search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Airport"

    • தரைதள ஊழியர்கள், கைகளால் காட்டும் சைகைகளை விமானிகள் பார்த்து, விமானங்களை சரியாக கொண்டு வந்து நிறுத்துவதில் காலதாமதங்கள் ஏற்பட்டன.
    • நவீன தானியங்கி வழிகாட்டும் கருவிகளை, சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை பகுதியில் அமைக்க, இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்துவதற்கான நடைமேடைகள் 100-க்கும் மேற்பட்டவை உள்ளன. இவைகளில் தற்போது 95 நடைமேடைகள் விமானங்கள் வந்து, நின்று செல்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. விமானங்கள் ஓடு பாதையில் ஓடி, அதன்பின்பு டாக்ஸிவே எனப்படும், இணைப்பு சாலைக்கு வந்து, பின்னர் அது நிற்க வேண்டிய நடைமேடையில் வந்து நிற்கும்.

    விமானங்கள் அவ்வாறு நடைமேடைக்கு வந்து நிற்பதற்கு, சென்னை விமான நிலைய தரைதள ஊழியர்கள், தங்கள் கைகளில் சிக்னல் பலகைகளை வைத்துக் கொண்டு, சைகைகளை காட்டுவார்கள். விமானத்தில் உள்ள விமானிகள் அந்த சைகைகளை பார்த்து, அதற்குத் தகுந்தபடி, விமானத்தைக் கொண்டு வந்து நிறுத்திக் கொண்டு வந்தனர். ஆனால் கடுமையான சூறைக்காற்று, மழை காலங்கள், போன்ற மோசமான வானிலையின் போது, தரைதள ஊழியர்கள், கைகளால் காட்டும் சைகைகளை விமானிகள் பார்த்து, விமானங்களை சரியாக கொண்டு வந்து நிறுத்துவதில் காலதாமதங்கள் ஏற்பட்டன.

    இதையடுத்து வெளிநாடுகளில் உள்ளது போல், (அட்வான்ஸ் விசுவல் டோக்கிங் கெய்ட்நஸ் சிஸ்டம்) எனப்படும், நவீன தானியங்கி வழிகாட்டும் கருவிகளை, சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை பகுதியில் அமைக்க, இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. அதன்படி தற்போது முதற்கட்டமாக சென்னை விமான நிலையத்தில் 50 நவீன தானியங்கி வழிகாட்டுதல் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக அந்த கருவிகள் செயல்பாடுகள் பற்றி சோதனைகள் நடந்தன. சோதனை முறை வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து, இன்று காலை முதல் இந்த கருவிகள் சென்னை விமான நிலையத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

    விமானங்கள் டாக்ஸி வேயில் இருந்து, விமானங்கள் நிறுத்தப்படும் நடைமேடைக்கு திரும்பும் போது, 60 மீட்டர் தூரத்தில் இருந்து, இந்த நவீன தானியங்கி வழிகாட்டும் கருவி செயல்பட தொடங்கும். விமானம் நேர்கோட்டில் சரியானபடி, நடைமேடைக்கு வருவதை அந்த தானியங்கி கருவி உறுதி செய்யும். விமானம் நேர்கோட்டில் இருந்து விலகி, வலது அல்லது இடது புறம் திரும்பினால், அந்த கருவியில் அமைக்கப்பட்டுள்ள திரையில், டிஜிட்டல் முறையில் அம்புக்குறி வழி காட்டப்படும். விமானி அதை கவனித்து விமானத்தை இயக்குவார். விமானம் சரியாக நிற்கும் இடத்திற்கு வந்ததும், அந்த கருவியின் திரையில், ஸ்டாப் என எழுத்துக்களுடன் கூடிய சிவப்பு விளக்கு எரியும். அதை பார்த்து விமானி விமானத்தை நிறுத்தி விடுவார்.

    இந்த நவீன புதிய முறை, இன்றுமுதல் சென்னை விமான நிலையத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், இனிமேல் மோசமான வானிலை, பலத்த மழை, சூறைக்காற்று போன்ற நேரங்களிலும், விமானங்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல், அது நிற்க வேண்டிய நடைமேடையை சென்றடையும்.

    அதோடு அடுத்த கட்டமாக சென்னை விமான நிலையத்தில் உள்ள மற்ற நடைமேடைகளுக்கும், இந்த அதிநவீன கருவிகள் பொருத்தப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • டெல்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையரகத்தில், நிதித்துறை பொது மேலாளராக இருந்த தீபக் நியமிக்கப்பட்டு உள்ளார்.
    • தீபக் ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் துணை பொது மேலாளர் பொறுப்பில் இருந்தார்.

    சென்னை:

    சென்னை விமான நிலைய புதிய இயக்குனராக, டெல்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையரகத்தில், நிதித்துறை பொது மேலாளராக இருந்த தீபக் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இவர் ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் துணை பொது மேலாளர் பொறுப்பில் இருந்தார். இதைத்தொடர்ந்து பதவி உயர்வு பெற்று, டெல்லி தலைமையகத்தில், நிதித்துறை பொது மேலாளராக பதவியில் இருந்தார். தற்போது தீபக், சென்னை விமான நிலைய இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா 2 நாட்களுக்கு முன்பே சிங்கப்பூர் சென்று விட்டார்.
    • இன்றும், நாளையும் சிங்கப்பூரில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பிறகு ஜப்பான் புறப்பட்டு செல்ல உள்ளார்.

    சென்னை:

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைத்திடுவதில் முக்கிய பங்காற்றிடும் விதமாக, 2030-2031 நிதி ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மேம்படச் செய்வதை ஒரு லட்சிய இலக்காகக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலாற்றி வருகிறார்.

    இந்த இலக்கினை அடைந்திட, ரூ.23 லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகளை ஈர்த்திடவும், 46 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிடவும் வேண்டும். இந்த நோக்கத்திற்காக, தொழில்துறை பல்வேறு முதலீட்டாளர்கள் மாநாடுகளை அரசு நடத்தி வருகிறது.

    இதன் மூலம் ஜூலை 2021 முதல் இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, தமிழ்நாட்டில் 2,95,339 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் மற்றும் 4,12,565 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    அனைவரையும் உள்ளடக்கிய சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் விதமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், இந்தத் திட்டங்கள் பரவலாக அமைய உள்ளன.

    பல்வேறு துறை சார்ந்த கொள்கைகள், தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு நிதி நுட்பக் கொள்கை 2021. தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை 2021, தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை 2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022.

    தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை 2022, தமிழ்நாடு எத்தனால் கலவைக் கொள்கை 2023 மற்றும் தொழில் நுட்ப ஜவுளிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்பு திட்டம் போன்ற பல்வேறு துறை சார்ந்த கொள்கைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது.

    தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும், வரும் ஜனவரி 2024-ல் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் 9 நாள் அரசு முறைப் பயணமாக, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புறப்பட்டு சென்றார்.

    இதையொட்டி இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன்பிறகு சென்னை விமானநிலையம் சென்றார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றிருந்தார்.

    சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் வந்திருந்து வழியனுப்பி வைத்தனர்.

    மேலும் தலைமை செயலாளர் இறையன்பு, மேயர் பிரியா, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.எல்.ஏ.க்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, இனிகோ இருதயராஜ், தி.மு.க. தலைமை நிலைய செயலாளரான வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் துறைமுகம் காஜா, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவரான குன்றத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் படப்பை ஆ.மனோகரன், தாம்பரம் துணை மேயர் காமராஜ் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் வந்திருந்து வழியனுப்பி வைத்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அரசு உயர் அதிகாரிகளும் சென்றுள்ளனர். தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா 2 நாட்களுக்கு முன்பே சிங்கப்பூர் சென்று விட்டார்.

