத்து வீடுகளில் குடிநீர் பைப்பையும் உடைத்து உள்ளதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதனை சரி செய்ய வேண்டும்.கவுன்சிலர்களின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட மேயர் தினேஷ் குமார் அதற்கு பதில் அளித்து பேசினார்.

    முன்னதாக கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் ரவி , கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை, சாலை உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும் ஊழல் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள், ஒவ்வொரு கூட்டத்தின் போது ஸ்மார்ட் சிட்டி ஊழலையே கோரிக்கையாக வைத்து பேசுகின்றனர். என்ன ஊழல் நடந்தது என்று விசாரியுங்கள். அதற்கு அ.தி.மு.க. முழு ஒத்துழைப்பு அளிக்கும். திரும்ப திரும்ப அதையே பேசி நேரத்தை வீண் அடிக்காதீர்கள். மக்களுக்கான பிரச்சினையை தீர்க்கும் வகையில் பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்றனர். இதனால் அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கும், கம்யூனிஸ்டு கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    • சிவகிரி நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி கலையரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • சிவகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கோனார் குளம் ஓடையில் முட்புதர்களும், மரங்களும் வளர்ந்து அடர்த்தியாக நீர் போக்குவரத்துக்கு இடையூறாகவும், மழைத்தொடர் காலங்களில் வெள்ளம் செல்ல முடியாத நிலையில் அடர்த்தியாகவும் காணப்படுவதால் உடனே முட்புதர்களை அப்புறப்படுத்த வேண்டும்.

    சிவகிரி:

    சிவகிரி நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி கலையரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர துணைச்செயலாளர் ராஜேந்திரன், நகர பஞ்சாயத்து கவுன்சிலர் அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட செயலாளர் இசக்கித்துரை, விவசாய சங்கத்தை சேர்ந்த வேல்சாமி மற்றும் பலர் பேசினர். இதில் சிவகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கோனார் குளம் ஓடையில் முட்புதர்களும், மரங்களும் வளர்ந்து அடர்த்தியாக நீர் போக்குவரத்துக்கு இடையூறாகவும், மழைத்தொடர் காலங்களில் வெள்ளம் செல்ல முடியாத நிலையில் அடர்த்தியாகவும் காணப்படுவதால் உடனே முட்புதர்களை அப்புறப்படுத்த வேண்டும்.

    இதனைப்போன்று வடகால் கண்மாய்க்கு செல்கின்ற வடகால் ஓடையிலும் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுவதால் அவற்றையும் துப்புரவு செய்ய வேண்டும் எனவும், மேலும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பஸ்கள் போக்குவரத்துக்கும் மற்றும் வாகனங்கள் செல்வதற்கும் இடையூறாக ரோட்டின் இருபுறங்களிலும் காணப்படும் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற வேண்டும். சிவகிரியில் உள்ள வங்கிகளில் பணிபுரியும் மேல் அதிகாரிகள் தமிழ் தெரிந்தவர்களையே நியமிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் பேறுகால ஆஸ்பத்திரியை அபிவிருத்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம்.
    • எந்த வாக்குறுதியையும் பா.ஜ.க. நிறைவேற்றவில்லை.

    திருப்பூர் :

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது தமிழ்நாடு மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் 3 -வது நாளன்று நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம் வருமாறு:- வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய இன்று ஆகஸ்ட் 9 ந் தேதி முதல் ஆகஸ்ட் 15ந் தேதி வரையில் வீடுகள், அலுவலகங்கள் அனைத்திலும் தேசியக் கொடியேற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட வேண்டும்.தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம்.

    கருப்புப் பணத்தை முற்றிலுமாக ஒழிப்போம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை உயா்த்திக் காட்டுவோம் என்ற எந்த வாக்குறுதியையும் பா.ஜ.க. நிறைவேற்றவில்லை. இதற்கு நோ்மாறாக பொதுத் துறை நிறுவனங்களை எல்லாம் காா்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெரிய முதலாளிகளுக்கும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. உலகமே பொருளாதார நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருந்த நேரத்தில், இந்தியாவைக் காப்பாற்றிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளையும், காப்பீட்டு நிறுவனங்களையும், பொதுத் துறை நிறுவனங்களையும் மத்திய அரசு விற்பனை செய்து கொண்டிருக்கிறது.

    எதிா்கால தலைமுறையை உருவாக்கும் கல்வி, வணிகமயமாக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் அங்கம் வகிக்கும் தி.மு.க. தலைமையிலான மதசாா்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலிலும், 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலிலும் மகத்தான வெற்றி பெற்றது. அதேபோல தமிழகத்தில் 2024 ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை தோற்கடிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாநாட்டின் இறுதி நாளான இன்று 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 3 மணி அளவில் திருப்பூா் ஸ்ரீ சக்தி திரையரங்கம் அருகில் இருந்து தொடங்கும் செம்படைப் பேரணியானது காங்கயம் சாலையில் உள்ள பத்மினி காா்டனில் நிறைவடைகிறது. 

    • அவனியாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து நடந்தது.

    அவனியாபுரம்

    அவனியாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரிசிக்கான ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து தாலுகா குழு செயலாளர் தனபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி, முன்னாள் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயற்குழு உறுப்பினர் மதுகூர் ராமலிங்கம் கண்டன உரை ஆற்றினார். இதில் குமரவேல்,நயினா செல்வம்,பால்பாண்டி, செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • ஊர்வலத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • மாநாட்டின் முதல்நாளில் அரசியல், அமைப்பு நிலை மற்றும் வேலை அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட 24 - வது மாநாடு பாபநாசத்தில் அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்ட செந்தொண்டர் பேரணியில் அனைவரும் சிவப்பு வண்ணத்தில் சீருடை அணிந்து கலந்து கொண்டனர். ஊர்வலத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மாநாட்டு மண்டபத்தில் வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணன் கொடி ஏற்றிவைத்தார்.அதனைத் தொடர்ந்து மாநாடு தொட–ங்கப்பட்டது மாநாட்டில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநாட்டின் முதல்நாளில் அரசியல், அமைப்பு நிலை மற்றும் வேலை அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

    இதில் தேசிய குழு உறுப்பினர் கோ.பழனிசாமி, மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி, ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜன், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், மாதர் சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் டி.கண்ணகி, பாபநாசம் ஒன்றிய செயலாளர் பொன்.சேகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ×