search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெற்கு மண்டலத்தில் குடிநீர் கட்டணம்  தவணை முறையில் வசூலிக்க வேண்டும் - கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை
    X

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    தெற்கு மண்டலத்தில் குடிநீர் கட்டணம் தவணை முறையில் வசூலிக்க வேண்டும் - கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நூர்முகமது ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி புறநகர் குழு சார்பில் முத்தையாபுரம் பல்க் பஜார் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புறநகர் குழு உறுப்பினர் பூராடன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நூர்முகமது ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    சி.பி.எம். மாநில குழு உறுப்பினர் பூமியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து,புறநகர செயலாளர் ராஜா ஆகியோர் கண்டன உரையாற்றி பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    மழைக்காலத்திற்கு முன் மழைநீர்,கழிவு நீர் தெருக்களில் தேங்காமல் வெளியேறுவதற்கு முறையான வடிகால் வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும், சில தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள வடிகால்களில் கழிவுநீர், மழை நீர் தேங்கும் வகையில் உள்ளது அதனை தேங்காமல் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திறந்தவெளி வடிகாலில் மூடிகள் அமைத்திட வேண்டும்,தெற்கு மண்டல பகுதிகளில் போக்கு வரத்திற்கு தகுதியற்ற தெரு சாலைகளை சீரமைத்திட வேண்டும், உப்பாற்று ஓடையில் இருந்து கோவளம் கடற்கரை வரை மழை நீர் செல்லும் கால்வாய் ஓரங்களில் வெள்ள தடுப்புச்சுவர் அமைத்திட வேண்டும்.

    ஸ்பிக், பல்க், தோப்பு உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்களில் நிழல் கூடம் அமைத்திட வேண்டும், சுந்தர் நகர்,ஜே.எஸ்.நகர், சவேரியார் புரம், சுனாமி காலனி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய நலக்கூடங்களை மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்த வேண்டும், அனைத்து வாடுகளிலும் சமுதாய நலக்கூடங்கள் அமைத்திட வேண்டும்.

    குடிநீர் இணைப்புக்கான டெபாசிட் தொகையை தவணை முறையில் பெற்றிட வேண்டும், குடிநீர் குழாய் பதிப்பதற்கும் சரி செய்வதற்கும் கூடுதலாக பணம் பறிப்பதை கைவிட வேண்டும், புதிதாக வீடு கட்டுவோரிடம் பிளான் அப்ரூவல் என்ற பெயரில் பொது மக்களிடம் கொள்ளை அடிப்பதை கைவிட வேண்டும், உப்பாற்று ஓடையின் வடபுறம் தனி நபர்கள் ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பூங்கா மற்றும் நடைமேடை அமைத்து விட வேண்டும்.

    டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்களை ஒழித்திட சுகாதார ஊழியர்களை அதிகப்படுத்த வேண்டும், கோவில் பிள்ளை நகரில் இருந்து பைபாஸ் ரோடு வரை ஹைமாஸ் விளக்குகள் அமைத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் புறநகர் குழு உறுப்பினர்கள் முருகன், முனியசாமி, டேனியல் ராஜ், சுப்பையா, வன்னியராஜா, சரஸ்வதி, கிளைச் செயலாளர்கள் மகாராஜன், செல்வி, சமுத்திரபாண்டி, சுடலைமணி, வீரபெருமாள், கண்ணன்,மாரியப்பன், கிருஷ்ண பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×