    இன்று சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்நாட்டின் போக்குவரத்து தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரனையும், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகத்தையும் மற்றும் அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக் மற்றும் கேப் பிட்டாலாண்டு இன்வஸ் மன்ட் அதிபர்கள் முதன்மை செயல் அலுவலர்களையும் சந்திக்க உள்ளார்.

    இன்று மாலை நடை பெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) பேம்டி, என் டான்சிம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவை சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பல்கலை கழகமான சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அமைப்பு மற்றும் சிங்கப்பூர் இந்தியா தொழில் வர்த்தக கூட்டமைப்பு ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலைநிகழ்ச்சியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.

    இன்றும், நாளையும் சிங்கப்பூரில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பிறகு ஜப்பான் புறப்பட்டு செல்ல உள்ளார். அங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

    • தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 226 திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
    • லூலூ பன்னாட்டு நிறுவனம் கோவையில் தனது நிறுவனத்தை தொடங்கி விட்டது.

    சென்னை:

    சிங்கப்பூர் புறப்படும் முன்பு சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்று சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறேன். என்னுடன் தொழில் துறை அமைச்சரும், அரசுத்துறை உயர் அதிகாரிகளும் வருகிறார்கள்.

    கடந்த மார்ச் மாதம் அரசு உயர் அதிகாரிகளுடன் ஐக்கிய அரபு உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று பல்வேறு தொழில் அதிபர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

    கே:- கடந்த முறை வெளிநாடுகளுக்கு சென்ற போது எவ்வளவு முதலீடு கிடைத்தது? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது?

    ப:- கடந்த ஜனவரி மாதம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று வந்தபோது பெறப்பட்ட முதலீடு துபாயில் ரூ.6,100 கோடியாகும். 15 ஆயிரத்து 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

    லூலூ பன்னாட்டு நிறுவனம் கோவையில் தனது நிறுவனத்தை தொடங்கி விட்டது. சென்னையிலும் இடம் பார்த்து வருகின்றனர். நிலம் கிடைத்ததும் கட்டுமான பணியை தொடங்கும்.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 226 திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ரூ.2.95 கோடி முதலீடு மூலம் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் இது அமைந்தது.

    இதன் தொடர்ச்சியாக இப்போது வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறேன்.

    நான் செல்லும் இடங்களில் தமிழகத்தில் ஜனவரி மாதம் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதோடு தொழில் அதிபர்களை நேரிலும் சந்தித்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட உள்ளேன்.

    வருகிற 2024-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக செல்லும் நான் உங்கள் வாழ்த்துக்களோடு செல்கிறேன். நீங்களும் என்னை வாழ்த்தி அனுப்புங்கள்.

    கே:-சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளை தொடர்ந்து வேறு எந்த நாடுகளுக்கு செல்கிறீர்கள்?

    ப:-அது பின்னர்தான் முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை விமான நிலையத்தில் 1.25 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • இலங்கையை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

     சென்னை விமான நிலையத்தில் நேற்று கத்தார், துபாய் கொழும்புவில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்டரூ.2.27 கோடி மதிப்புள்ள 1.25 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த விவகாரத்தில் இலங்கையை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களிடம், சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக கூடுதல் அதிகாரிகளும், தரை தள ஓடுபாதை பகுதிக்கு கூடுதல் லோடர் ஊழியர்களும் வரவழைக்கப்பட்டனர்.
    • வானிலை சீரடைந்த பின்னர் இந்த விமானங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக பெங்களூர் புறப்பட்டு சென்றன.

    ஆலந்தூர்:

    பெங்களூரில் நேற்று இரவு மோசமான வானிலை நிலவியது. இதன்காரணமாக பெங்களூரரில் தரையிறங்க வேண்டிய கொல்லகத்தா, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்த 14 விமானங்கள் திருப்பி விடப்பட்டு அடுத்தடுத்து சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கின.

