search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car crash"

    சீனாவில் இன்று காரை ஓட்டி வந்த நபர், சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது காரை மோதச் செய்து நடத்திய திடீர் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். #ChinaAttack #ChinaCarCrash
    பீஜிங்:

    சீனாவின் ஹூபே மாகாணம் ஜாவ்யாங் நகரில் இன்று அதிகாலை பொதுமக்கள் சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார், திடீரென பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பொதுமக்கள் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தனர். அப்போதும் காரை ஓட்டிய நபர், காரை நிறுத்தவில்லை.

    இதையடுத்து போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் காருக்குள் இருந்த நபர் கொல்லப்பட்டார்.  கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சீனாவில், தனிப்பட்ட ஆத்திரம் மற்றும் கோபத்தை பொதுமக்கள் மீது காட்டும் போக்கு சமீப ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு நபர் சொகுசு காரை பொதுமக்கள் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 43 பேர் காயமடைந்தனர். சில நபர்கள் தங்கள் தனிப்பட்ட ஆத்திரம் மற்றும் மனரீதியிலான அழுத்தங்களால் கத்தி தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.  இவர்கள் குறிப்பாக பள்ளிக்கூடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் சென்று தாக்குதல் நடத்துகின்றனர். #ChinaAttack #ChinaCarCrash
    இங்கிலாந்து இளவரசர் பிலிப் கார் விபத்தை ஏற்படுத்தியதால், தனது டிரைவிங் லைசென்சை திருப்பி அளித்துள்ளார். #PrincePhilip
    லண்டன்:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (97), ஓட்டிச் சென்ற கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
     
    இதில் இளவரசர் பிலிப் காயமின்றி உயிர் தப்பியபோதும், விபத்தில் சிக்கிய மற்றொரு காரை ஓட்டிச்சென்ற பெண்ணின் மணிக்கட்டு உடைந்தது. அவரது தோழியும் காயம் அடைந்தார்.



    மணிக்கட்டு உடைந்த அந்த பெண், விபத்து தொடர்பாக இளவரசர் தன்னிடம் மன்னிப்பு கூட கேட்கவில்லை என வேதனை தெரிவித்ததோடு, இளவரசர் பிலிப் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் கூறினார். இதற்கிடையே, விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடம் இளவரசர் பிலிப் மன்னிப்பு கோரி கடிதம் எழுதினார். 

    இந்நிலையில், இளவரசர் பிலிப் நேற்று தனது டிரைவிங் லைசென்சை காவல் நிலையத்தில் திருப்பி அளித்துள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மணை தெரிவித்துள்ளது. #PrincePhilip
    கார் விபத்தில் காயம் அடைந்த பெண்ணிடம் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் மன்னிப்பு கோரினார். #PrincePhilip #ApologyLetter
    லண்டன்:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (வயது 97), ஓட்டி சென்ற கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் இளவரசர் பிலிப் காயமின்றி உயிர் தப்பியபோதும், விபத்தில் சிக்கிய மற்றொரு காரை ஓட்டிச்சென்ற பெண்ணின் மணிக்கட்டு உடைந்தது. அவரது தோழியும் காயம் அடைந்தார்.

    மணிக்கட்டு உடைந்த அந்த பெண், விபத்து தொடர்பாக இளவரசர் தன்னிடம் மன்னிப்பு கூட கேட்கவில்லை என வேதனை தெரிவித்ததோடு, இளவரசர் பிலிப் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் கூறினார்.

    இந்த நிலையில், விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடம் இளவரசர் பிலிப் மன்னிப்பு கோரினார். இது தொடர்பாக இளவரசர் பிலிப் எழுதிய கடிதத்தில், “விபத்தில் என்னுடைய பங்குக்காக நான் மன்னிப்பு கோருகிறேன். விபத்தின் விளைவுகளை எண்ணி நான் மிகவும் வருந்துகிறேன். மோசமான இந்த அனுபவத்தில் இருந்து நீங்கள் விரைவில் மீண்டு வர பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.  #PrincePhilip #ApologyLetter 
    பிரிட்டன் இளவரசர் பிலிப் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் பெண் படுகாயம் அடைந்ததை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. #PrincePhilip
    லண்டன்:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (வயது 97) கடந்த 17-ந் தேதி கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சான்ட்ரிங்காம் எஸ்டேட்டுக்கு தனது சொகுசு காரில் சென்றபோது, அவரது கார், மற்றொரு கார் மீது மோதியது.

    இதில் இளவரசர் பிலிப் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால் விபத்தில் சிக்கிய மற்றொரு காரை ஓட்டிச்சென்ற பெண்ணின் மணிக்கட்டு உடைந்தது.

    அவரது தோழியும் காயம் அடைந்தார். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    மணிக்கட்டு உடைந்த அந்த பெண், விபத்து தொடர்பாக இளவரசர் தன்னிடம் மன்னிப்பு கூட கேட்கவில்லை என வேதனை தெரிவித்தார்.

