என் மலர்
நீங்கள் தேடியது "கம்யூனிஸ்ட்"
- சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
- அனைவரும் அஞ்சலி செலுத்த பொதுப்பார்வையில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்த பொதுப்பார்வையில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள சிபிஐ அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நல்லகண்ணு உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும், நல்லக்கண்ணு உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
- பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வெற்றி கண்டவர்.
- அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நல்லக்கண்ணு மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், தலைசிறந்த தொழிற்சங்கவாதியுமான நல்லக்கண்ணு அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பேரன்பைப் பெற்றவரும், அனைவரிடத்திலும் அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடியவருமான இரா. நல்லக்கண்ணு அவர்கள், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைளை நிறைவேற்றித் தருவதற்காக பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வெற்றி கண்டவர்.
'தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த' சிறந்த பண்பாளர் திரு. நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன்.
- நல்லகண்ணு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
நல்லக்கண்ணு மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன்.
அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மறைந்த தோழர், அய்யா இரா. நல்லகண்ணு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மணல் மாஃபியாக்களுக்கு எதிராக களத்தில் நின்றவர்.
- மறைந்தது லட்சியவாதிகளுக்கு இழப்பு; தாய் தமிழகத்திற்கு பேரிழப்பு.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
நல்லக்கண்ணு மறைவுக்கு தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பாராண்ட மன்னரைக் காட்டிலும் நூறாண்டு கண்ட தோழர் நல்லக்கண்ணு புகழின் உச்சத்தைத் தொட்டவர்; தியாகத்திற்கு சதை வடிவம் தந்தவர்; சரித்திரப் பேரேட்டில் பல அத்தியாயங்களுக்குப் பேசப்பட வேண்டியவர்.
மணல் மாஃபியாக்களுக்கு எதிராக களத்தில் நின்றவர். சிவப்பை உவப்பாகக் கொண்டவர்; மறைந்தது லட்சியவாதிகளுக்கு இழப்பு; தாய் தமிழகத்திற்கு பேரிழப்பு.
அவரை இழந்து தவிக்கும் செங்கொடி தோழர்களுக்கும், அவர் மகள் ஆண்டாளுக்கும் என்னுடைய ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கம்யூனிஸ்ட் கட்சி இன்றுவரை உயிர்ப்போடு இருப்பதற்கு நல்லகண்ணு போன்றோரின் தியாகமே காரணம்.
- இறந்தவர்களை மீட்டுருவாக்கும் தொழில்நுட்பம் கண்டறிந்தால் நல்லகண்ணுவின் மீட்பையே நாடு கேட்கும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.
நல்லக்கண்ணு மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தோழர் நல்லகண்ணு
மறைந்துவிட்டார்
சிவப்புக் கட்சியின்
கறுப்பு காந்தி இறந்துவிட்டார்
எழுந்தாலும் விழுந்தாலும்
கடலின் புகழ்பாடும் அலைபோல,
கம்யூனிஸ்ட் கட்சியின்
ஏற்றத்திலும் இறக்கத்திலும்
செங்கொடி சுமந்த
சிங்கம் அவர்
கம்யூனிஸ்ட் அல்லாதவர்களும்
கம்யூனிஸ்ட் கட்சியின்மீது
கொண்டிருக்கும் மதிப்புக்கு
நல்லகண்ணுவின்
வாழ்க்கைமுறை ஒரு காரணம்
சுதந்திர இந்தியாவில்
தடைசெய்யப்பட்ட
கம்யூனிஸ்ட் கட்சி
இன்றுவரை
உயிர்ப்போடு இருப்பதற்கு
நல்லகண்ணு போன்றோரின்
தியாகமே காரணம்
செயற்கை நுண்ணறிவு
எதிர்காலத்தில்
இறந்தவர்களை மீட்டுருவாக்கும்
தொழில்நுட்பம் கண்டறிந்தால்
நல்லகண்ணுவின் மீட்பையே
நாடு கேட்கும்
அவர் வாழ்ந்தது
ஒரு நூறாண்டு;
அவரை மறக்காது
இந்த நூற்றாண்டு
அவருக்கு
என் செவ்வணக்கம்
இவ்வாறு அவர் கூறினார்.
- சிதம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
- அப்போது, திமுக கூட்டணி கட்சிகளுக்கு இ.பி.எஸ். அழைப்பு விடுத்தார்.
கடலூர்:
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:
மாநாடு, கொடிக் கம்பம் நடுவதற்கு கூட்டணி கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சீட்களைக் குறைத்து விடுவார்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு கூட்டணி கட்சிகள் ஜால்ரா போடுகின்றன. எதற்காக அசிங்கப்படுகிறீர்கள்?
தி.மு.க. கூட்டணியில் இருந்த அனைத்துக் கட்சிகளுடனும் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.
அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் என தெரிவித்தார்.
- ஊராட்சிக்கு உட்பட்ட குளங்களில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுடுகாட்டிற்கு சாலைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
எரவாஞ்சேரி ஊராட்சியில் பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள மக்களின் அடிப்படை தேவை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு வழங்கினர். நிகழ்விற்கு கட்சியின் கிளைச் செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். கட்சியின் ஒன்றிய செயலா ளர் ஸ்டாலின் பாபு, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் பாலு,விவசாய சங்க நிர்வாகி ஜெகநாதன், சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் தமிழரசன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
மனுவில் நாட்டார்ம ங்கலத்தில் பயன்பாடு இன்றி கிடக்கும் சேவை மைய கட்டிடத்தில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடக்கு தெருவில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,ஊராட்சிக்கு உட்பட்ட குளங்களில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுடுகாட்டிற்கு சாலைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்த ப்பட்டுள்ளது.
- அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பாஜக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்.
- தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என திமுக தலைமைக் கழகம் என அறிவிப்பு.
மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
மாநில உரிமைகள் காத்திட மத்திய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் வரும் 8ம் தேதி போராட்டம் நடத்த உள்ளது.
அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பாஜக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
- வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
- கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அதன் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் போட்டியிடுகின்றனர்.
தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ள இரு கட்சிகளும் வயநாடு தொகுதியில் தனித்தனியாக போட்டியிடுவது அந்தக் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள் தங்களது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருவதால் இந்தியா கூட்டணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வயநாடு தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ஆனி ராஜா அங்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி தொகுதியைப் புறக்கணித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் வயநாடு தொகுதிக்கு அவர் என்ன செய்தார்? அவர் ஒருமுறை கூட பாராளுமன்றத்தில் வயநாடு தொகுதியின் பெயரை உயர்த்தவில்லை.
ராகுல் காந்தி இந்தத் தொகுதிக்கு எதுவும் செய்யாததால் வயநாடு மக்களுக்கு நான் ஒரு சிறிய காரியத்தை செய்தாலும், அது பெரிய விஷயமாக இருக்கும். தொகுதி மக்கள் மொழிபெயர்ப்பாளர் இல்லாமல் அணுகக்கூடிய ஒருவர் தேவை என கூறுகிறார்கள்.
வயநாடு தொகுதியில் போக்குவரத்து பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. ரெயில்வே துறையில் பல புதிய திட்டங்கள் இருந்தும், இங்கு ரெயில் பாதையை கொண்டுவர எந்த முயற்சியும் இல்லை.
அதேபோல் மனித-விலங்கு மோதலுக்கு தீர்வு காணவும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய சட்டத்தில் திருத்தம் தேவை. இந்த விஷயம் பற்றி பாராளுமன்றத்தில் பேசப்பட வேண்டும் என தெரிவித்தார்.
- அந்த வீடியோவில் ஒரு ஆண் தனது கையில் உள்ள கட்டையால் அந்த பெண்ணையும் ஆணையும் சரமாரியாக தாக்குகிறார்.
- தாக்குதலில் ஈடுபட்ட நபர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேற்கு வங்கத்தில் நடுரோட்டில் ஒரு ஆணையும் பெண்ணையும் ஒரு ஆண் சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் ஒரு ஆண் தனது கையில் உள்ள கட்டையால் அந்த பெண்ணையும் ஆணையும் சரமாரியாக தாக்குகிறார். அதனை சுற்றி உள்ள ஏராளமானோர் வேடிக்கை பார்க்கின்றனர்.
சமூகவலைதளங்களில் வேகமாக பரவும் இந்த வீடியோவை பகிர்ந்து பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் காட்சிகள் பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட நபர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றும் மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் வடக்கு வங்காளத்தின் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது என்று சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர் குற்றாவாளியை தேடி வருகிறது.
- திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக கூறி அப்பெண்ணையும் ஆணையும் தாக்கியுள்ளனர்.
- இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்த எதிர்க்கட்சிகள் மேற்குவங்கத்தில் தாலிபான் கலாச்சாரம் நிலவுவதாக விமர்சித்தனர்.
மேற்கு வங்கத்தில் நடுரோட்டில் ஒரு ஆணையும் பெண்ணையும் ஒரு ஆண் சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் ஒரு ஆண் தனது கையில் உள்ள கட்டையால் அந்த பெண்ணையும் ஆணையும் சரமாரியாக தாக்குகிறார். அதனை சுற்றி உள்ள ஏராளமானோர் வேடிக்கை பார்க்கின்றனர்.
சமூகவலைதளங்களில் வேகமாக பரவும் இந்த வீடியோவை பகிர்ந்து பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பகிர்ந்து மேற்குவங்கத்தில் தலிபான் கலாச்சாரம் நிலவுவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் வடக்கு வங்காளத்தின் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் கிராம பஞ்சாயத்தில் நடந்துள்ளது
இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தஜிமுல் இஸ்லாம் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக கூறி அப்பெண்ணையும் ஆணையும் தாக்கியுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
திருமணமான சிறிது நேரத்தில் மணப்பெண் தனது காதலனுடன் ஓடியுள்ளார். பின்னர் அப்பெண் ஊருக்கு திரும்பிய போது அவள் தனது கணவருக்கு 10,000 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.
அந்த பணத்தை அப்பெண் கட்ட தவறியதால் தஜிமுல் இஸ்லாம் அப்பெண்ணை தாக்கியுள்ளார். தஜிமுல் இஸ்லாம் உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹமீதுல் ரஹ்மானின் நெருங்கிய உதவியாளர் என்று கூறப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கருணால் கஹோஷ் இந்த தாக்குதலை நியாயப்படுத்தி பேசினார். மேற்குவங்கத்தில் இத்தகைய சம்பவங்கள் சாதாரணமாக நடப்பவை என்றும் சிபிஎம் ஆட்சிக்காலத்தில் இருந்தே இத்தகைய சம்பவங்கள் நடந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
- கம்யூனிசத்தில் கோளாறு இல்லை, கம்யூனிசம் செம்மையானது.
- கம்யூனிச தலைவர்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டனர் என்றார்.
சென்னை:
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
கம்யூனிச கொள்கை தோற்றுப்போய் விட்டது.
கம்யூனிசத்தில் கோளாறு இல்லை, கம்யூனிசம் செம்மையானது.
கம்யூனிச தலைவர்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டதால் கம்யூனிச தத்துவங்கள் நீர்த்துப் போனது.
சி.பி.எம். முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சமீபத்தில், தமிழகத்தில் அவசர நிலையை அமல்படுத்தியுள்ளதா என தமிழக அரசை கேள்வி கேட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.