    இந்த விமானங்களில் வந்த பயணிகள் அனைவரும், விமானங்களை விட்டு கீழே இறக்காமல், விமானங்களிலேயே அமர்ந்து இருந்தனர். அந்தந்த ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், உணவு, குடிநீர் வசதிகளை செய்து கொடுத்தனர்.

    இதனால் சென்னை விமான நிலையத்தில் இரவு பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில், நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை, வெளிநாட்டு விமானங்கள் பெருமளவு வந்து தரை இறங்கும். அந்த நேரத்தில், பெங்களூரில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள், சென்னையில் வந்து தரை இறங்கியதால்,சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக கூடுதல் அதிகாரிகளும், தரை தள ஓடுபாதை பகுதிக்கு கூடுதல் லோடர் ஊழியர்களும் வரவழைக்கப்பட்டனர்.

    இன்று அதிகாலை ஒரு மணிக்கு மேல் பெங்களூரில் வானிலை சீரடைந்த பின்னர் இந்த விமானங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக பெங்களூர் புறப்பட்டு சென்றன.

    • 2 பயணிகள் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களை தனியாக அழைத்து விசாரணை செய்தனர்.
    • தங்கம் கடத்தி வந்த 2 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆலந்தூர்:

    துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது 2 பயணிகள் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களை தனியாக அழைத்து விசாரணை செய்தனர். அப்போது ஒருவர் அவரது உள்ளாடைக்குள் 856 கிராம் தங்கச் செயினை மறைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

    இதேபோல் மற்றொரு பயணி தான் கொண்டுவந்த டி-சர்ட்டின் காலரில் 330 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரிந்தது.

    இதையடுத்து மொத்தம் சுமார் 1.08 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். தங்கம் கடத்தி வந்த 2 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சென்னையில் தற்போது பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தினமும் சராசரியாக 100 விமானங்கள் இயக்கப்படுகிறது.
    • விமான நிலையம் அமைக்க பரந்தூரை விட பன்னூர் சிறந்த இடமாக தேர்வு செய்யப்பட்டிருப்பதால் அங்கேயே விமான நிலையம் அமைகிறது.

    சென்னை:

    நாடு முழுவதும் பெரு நகரங்களில் விமான போக்குவரத்தை விரிவுபடுத்தும் வகையில் 2-வது விமான நிலையங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    அதன்படி டெல்லி மற்றும் மும்பையில் 2-வது விமான நிலையம் அமைக்கும் பணி தொடங்கி விட்டது.

    சென்னையில் தற்போது பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தினமும் சராசரியாக 100 விமானங்கள் இயக்கப்படுகிறது. உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 400 விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கும் இயக்கப்படுகிறது. விரைவான பயணம் என்பதால் விமான போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    எனவே சென்னையிலும் 2-வது விமான நிலையம் அமைப்பதற்காக மத்திய விமான போக்குவரத்து ஆணையம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பன்னூர், பரந்தூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர், படாளம் ஆகிய 4 இடங்களை தேர்வு செய்து இருந்தது. சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து வசதி, தொழில்நுட்ப வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு 4 இடங்களையும் ஆய்வு செய்த குழுவினர் பன்னூர், பரந்தூர் ஆகிய 2 இடங்களை முதலில் தேர்வு செய்திருந்தனர்.

    இப்போது அதில் பன்னூரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாளை (வெள்ளி) டெல்லியில் மத்திய விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதி சிந்தியா மற்றும் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது பன்னூரில் விமான நிலையம் அமைப்பது உறுதி செய்யப்பட உள்ளது.

    பரந்தூரை விட பன்னூரில் விமான நிலையம் அமைப்பது சிறந்தது என்று தேர்வு குழுவினர் முடிவு செய்து இருப்பதற்கான காரணங்கள் வருமாறு:-

    சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 4 கி.மீட்டர் தூரத்தில் பன்னூர் அமைந்துள்ளது.

    * சென்னை சென்ட்ரலில் இருந்து 55 கி.மீட்டர் தொலைவில் தென்மேற்கில் அமைந்துள்ளது பன்னூர். ஆனால் பரந்தூர் 70 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.