    இந்த நிலையில் கார் விபத்தில் இளவரசர் பிலிப் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என அந்த பெண் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அந்த பெண் இளவரசர் பிலிப் மீது வழக்கு தொடர்வாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. #PrincePhilip
    பிரிட்டன் இளவரசர் பிலிப் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இளவரசர் பிலிப் காயமின்றி தப்பினார். #PrincePhilip
    லண்டன்:

    பிரிட்டன் ராணி இரண்டாவது எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (வயது 97) ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதிர்ஷடவசமாக காயமின்றி இளவரசர் பிலிப் தப்பினார். கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சண்டிங்கம் எஸ்டேட் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

    இளவரசர் பிலிப் தனது காரை பிரதான சாலைக்கு எடுத்து வரும் போது, அவ்வழியாக வந்த மற்றொரு கார் மோதியதாக தெரிகிறது. விபத்து ஏற்பட்ட மற்றொரு காரில் இருந்த இருவர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினர். லேண்ட்ரோவர் கார் சாலையின் ஓரத்தில் ஒருபக்கமாக கவிழ்ந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.



    விபத்து நடைபெற்றதை பக்கிங்ஹாம் அரண்மனையும் உறுதி செய்துள்ளது. இளவரசருக்கு இந்த விபத்தில் எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2016 ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மனைவி மிட்செல் ஒபாமாவுடன் சுற்றுப்பயணம் வருகை தந்தார். அப்போது இளவரசர் பிலிப், இருவரையும் தனது காரில் அவரே ஓட்டிச்சென்று மதிய விருந்துக்கு அழைத்துச்சென்றது குறிப்பிடத்தக்கது. #PrincePhilip
    துருக்கி நாட்டில் கார் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. #TurkeyCarAccident
    இஸ்தான்புல்:

    துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள தெக்ரிடாக் மாநிலத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலைதடுமாறிய கார் சாலையில் கவிழ்ந்து விழுந்தது.

    இந்த விபத்தில் காரில் இருந்த குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.

    தகவல் அறிந்து மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அங்கிருந்து 8 உடல்களை மீட்டனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    துருக்கியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார்  விசாரித்து வருகின்றனர். #TurkeyCarAccident
    பீகார் மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்.


    பாட்னா :

    பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டம் அருகே இருக்கும் சிகாந்த்ரா எனும் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் எதிரே வந்த லாரியில் மோதி 
    சொகுசு கார் விபத்துக்குள்ளானது. 

    இதில் காரில் பயணம் செய்த 6 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக நேற்று பிறந்த பெண் குழந்தை மட்டும் விபத்தில் இருந்து தப்பி உயிர் பிழைத்தது. 

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

    நிவாஸ் பாண்டே மற்றும் சீமா தேவி தம்பதியருக்கு நேற்று வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. எனவே, தாய் மற்றும் குழந்தைக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வாடகை கார் மூலம் உறவினர் சகிதம் பயணித்த போது இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

    இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    குஜராத் மாநிலத்தில் எதிரே வந்த லாரியின் மீது மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    அகமதாபாத் ::

    குஜராத் மாநிலம், மோர்பி மாவட்டத்தில் அமைந்துள்ள ராஜ்கோட்-மோர்பி தேசிய நெடுஞ்சாலையில் தங்காரா எனும் பகுதியில் எதிரே வந்த லாரியின் மீது சொகுசு கார் மோதி விபத்தில் சிக்கியது. இதனால் பற்றிய தீ வேகமாக கார் முழுதும் பரவியது.

    இதில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
    தஞ்சையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் டி.ஆர்.ஓ. டபேதார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஆர்.டி.ஓ.வாக பணியாற்றுபவர் சுரேஷ். இவரது டபேதாராக பணியாற்றியவர் ஆறுமுகம் (வயது 53).இவர் தஞ்சை பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 18-ந் தேதி இவர் மோட்டார் சைக்கிளில் புதிய பஸ் ஸ்டாண்ட் நோக்கி சென்றார். குழந்தை ஏசு கோயில் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது. இதில் தூக்கி வீசியதில் படுகாயம் அடைந்த டபேதார் ஆறுமுகம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுபற்றி தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குற்றாலத்தில் மரத்தில் கார் மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    தென்காசி:

    தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்தவர் பிரபு. இவர் தனது குடும்பத்துடன் குற்றாலத்திற்கு குளிப்பதற்காக தனது காரில் சென்றார். காரை புதுக்கோட்டையை சேர்ந்த சக்திவேல் (வயது 30) என்பவர் ஓட்டி சென்றார். 

    இந்நிலையில் இன்று காலை 4 மணிக்கு கார் பழைய குற்றாலம் தனியார் விடுதி அருகே வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த மரத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த  டிரைவர் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த பிரபு, ஒரு பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த குற்றாலம் இன்ஸ் பெக்டர் சுரேஷ், சப்- இன்ஸ்பெக்டர் மாதவன் ஆகியோர் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். மேலும் பலியான சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி:

    தருமபுரியை அடுத்த கடகத்தூர் பகுதியை சேர்ந்தவர் நஞ்சப்பன் (வயது45). தொழிலாளியான இவர் நேற்றிரவு தருமபுரியில் இருந்து கடகத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கடத்தூர் பிரிவு சாலையில் வந்த போது பாப்பாரப்பட்டி-தருமபுரி நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நஞ்சப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற நஞ்சப்பன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தருமபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
    சண்டிகர் :

    பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே இருக்கும் கால்சியான் எனும் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோரம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஒரு லாரி நின்றுகொண்டிருந்தது. அப்போது, இமாச்சலப்பிரதேசத்தில் இருந்து டெல்லி நோக்கி பயணித்த சொகுசு கார், இந்த லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.

    இதில், காரில் பயணித்த 8 பேரில் 7 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 3 வயது குழந்தை மட்டும் விபத்திலிருந்து தப்பி உயிர் பிழைத்தது.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×