என் மலர்

  நீங்கள் தேடியது "driving licence"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்து இளவரசர் பிலிப் கார் விபத்தை ஏற்படுத்தியதால், தனது டிரைவிங் லைசென்சை திருப்பி அளித்துள்ளார். #PrincePhilip
  லண்டன்:

  இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (97), ஓட்டிச் சென்ற கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
   
  இதில் இளவரசர் பிலிப் காயமின்றி உயிர் தப்பியபோதும், விபத்தில் சிக்கிய மற்றொரு காரை ஓட்டிச்சென்ற பெண்ணின் மணிக்கட்டு உடைந்தது. அவரது தோழியும் காயம் அடைந்தார்.  மணிக்கட்டு உடைந்த அந்த பெண், விபத்து தொடர்பாக இளவரசர் தன்னிடம் மன்னிப்பு கூட கேட்கவில்லை என வேதனை தெரிவித்ததோடு, இளவரசர் பிலிப் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் கூறினார். இதற்கிடையே, விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடம் இளவரசர் பிலிப் மன்னிப்பு கோரி கடிதம் எழுதினார். 

  இந்நிலையில், இளவரசர் பிலிப் நேற்று தனது டிரைவிங் லைசென்சை காவல் நிலையத்தில் திருப்பி அளித்துள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மணை தெரிவித்துள்ளது. #PrincePhilip
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விரைவில் ஆதார் எண்ணுடன் வாகன ஓட்டுனர் உரிமத்தையும் இணைப்பதற்காக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது. #Aadhaar #Drivinglicence
  பக்வாரா:

  106-வது இந்திய அறிவியல் மாநாடு பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் நடைபெற்று வருகிறது.

  இதில் பங்கேற்று மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:-

  ஆதார் எண் திட்டம் கொண்டு வரப்பட்டதால் மக்களுக்கு பல பயன்கள் ஏற்பட்டுள்ளன. விரைவில் ஆதார் எண்ணுடன் வாகன ஓட்டுனர் உரிமத்தையும் (லைசென்ஸ்) இணைப்பதற்காக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது.

  தற்போது விபத்துக்களை ஏற்படுத்தும் நபர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி விடுகிறார்கள். இதைத் தொடர்ந்து மாற்று லைசென்சையும் அவர்கள் பெற்று விடுகிறார்கள். இதனால் தண்டனையில் இருந்து எளிதில் தப்பி விடுகிறார்கள்.

  இந்த மோசடிகளை தடுக்க ஆதார் எண்ணுடன், டிரைவிங் லைசென்ஸ் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.  சம்பந்தப்பட்ட நபர் பெயரை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அவரது விரல் ரேகை, கண் கருவிழி பதிவுகள் உள்ளிட்டவற்றை மாற்ற முடியாது. புதிய உரிமம் பெறும்போது கம்ப்யூட்டர் எச்சரிக்கும். எனவே ஆதார்-லைசென்ஸ் உரிமம் இணைப்பு அவசியமாகும்.

  இதுவரை 127 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டம் கொண்டு வந்து திறம்பட செயலாற்றி வருகிறது.

  இவ்வாறு அவர் பேசினார். #Aadhaar #Drivinglicence

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பயணத்துக்கான அடையாள அட்டையாக டிஜிட்டல் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சை காட்டி பொதுமக்கள் பயணிக்கலாம் என ரெயில்வே அறிவித்து உள்ளது. #Railway #DigigalAadhaar
  புதுடெல்லி:

  ரெயில் பயணிகள் மத்திய-மாநில அரசுகள் வழங்கிய அசல் அடையாள அட்டைகளில் ஒன்றை பயணத்தின் போது வைத்திருக்க வேண்டும். அதன்படி ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அட்டைகள் ஏற்கப்படுகிறது. இதனால் பயணிகளின் ஒரிஜினல் அட்டைகள் சில நேரங்களில் தொலைந்து விடும் வாய்ப்பு ஏற்படுகிறது.

  எனவே இதை தடுப்பதற்காக டிஜிட்டல் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சை காட்டி பயணம் செய்யலாம் என ரெயில்வே அறிவித்து உள்ளது. மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட இணையபெட்டகம் (டிஜிலாக்கர்) செயலியில் சேமிக்கப்பட்டு உள்ள டிஜிட்டல் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சை காட்டி பொதுமக்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

  இது தொடர்பாக அனைத்து மண்டல முதன்மை தலைமை வணிக மேலாளர்களுக்கு ரெயில்வேத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘டிஜிலாக்கர் கணக்கில் ‘வழங்கப்பட்ட ஆவணங்கள்’ பிரிவில் உள்ள டிஜிட்டல் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சின் மென்நகல்களை ஒரு பயணி காட்டினால், அதை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளலாம். அதே நேரம் ‘பதிவேற்றப்பட்ட ஆவணங்கள்’ பிரிவில் இருக்கும் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது’ என கூறப்பட்டு உள்ளது.  #Railway #DigigalAadhaar #tamilnews 
  ×