    * இரு இடங்களிலும் இரண்டு ஓடுதளங்களுடன் விமான நிலையம் அமைக்க இட வசதி உள்ளது. பன்னூரில் தேர்வு செய்யப்பட்டுள்ள 4,500 ஏக்கரும் இயற்கையாகவே விமான நிலையம் அமைக்க சாதகமான நிலம். பரந்தூரில் 4,791 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் 2,605 ஏக்கர் மட்டும் காய்ந்த தரிசு நிலம்.

    * பரந்தூரில் கூடுதலாக 200 ஏக்கர் நிலம் விமான நிலைய பணிகளுக்கு தேவைப்படும். ஆனால் பன்னூரில் வான்வளி பரப்பு தேவையான அளவு உள்ளது.

    * பன்னூரில் சுற்றிலும் தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. பரந்தூரை சுற்றி பெரிய அளவிலான தொழில் நிறுவனங்கள் இல்லை.

    * நகரின் முக்கிய பகுதியில் இருந்து சராசரியாக 49 கி.மீட்டர் தூரத்தில் பன்னூர் உள்ளது. 1 மணி நேரம் 26 நிமிடங்களில் விமான நிலையத்தை அடைய முடியும். ஆனால் பரந்தூரில் 73 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. பயண நேரம் 1 மணி நேரம் 54 நிமிடங்கள் ஆகும்.

    இரு இடங்களிலுமே விமான தளத்தின் அருகே உயர் அழுத்த மின் கோபுரங்கள், மொபைல் டவர்கள், மின் கம்பங்கள் உள்ளன.

    விமான நிலையம் அமைக்க பரந்தூரை விட பன்னூர் சிறந்த இடமாக தேர்வு செய்யப்பட்டிருப்பதால் அங்கேயே விமான நிலையம் அமைகிறது.

    • முகக்கவசம் கட்டாயம் அணிந்து வந்தால் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
    • விமான நிலையத்தில் அனைத்து பகுதியிலும் ‘நோ மாஸ்க், நோ எண்ட்ரி’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது.

    கடந்த ஏப்ரல் 15-ந் தேதி தமிழகத்தின் மொத்த பாதிப்பு 22 ஆக இருந்தது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து மெல்ல அதிகரிக்க தொடங்கியது. நேற்று ஒரே நாளில் 476 பேருக்கு பரவியது. 3 மாதத்திற்கு பிறகு நேற்று உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முகக்கவசம் கட்டாயம் அணிந்து வந்தால் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.

    விமான நிலையத்தில் அனைத்து பகுதியிலும் 'நோ மாஸ்க், நோ எண்ட்ரி' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன. கண்டிப்பாக பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் முகக்கவசம் அணியாமல் வருகிறவர்களை நிறுத்தி கொரோனா வைரஸ் விதிகளை சுட்டி காட்டுகின்றனர். முகக்கவசத்தை முறையாக அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

    விமான பயணிகள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றுகளோடு தான் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

    கொரோனா பரிசோதனையும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சந்தேகப்படும் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டை சுகாதாரத்துறையினர் பார்த்து முகவரி, போன் எண்களை குறித்து கொண்டு பயணிகளை வெளியே அனுப்புகின்றனர்.

    கொரோனா முதல் அலை பாதிப்பின்போது விமான பயணிகள் தவறான செல்போன் எண்களை கொடுத்து சென்றதால் முடிவில் 'பாசிட்டிவ்' வந்த பயணிகளை தொடர்பு கொண்டபோது தவறான எண் என தெரியவந்தது. 15 ஆயிரம் பயணிகள் தவறான தகவல் கொடுத்ததால் அவர்களை கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

    அதனால் பாஸ்போர்ட், ஆதார் கார்டுகளை அதிகாரிகளே ஆய்வு செய்து எண்களை குறித்து வைக்கின்றனர்.

    • விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது.
    • 4 பெண்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர்.

    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் அதிக அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் இலங்கையில் இருந்து வந்த விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த விமலா ராணி (வயது 30), ஜுவானி (28) உள்பட 3 பெண்களும், தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண் என 4 பெண்களை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர்.

    அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். 4 பேரிடம் இருந்து ரூ.61 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 330 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக 4 பெண்களை கைது செய்து தங்க கடத்தல் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியுரிமை, சுங்கச்சோதனை, பாதுகாப்பு சோதனை, மருத்துவ சோதனை அனைத்து பிரிவுகளிலும் சிறப்பு தனி கவுண்டா்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.
    சா்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜுலை 27-ந் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி வரை தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது.

    இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2,500 க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா்.

    இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் வெளி நாட்டு வீரா், வீராங்கனைகள் அனைவரும் தங்கள் நாடுகளிலிருந்து விமானங்களில் சென்னை விமானநிலையம் வந்து அவா்கள் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்கின்றனா்.

    அதைப்போல் போட்டிகள் முடிந்து, தங்கள் நாடுகளுக்கு திரும்பும் போதும் சென்னை விமான நிலையம் வழியாகவே செல்கின்றனா். அதைப்போல் போட்டிகளை காண ஏராளமான வெளிநாட்டு பாா்வையாளா்களும் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

    அதனால் சென்னை விமானநிலையத்தில் ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் வெளிநாட்டவா், குறிப்பாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக வருபவா்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே அவா்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை சென்னை விமானநிலையம் உள்நாடு, சா்வதேச முணையங்களில் செய்ய இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு எடுத்துள்ளது.

    விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகள், பார்வையாளர்கள், சிரமம் இல்லாமல் சோதனைகளை விரைந்து முடித்து வெளியேற, உரிய வசதிகள் செய்துத்தர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

    அதற்காக குடியுரிமை, சுங்கச்சோதனை, பாதுகாப்பு சோதனை, மருத்துவ சோதனை அனைத்து பிரிவுகளிலும் சிறப்பு தனி கவுண்டா்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

    இதுகுறித்து சென்னை விமானநிலையத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் விமான நிலைய உயா் அதி காரிகள், விமானநிறுவன அதிகாரிகள், குடியுரிமை அதிகாரிகள், சுங்கத் துறை அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், தமிழக போலீஸ் அதிகாரிகள், உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    முதல் கட்ட கூட்டத்தில், பல்வேறு அதிகாரிகள் பல விதமான ஆலோசனைகளை தெரிவித்தனர். அப்போது எந்தெந்த பகுதிகளில் எத்தனை சிறப்பு கவுண்டா்கள் அமைப்பது என்று ஆலோசனை நடந்தது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது, விமான நிலையத்திற்கு வரும் பயணியர், சிக்கல்கள் எதிர்கொள்வதை தவிர்க்கவும், விரைவாக வெளி யேறவும் உரிய நட வடிக்கைகள் எடுக்க திட்ட மிடப்பட்டுள்ளது என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையும் படியுங்கள்.. சென்னையில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
    கொழும்பிலிருந்து சென்னை வந்த மூன்று பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    சென்னை:

    பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவதை தடுக்கும் நடவடிக்கையில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், கொழும்பிலிருந்து சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய மூன்று பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்

    அப்போது அவர்கள் உள்ளாடைகளில் தங்கக் கட்டி (24 காரட்) தங்கச் சங்கிலி (22 காரட் ), தங்க நகைகள் ( 24 காரட்) ஆகியவற்றைத்  மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    இவற்றின் மொத்த எடை 1.6 கிலோகிராம் என்றும், அவற்றின் மதிப்பு ரூ.72.4 லட்சம் என்றும் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்து.

    தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக புளோரிடா பத்மஜோதி, நோனா பரினா ஆகிய இலங்கைப் பயணிகள் கைது செய்யப்பட்டனர்.
    ×